Skip to main content

Posts

Showing posts with the label fruits

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...

வாழை ஏன் அடிப்பகுதியில் வெடிக்கிறது

Why the banana explodes at the base கால்நடை மற்றும்  விவசாயம் சார்ந்த 100 மேற்பட்ட  வாட்ஸ்அப் குழு உள்ளன   click here   இதறகு முக்கிய கரணம் என்றால் அது வெப்ப நிலை மாற்றம்தான் எங்கே அல்லது எந்த பகுதியில் அதிகமாக வெப்பம் அதிகமாக இருக்கிறதோ அங்கே வாழையின் அடிப்பகுதி வெடிக்கும் . இப்படி அடியில் வெடிப்பது பாக்கு மரம் , வாழை மற்றும் மென்மையான அடிப்பகுதி கொண்ட மரங்களில் அடிப்பகுதியில் வெடிப்பு வரும் .  அதாவது மதியநேரத்து வெயில் 1 மணி முத்துல 4 மணிவரை கடுமையாக இருக்கும் அந்த நேரத்தில் யு வி கதிர்களின் தாக்கம் அதிகம் இருக்கும் இதனால் வாழையின் அடிப்பகுதி கிழியும் கிழிந்த இடத்தில் பூஞ்சை தொற்று உண்டாகி வெடிப்பு பெரிதாகும்  இதனை கட்டுப்படுத்த இலைகள் பெருகுகிற மாதிரியான அமைப்பில் நாம் வளர்த்திருக்க வேண்டும் . தரையில் ஊடு பயிர் போடலாம் . இதை உடனடியாக செய்யமுடியாது . எனவே முதலில் தண்ணீர் அதிகம் இருக்கிற மாதிரி கொடுக்கவேண்டும் .   TAMIL NADU AGRICULTURE CONTACTS விவசாயம் விதை மற்றும் கன்றுகள் ,உயிர் உரங்கள் , வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள் கி...

வாழையில் இலை சாகுபடிக்கு என்ன இயற்கை உரங்கள் கொடுக்கலாம்

Organic fertilizer for leaf banana cultivation வாழை பொறுத்தவரை காய்கள் மற்றும் பழங்கள் மட்டும் வருமானத்தை கொடுப்பதில்லை சரியாக திட்ட மிட்டால் இலையும் நல்ல வருமானத்தை கொடுக்கும் . இலைக்காக  பயிரிட படும் ரகங்கள் என்று பார்த்தால் பூவன் சிறந்தது அடுத்ததாக கற்பூரவள்ளி மற்றும் மொந்தன் வாழை ரகங்களை இலைக்காக பயிர்செய்யலாம் . வாழை பற்றிய மற்ற கட்டுரைகள் Click Here  வாழை இலைக்காக பயிர் செய்யும் போது மூன்று விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். காற்று இலையையோ அல்லது மரத்தையோ சுலபமாக சாய்க்க கூடியது . முடிந்த அளவு அதிக கற்று அடிக்கும் பகுதிகளில் தவிர்ப்பது நல்லது . காற்று தடுப்பாக வரப்பு ஓரங்களில் உள்வரிசையில்  அகத்தி , கிளரிசிடியா போன்ற மரங்களையும் வெளி வரிசையில் சவுக்கு , யூக்கலிப்டஸ் மரங்களை நடலாம் . இடைவெளி  இலைகள் நன்றாக விரிவடைந்து வளர சூரிய ஒளி முக்கியம் எனவே வாழையை நெருக்கமாக நடாமல் தேவையான இடைவெளி விட்டு நடலாம்  இயற்கை உரங்கள்  இலைக்காகத்தான் நாம் வாழை பயிர் செய்கிறோம் என்றால் தழை சத்துதான் மிக முக்கியம் மற்றும் இலை நன்றாக பிடித்து வளர வேண்டுமென்றால் கால்சியம் ச...

