Skip to main content

Posts

Showing posts from May, 2021

Featured Post

மாடித்தோட்டத்துக்கு ஏற்ற மாம்பழ ரகங்கள் எவை, வளர்ப்பது எப்படி?

மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்துக்கு மக்களிடத்தில் எப்போதும் தாளாத ஈர்ப்பு உண்டு. இதோ, இந்த சீசனுக்கு வழக்கம்போல மாந்தோப்புகளில் மாம்பூக்கள், பிஞ்சுகளாக மாறி, காய்களாக உருவெடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், எல்லோருக்குமே தோட்டத்தில் மாம்பழங்களை விளைவித்துச் சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதனால், சிலர் மாடித்தோட்டங்களில் மாம்பழங்களை விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலர் வளர்த்து வெற்றியும் பெற்றிருக்கின்றனர். அந்த வகையில், மாடித்தோட்டங்களில் என்ன விதமான மாம்பழங்களை விளைவிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம் . இந்த ரகங்கள் எல்லாம் சிறப்பு! ``இந்தியாவில் கிட்டத்தட்ட 1,000 மாம்பழ ரகங்கள் உள்ளன. இவற்றில் வணிக ரீதியாக 20 ரகங்கள் மட்டுமே அதிகமாக வளர்க்கப்படுகின்றன. வட இந்தியாவில் தஷேஹரி, லாங்கரா, பாம்பே கிரீன் வகைகள்; தென் இந்தியாவில் பங்கனப்பள்ளி, நீலம், காலாபாடி, ருமானி மற்றும் மல்கோவா வகைகள்; மேற்கு இந்தியாவில் அல்போன்சா, கேசர், மான்குராட், வன்ரான், லாங்க்ரா வகைகள்; கிழக்கு இந்தியாவில் சர்தாலு, சௌசா, மால்டா போன்ற வகைகள் வ

ஏன் விதை பரிசோதனை செய்யவேண்டும்

Why Seed Testing இன்று உணவு உற்பத்தியில்‌ தன்னிறைவு பெற்றுள்ளோம்‌ எனில்‌ அதற்கு காரணம்‌ உழவர்களுக்கு நல்ல தரமான விதையை உரிய காலத்தில்‌ விநியோகித்ததே என்று கூறினால்‌அது மிகையாகாது. நல்ல தரமான விதையானது இந்தியஅரசால்‌ நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விதை சான்றளிப்புத்‌தரத்திற்கு ஏற்ற புறத்தூய்மை, இனத்தூய்மை, முளைப்புத்திறன்‌ மற்றும்‌ விதையின்‌ நலத்துடன்‌ கூடிய வீரியம்‌ கொண்டிருக்கவேண்டும்‌.  விதை உற்பத்தி விநியோகம்‌ போன்ற முக்கியமான திட்டத்தில்‌ விதைப்பரிசோதனை என்பது தவிர்க்க முடியாத ஒன்‌றாகும்‌. உற்பத்தி செய்யப்பட்ட விதைகள்‌ நல்ல தரமான விதைகளா என்பதைக்‌ கண்டறிய மேற்கொள்ளப்படும்‌ உத்திகளே விதைப்பரிசோதனையாகும்‌. விதைப்பரிசோதனை என்பது விதைகளின்‌ தரத்தை விஞ்ஞான பூர்வமாகத்‌ தெரிந்து கொள்ளஉதவுவதுடன்‌ உற்பத்தி செய்யப்பட்ட விதை தரமானதா என்றுகண்டறியவும்‌ உதவுகின்றது. தரமான விதைகளின்‌ பயன்பாடு 15 - 20 சதம்‌ அதிகமான விளைச்சலுக்கு வழிவகுக்கின்றது. விதைப்பரிசோதனையின்‌ பயன்கள்‌ 1. விதைப்பதற்கு உதவியாக விதைகளின்‌ தரம்‌ நிர்ணயிக்கப்‌படுகிறது. 2. விதைத்தரத்தில்‌ ஏற்படும்‌ பிரச்சனைகளையும்‌, அதற்கு

