Ad Code

Ticker

6/recent/ticker-posts

எலுமிச்சை செடி வளர்ப்பதற்கான 10 ஆலோசனைகள்

10 Tips for Growing a Lemon plant 




எல்லா பழங்களையும் சாப்பிடும் எலி இந்த ஒரு பழத்தை மட்டும் சாப்பிடமுடியாமல் மிச்சம் வைத்ததால் எலுமிச்சை  பெயர் வந்தது என ஒரு பேச்சு உண்டு . எலுமிச்சையில் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது , இது மனித உடம்புக்கு தேவையான முக்கியமான சத்தாகும் . பி காம்ப்ளெக்ஸ் மற்றும் flavonoids சத்துக்கள் நிறைந்துள்ளது .நாட்டுப்புற மருத்துவத்தில், தேனுடன் கலந்த எலுமிச்சை சாறு குடிப்பது சளி நோய்க்கு நல்லது என்று கூறப்படுகிறது. இந்தியாவில் காணப்படும் முக்கிய எலுமிச்சை ஜெனோவா, இனிப்பு எலுமிச்சை, லிஸ்பன், பொமலோ. நிறைய இடங்களில் வீட்டிலும் மாடியிலும் கூட தற்பொழுது வளர்க்கின்றனர்நிறைய விவசாயிகள் எலுமிச்சை சரியாக காய்ப்பு இல்லை , எதிர்ப்பார்த்த மகசூல் எடுக்க முடிவதில்லை என சொல்கின்றனர் . எலுமிச்சை வளர்வதற்க்கு சரியான மண் தேர்வு , வெளிச்சம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் எந்தவொரு பெரிய முதலீடும் இல்லாமல் அதிக லாபம் எடுக்கலாம் .


எலுமிச்சையில் அதிக காய்கள் வர 


1) தேவையான அடி உரம் போட வேண்டும் தொழு உரம் மட்டும் போடுவது பலன் அளிக்காது உடன் தேவையான அடிஉரங்கள் போடவேண்டும்.

2) தழைசத்தும்  மணிச்சத்தும்  இடுவதால் நல்ல மகசூல் கிடைக்கும் 

3) மற்ற தாவரங்களுக்கு இடையில் ஊடுபயிராக ஒருபோதும் எலுமிச்சை பயிரிட வேண்டாம்.

4) மரத்துக்கு அதிக சூரிய ஒளி தேவைப்படும் , பூச்சி நோய் தாக்கம் இருந்தால் இயற்கை பூச்சி விரட்டிகளை பயன்படுத்தவும் , அதிக வெயில் அடிக்கும்பொழுது வாரத்திற்கு இரண்டுதடவை நீர் பாய்ச்சலாம் , அதே சமயம் அதிக நீர் தேங்காமலும் பார்த்துக்கொள்ளவும் .

5) ஒரு காய்ப்பு முடிந்தவுடன் கவாத்து செய்வது நல்லது 

6) ஆரோக்கியமற்ற கிளைகளை வெட்டிவிடவும் அதிலிருந்து புது கிளைகள் வரும் 

7) எலும்பு சத்தும் , பொட்டாஷ் எலுமிச்சையின்  வளர்ச்சிக்கு நன்கு உதவும் 

8) மரத்தை சுற்றி நன்கு குழி எடுக்கவேண்டும் இதனால் வேர்கள் நன்றாக ஊன்றி வளரும் 

9) பொதுவாக எலுமிச்சையில் பட்டர்பிளை புழு தாக்குதல் காணப்படும் 

10) வேப்பம் பூண்டு கரைசல் மூலம் இதனை நன்றாக கட்டுப்படுத்தலாம் இலை சுருட்டு புழுவை கட்டுப்படுத்தவும் இதனை தெளிக்கலாம் .  

பூக்கும் சமயத்தில் எலுமிச்சைக்கு இடவேண்டிய உரம் 



சாம்பல்  , தொழு உரம் மற்றும்  போன் மீல் எல்லாவற்றிலும் 1:1:1 என்ற அளவில் எடுத்து கொண்டு அதில் 2அரை கப் நீரை ஊற்ற வேண்டும் சின்ன செடியாக இருந்தால் 4 லிட்டர்நீரை இதனுடன் கலந்து  செடிக்கு ஊற்றலாம்  மற்ற பெரிய செடிகளுக்கு  வேரை சுற்றி ஊற்றி விட வேண்டும் .

Post a Comment

1 Comments

Smart vivasayi