எலுமிச்சையில் துரு நோய்

Rust disease in lemons துரு நோய் என்பது பூஞ்சைகளை பொதுவா நாம் கவனிக்காமல் விடும்பொழுது அதோட அடுத்த கட்டம் இந்த துரு நோய் எலுமிச்சையாக இருந்தாலும் மற்ற பயிர்களாக இருந்தாலும் சரி கொஞ்சம் அதிக பாதிப்பை ஏற்படுத்த கூடியது . பூஞ்சைலிருந்து சின்ன சின்ன துகள்கள் (spores ) அடுத்து அடுத்து பரவும் பொழுது பெரிய அளவு அடுத்த பாதிப்பை ஏற்படுத்தும் . 1) இதை கட்டுப்படுத்த மாதம் ஒரு முறை சூடோமோனஸ் தெளிக்கவேண்டும்  2) சூடோமோனஸ் தரைவழி 10 மில்லி தண்ணீரில் கலந்து கொடுக்கவேண்டும் . இது இரண்டையும் செய்தாலே பிரச்சனைகள் அதிகம் வராது . 3) இலைகள்  மிக நெருக்கமாக இருந்தால் அதாவது சூரிய ஒளி போக முடியாத அளவிற்கு இலைகள் நிறைய இருந்தால் உள்ளே உள்ள தட்ப வெப்ப நிலை குறைந்து இந்த மாதிரியான  துரு நோய் வர வாய்ப்புள்ளது . 4) தேவை இல்லாத இலைகள் மற்றும் கிளைகளை எடுத்துவிடலாம்  5) எலுமிச்சை வீட்டில் வளர்த்தாலும் அடிப்படையில் அது ஒரு காட்டு செடி அது எப்படி இருக்கவேண்டுமென்றால் கொஞ்சம் இலைகள் கிளைகள் கம்மியாக , கம்மியாக என்பதை விட ரொம்ப கொழு கொழுன்னு இருக்க கூடாது    எலுமிச்சை செட...

பலா மரம் பூஞ்சண நோய் கட்டுப்பாடு

Jackfruit fungal disease control பலா மரம் வளர்ப்பில் சில விஷயங்களை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும் . மழை பெய்யும் மாதங்கள் அதாவது ஆகஸ்ட் , செப்டெம்பர் அந்த காலகட்டத்திலும் ஜனவரி 15 பின் உள்ள மாதங்களிலும் மாதம் ஒரு முறையென இரண்டுதடவை 10 லிட்டருக்கு 50 மில்லி சூடோமோனஸ் கலந்து மரத்தை மேலிருந்து கீழ் வரை நன்றாக நனைத்து தெளிக்கவேண்டும் . பொதுவா இப்படி தெளிக்கும்போது பூஞ்சி தொற்று அகன்று , காம்புகள் வழியா பழங்களில் நகர்வது தடுப்பதற்கு ஒருவாய்ப்பாக  இருக்கும் , ஆகவே சூடோமோனஸ் , விரிடி அல்லது பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் மூன்றில் ஏதாவது ஒன்றை கலந்து மரங்கள் மீது தெளிப்பது நல்லது . பழ ஈ காண பொறிகள் வைக்கவேண்டும் குறைந்தபச்சம் ஒரு ஏக்கருக்கு 10 என்ற எணிக்கையில் வைப்பது நல்லது அதை தவிர்த்து கருவாட்டு பொறி வைக்கலாம் அல்லது சூரியஒளியில் இயங்கக்கூடிய விளக்கு பொறி வைக்கலாம் . இப்படி வைக்கும்பொழுது நாம் பலா காய்களை  தாக்கக்கூடிய ஈக்களை கட்டுப்படுத்தலாம் . பூவிலிருந்து ஒரு ஜான் வரக்கூடிய காய்கள் அமைப்பில் பழ ஈக்கள் தாக்காமல் கட்டுப்படுத்திவிடலாம்  பலா சின்ன காயாக இருக்கும் பொழுது பெவேரிய பே...

வாழை பழத்தில் ஏன் கருப்பு வருகிறது அதற்க்கு என்ன காரணம். சரி செய்வது எப்படி?