தக்காளியை வீணாக்காமல் எப்படி உலர் பழத்துண்டுகள் தயாரிக்கலாம்

Tomato cultivation in india - tomato value-added -dry fruit tomato  100 க்கும் மேற்பட்ட விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த வாட்ஸ் ஆப் குரூப் இணைந்து பயன்பெறுங்கள் Click Here  நம்‌ உணவில்‌ அன்றாடம்‌ பயன்படுத்தக்கூடிய காய்கறிகளில்‌ தக்காளி முக்கிய பங்குவகிக்கிறது. தக்காளி இல்லாமல்‌ குழம்பு என்பது சாத்தியமற்றது. அப்படிபட்ட தக்காளி அதிகமாக கிடைக்கும்‌ காலங்களில்‌ ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு கூட விற்க முடியாமல்‌ விவசாயிகள்‌ கீழே கொட்டும்‌ அவலம்‌ இன்று வரை தொடர்கிறது. இந்த நிலை மாற நம் விவசாயிகளே தக்காளியிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுகள்‌ தயாரித்து விற்கலாம்‌. நம்‌ அரசாங்கமும்‌ வேளாண்‌ வணிகத்துறை மூலம்‌ நிறைய உழவர்‌ உற்பத்தியாளர்‌ குழுக்களை உருவாக்கி விவசாயிகளையே வியாபாரிகளாக மாற்றும்‌ முயற்சியில்‌ ஈடுபட்ட வருகின்றது. இம்மாதிரியான குழுக்கள்‌ தக்காளியிலிருந்து மற்றும்‌ மதிப்பூட்டப்பட்ட உணவுகள்‌  தயாரித்து விற்று இலாபம்‌ பெறலாம்‌. தக்காளியிலிருந்து சாஸ் மற்றும் ஊறுகாய் தயாரிக்கலாம் என்றாலும் உலர் தக்காளி பழ துண்டுகள் தயாரித்தால் நீங்கள் தக்காளி பழமாகவே நான்கு மாதங்களுக்கு வைத்திருக்கலாம்

வாழை ஏன் அடிப்பகுதியில் வெடிக்கிறது

Why the banana explodes at the base கால்நடை மற்றும்  விவசாயம் சார்ந்த 100 மேற்பட்ட  வாட்ஸ்அப் குழு உள்ளன   click here   இதறகு முக்கிய கரணம் என்றால் அது வெப்ப நிலை மாற்றம்தான் எங்கே அல்லது எந்த பகுதியில் அதிகமாக வெப்பம் அதிகமாக இருக்கிறதோ அங்கே வாழையின் அடிப்பகுதி வெடிக்கும் . இப்படி அடியில் வெடிப்பது பாக்கு மரம் , வாழை மற்றும் மென்மையான அடிப்பகுதி கொண்ட மரங்களில் அடிப்பகுதியில் வெடிப்பு வரும் .  அதாவது மதியநேரத்து வெயில் 1 மணி முத்துல 4 மணிவரை கடுமையாக இருக்கும் அந்த நேரத்தில் யு வி கதிர்களின் தாக்கம் அதிகம் இருக்கும் இதனால் வாழையின் அடிப்பகுதி கிழியும் கிழிந்த இடத்தில் பூஞ்சை தொற்று உண்டாகி வெடிப்பு பெரிதாகும்  இதனை கட்டுப்படுத்த இலைகள் பெருகுகிற மாதிரியான அமைப்பில் நாம் வளர்த்திருக்க வேண்டும் . தரையில் ஊடு பயிர் போடலாம் . இதை உடனடியாக செய்யமுடியாது . எனவே முதலில் தண்ணீர் அதிகம் இருக்கிற மாதிரி கொடுக்கவேண்டும் .   TAMIL NADU AGRICULTURE CONTACTS விவசாயம் விதை மற்றும் கன்றுகள் ,உயிர் உரங்கள் , வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள் கிடைக்கும் இடங்கள் பற்றிய விவரங்கள்