What is the reason why the banana fruit is black? How to fix? தோல் மட்டுமே கருப்பாக இருந்தால் இரண்டு விதமான ஆய்வுகள் செய்யலாம் , தோலை உரிச்சு பாருங்கள் எந்தவித மாற்றம் இல்லாமல் தோல் மட்டுமே கருப்பாக இருந்தால் ஒரு விதமான பழத்தோட வெளிப்பாடு அதிகமான வெயில் மற்றும் பனிக்காலத்தில் பழத்தில் இருக்கக்கூடிய அந்த ஆசிட் இனிப்பு திரவமா வெளியில் வருவது கருப்பாக படியும் . அது என்ன சொல்ல வருதுன்னா அதிகமான இனிப்பு வெளி வந்து கருப்பாக படியும் . ஆந்த்ரோணக்ஸ் அப்படி இல்லாமல் கருப்பு மோல்டு மேல வந்து அதுமட்டுமில்லாமல் பழத்தை உரித்து பார்க்கும் பொழுது உள்ளே ஆரஞ்சு நிறத்திலோ , அல்லது மஞ்சள் நிறத்திலோ அல்லது கல்லு மாதிரியாகவோ அது "ஆந்த்ரோணக்ஸ்" என்னும் பூஞ்சையால்  வந்ததாகும்   இந்த நோய் கொஞ்சம் தீர்க்க முடியாத பிரச்சனைதான் . பூஞ்சாண நோய்களில் ஒரு பதினோரு வகை இருக்கு அதில் கடேசி வகை இந்த  ஆந்த்ரோணக்ஸ். சூடோமோனஸ் விரிடி வாழைமர சாகுபடியில் பழங்கள் உருவான உதாரணமா 11 மாத வாழை என்றால் 9வது மாதத்திலிருந்து பூஞ்சாண கொல்லிகளை தெளிப்பது நல்லது சூடோமோனஸ் விரிடி ,பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் , தெளிக்க வேண்டு...

எலுமிச்சை செடி வளர்ப்பதற்கான 10 ஆலோசனைகள்

10 Tips for Growing a Lemon plant  எல்லா பழங்களையும் சாப்பிடும் எலி இந்த ஒரு பழத்தை மட்டும் சாப்பிடமுடியாமல் மிச்சம் வைத்ததால் எலுமிச்சை  பெயர் வந்தது என ஒரு பேச்சு உண்டு . எலுமிச்சையில் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது , இது மனித உடம்புக்கு தேவையான முக்கியமான சத்தாகும் . பி காம்ப்ளெக்ஸ் மற்றும் flavonoids சத்துக்கள் நிறைந்துள்ளது .நாட்டுப்புற மருத்துவத்தில், தேனுடன் கலந்த எலுமிச்சை சாறு குடிப்பது சளி நோய்க்கு நல்லது என்று கூறப்படுகிறது. இந்தியாவில் காணப்படும் முக்கிய எலுமிச்சை ஜெனோவா, இனிப்பு எலுமிச்சை, லிஸ்பன், பொமலோ. நிறைய இடங்களில் வீட்டிலும் மாடியிலும் கூட தற்பொழுது வளர்க்கின்றனர்நிறைய விவசாயிகள் எலுமிச்சை சரியாக காய்ப்பு இல்லை , எதிர்ப்பார்த்த மகசூல் எடுக்க முடிவதில்லை என சொல்கின்றனர் . எலுமிச்சை வளர்வதற்க்கு சரியான மண் தேர்வு , வெளிச்சம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் எந்தவொரு பெரிய முதலீடும் இல்லாமல் அதிக லாபம் எடுக்கலாம் . எலுமிச்சையில் அதிக காய்கள் வர  1) தேவையான அடி உரம் போட வேண்டும் தொழு உரம் மட்டும் போடுவது பலன் அளிக்காது உடன் தேவையான அடிஉரங்கள் போடவேண்...

கொய்யா இயற்கை விவசாயம் - கொய்யா கன்று நடும் வழிமுறை

கொய்யா கன்று நடும்  வழிமுறை - Guava seedling planting method கொய்யா செடியின் ஆரம்பகால வேர்கள்   கொய்யா கன்று நடும்பொழுது கண்டிப்பாக 2*2*2 அடி குறைந்த பச்சமாக அதிகபச்சமாக 3*3*3 அடி எடுக்கலாம் சரளை மண்ணாக இருந்தால் அதிகமாக எடுப்பது நல்லது குழி ஆழமாக எடுப்பதும் நல்லது அப்படி எடுப்பதால் செடியின் ஆரம்பகால வேர்கள் நகர்ந்து போவதற்க்கு வசதியாக இருக்கும். குழி தோன்றிவிட்டு இரண்டு நாட்கள் வைத்திருந்து அந்த மண்ணை திருப்பி இழுத்து விடவேண்டும் ஒரு முக்கால் குழி மூட வேண்டும்  சூடோமோனஸ் 10 கிராம் இப்பொழுது கொய்யா நாற்றை நடுவில் வைத்துவிட்டு அந்த குழி 3*3*3 அடி இருக்கும் காய்ந்த நாடு மாட்டு சாணம் அதுகூட சூடோமோனஸ் 10 கிராம் அல்லது அசோஸ்பைரில்லும் 50 கிராம் பாஸ்போபாக்ட்ரியா 50 கிராம் 10 கிராம் சூடோமோனஸ் இத கலந்து குழியோட வெளி விளிம்புல சுத்திவர போட்டு இப்போ மண்ணை இழுத்துவிட்டு மண்ணை இறுக்கமாக அழுத்திவிடவேண்டும்  மிச்ச மண்ணை வைத்து  ஆறடி விட்டமுள்ள ஒரு வட்டப்பாத்தி போடலாம் . முடித்தவுடன் உயிர் தண்ணிர் கொடுக்க வேண்டும் மற்றும் மூணாவது நாளும் கொடுக்க வேண்டும் 

கொய்யா இயற்கை விவசாயம் - கொய்யா வளர்ப்பு உர மேலாண்மையும்

Guava Organic Agriculture Cultivation - Guava Cultivation organic Fertilizer Management கொய்யா செடி வளர்ப்பு முறை - Guava cultivation method கொய்யா செடியில் இலைகள் படத்தில் காட்டியது போல் இலைகள் மொற மொற என இருந்தால் நீர் பற்றாக்குறையாக இருக்கிறது  . அதாவது மண்ணிற்கு ஏற்றார்போல நீர் இல்லை  என்று அர்த்தம் . உணவு தயாரிக்கும் பொழுது வேரில் நீர் இல்லையென்றால் இப்படி கொய்யாவின் இலைகள் இப்படி தெரியும் . ஒருவேளை நீர் அதிகமாக கொடுத்தால் இலையை தொடும்பொழுது தோல் போன்று மெதுவாக இருக்கும் . எனவே கொய்யாவுக்கு தண்ணீர் தேவையான அளவு பார்த்து கொடுக்கவேண்டும். தழைச்சத்து அல்லது சாம்பல் சத்து அளவு -  Amount of nitrogen or ash கொய்யாவின் இலைகள் மஞ்சளாக இருந்தால் , தழைச்சத்து அல்லது சாம்பல் சத்து அளவு குறைவாக இருந்தால் அப்படி தோன்றும்  அதைக்கேற்றார் போல் இயற்கை விவசாய  இடுபொருட்கள் கொடுக்க வேண்டும் அப்டி கொடுத்தாலே சரியாகிவிடும் . ஒரு மரத்திற்கு இரண்டு லிட்டர் ஜீவாமிர்தம் . மேலும் 20 மில்லி மீன் அமிலம் , பஞ்சகாவிய , எது முடியுமோ அதை கொடுக்கலாம் . தெளிச்சு பத்து நாளைக்கு ஒரு முறை...

இயற்கை முறையில் தர்பூசணி சாகுபடியில் கவனிக்க வேண்டியவை

Things to look out for in watermelon cultivation Organically  தர்பூசணி - Watermelon தர்பூசணி ஊடுபயிராக 10 டன்னும் அதுவே தனிப்பயிராக 15 டன்னும் மகசூல் வரும் நிறைவான வருமானத்தை கொடுக்கக்கூடியது . கோடையில் அறுவடைக்கு வருவதுபோல் பயிரிட்டால் மேலும் நாள் வருமானம் கிடைக்கும் . தர்பூசணி ரகங்கள் -  Varieties of watermelon தர்பூசணி ரகங்கள் என்றுபார்த்தால் பூசா பேதனா, அம்ருத் அர்கா, மானிக், நியூ ஹாம்ப்ஷைர், மிட்ஜெட், சுகர் பேபி, அஷாஹ ஜயமாடோ, அர்கா ராஜஹன்ஸ், துர்காபுரா மீதா, கேசர், அர்கா போன்ற ரகங்கள் உள்ளன  தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரிய குளம் தர்பூசணி ரகம் உள்ளது இதை PKM -1 ரகம் என்றும் அழைக்கப்படுகிறது இது ஒரு அதிக மகசூல் தரக்கூடிய ரகமாகும்  இயற்கை முறையில் தர்பூசணி சாகுபடி 1. டிசம்பர் மாதம் கடைசி வாரம் முதல் ஜனவரி மாதம் கடைசி வாரம் வரை நடவு செய்யலாம். நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு 1.75 கிலோ விதைகள் தேவைப்படும். அந்த விதைகளை ஒரு கிலோவிற்கு 10 கிராம் சூடோமோனாஸ் மற்றும் 30 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் அரிசி வடிகட்டிய கஞ்சியுடன் கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து நடவு செய்யலாம். 2.நடவு வ...

கொய்யா இயற்கை விவசாயம் தைவான் பிங்க் கொய்யா பூச்சி கட்டுப்பாடு

Guava Natural Agriculture Taiwan Pink Guava Pest Control படத்தில் காட்டியது போல் பிரவுன் கலர் மற்றும் சைஸ் இல்லாமலும் உள்ளது. இயற்கை விவசாயமாக இருந்தாலும் செயற்கை விவசாயமாக இருந்தாலும் சரி பூச்சிகளை எதிர்த்து நம்மால் விவசாயம் செய்வது கடினமே . பூச்சி தாக்குதலுக்கு முன்பு சில  அடிப்படை விஷயங்களை செய்ய வேண்டும்  1) கருவாட்டு பொறி வாங்கி வைக்கவேண்டும் ஒரு ஏக்கருக்கு குறைந்தது 20 எண்ணிக்கையிலாவது கட்டி தொங்க விடவேண்டும். 2) சூரிய ஒளியில் இயங்கக்கூடிய விளக்கு பொறி வைக்க வேண்டும்  3) பழ ஈ கான  பொறிகள் வைக்கவேண்டும்   தாக்கிய பின்பு   1) கற்பூரக்கரைசல் அல்லது அக்னி அஸ்திரம் அல்லது வேப்பெண்ணை கரைசல் அல்லது பொன்னீம் கரைசல்  ஏதாவது ஒன்றை தெளிக்கவேண்டும்  2) பவேரியா பேசியானா தெளிக்கணும்  ஒருதடவை தெளித்தால் 7 மற்றும் 14 நாள் மீண்டும் ஒரு முறை கட்டாயம் தெளிக்க வேண்டும்  3) இதை தவிர்த்து சூடோமோனஸ் கொடுக்கவேண்டும்  இதெல்லாம் செய்யும்போது கொய்யா எந்தவித குறைபாடும் இல்லாமல் விற்பனைக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கு Smart Vivasayi

மா சாகுபடி - மா அடர் நடவு முறை

இந்த நடவு முறையை பொறுத்தவரை ஒரு புரிதலை நாம தெரிஞ்சு வச்சுக்கணும் இஸ்ரேல் நாட்டுல பார்த்திங்கன்னா அடர் நடவு வச்சுருக்காங்க, அதுல என்ன பண்ணுவாங்கனா மாட்டு காதுல டாக் அடுச்சமாதிரி ஓவுவொரு மரத்துக்கும் நம்பர் போட்டு வச்சிருப்பாங்க அந்த ஓவுவொரு நம்பருக்கும் என்ன கொடுத்துருக்கோம் நாள் வாரியா , வாரம் 14 நாட்களுக்கு மற்றும் மாதம் வாரியா என்ன கொடுத்தோம் அப்படிங்கிற கனக்க தினசரி கவனித்து அதுக்கு வேணுங்கிற இடு பொருளை கொடுத்துகொண்டே இருப்பார்கள் , தனி மரத்தை கவனிப்பாங்க . இந்த அடர் நடவு முறையில் ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனியா என்ன கொடுக்க முடியுமோ அத கொடுங்க உதாரணமாக ஜீவாமிர்தம் கொடுத்தால் தனி மரத்திற்கு குறைஞ்சபச்சம் ஒரு பயிருக்கு 2 லிட்டர் ஊத்திவிடனும். மீன் அமிலம் , பஞ்சகாவியா , ஈ .எம் கரைசல் , போன்றவற்றை குறைந்தது 20 மில்லி நீரில் கலந்து வேரில் ஊற்றிவிடவேண்டும் . அசோஸ் பைரில்லும் கொடுத்தால் 100 கிராம் , பாஸ்போ பாக்ட்ரியா 50 கிராம் கொடுக்கலாம் . இதை 12 மாதமும் கொடுக்கவேண்டும் . மண் மற்றும் நீர் பரிசோதனையும் கட்டாயம் செய்திருக்கவேண்டும் அதற்கேற்றாற்போல் அளவை கூட்டி குறைத்து கொடுக்கலாம். பூ...

கொய்யா சாகுபடியில் அதிக லாபம் பெறவேண்டுமா ? -அருமையான டிப்ஸ்

Want to get more profit from guava cultivation? -Fantastic tips நிலம்: நல்ல மண் பாங்கான இடம், சீரான தட்பவெப்பநிலை உள்ள பகுதியில் சாகுபடியாகும் கொய்யா மிகுந்த சுவையுடன் இருக்கும். கொய்யாவுக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை என்பதால், சாகுபடி பணியை குடும்பத்தினர் மட்டுமே மேற்கொள்ளலாம். இரகங்கள்: கொய்யாவில் லக்னோ-49, பனாரஸ் ரகங்கள் சாகுபடிக்கு உகந்தவை. லக்னோ-49 ரகம் பச்சைக் காயாக விற்கவும், பனாரஸ் பழமாக விற்கவும் தகுந்தவை. கொய்யா சாகுபடி தொழில் நுட்பம் (Guava Cultivation) முறையில் ஒரு மரத்தில் 50 கிலோ கொய்யா: சராசரியாக ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 50 கிலோ காய்கள் கிடைக்கும். ஒரு கிலோ ரூ. 15-க்கு குறையாமல் விலைபோகும். சில நேரம், அதிகபட்சமாக ரூ. 60 வரை விற்பனையாகும். சராசரியாக கிலோவுக்கு ரூ. 20 என்ற விகிதத்தில் கிடைக்கும். ஒரு மரத்துக்கு ரூ. 250 வரை செலவாகும். வடிகால் வசதி: வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளிலும் கொய்யா வளரும். மழைக்காலமான ஜூன்- ஜூலை மாதங்கள் நடவு செய்ய ஏற்றப் பருவம். செடிக்குச் செடி 8 அடி, வரிசைக்கு வரிசை 10 அடி என்ற அளவில் இடைவெளி விட்டு நடவேண்டும். 10 அடிக்கு 10 அடி இடைவெளி...