Goats can be reared in five ways
இந்தியாவில் 97 சதவீத கிராமங்களில் அவசியம் வெள்ளாடு இருக்கும். வெள்ளாடு வளர்ப்புக்கு குறைந்த முதலீடு போதுமானது. விரைவில் வருமானம் தரக்கூடியது. வெள்ளாட்டுக் கறி எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது.
வெள்ளாட்டை ஐந்து முறைகளில் வளர்க்கலாம்
1. தானே மேய்ந்து வரும் சுய மேய்ச்சல் ( *Uncontrolled Grazing* )
2. கொட்டகையும் மேய்ச்சல் இணைந்த முறை ( *Semi Intensive* )
3. கயிறு கட்டி மேய்ச்சல் ( *Tatnering* )
4. கொட்டகை முறை வளர்ப்பு ( *Stall Fed System)*
5. ஆழ்கூள முறை வளர்ப்பு ( *Deep Litter System)*
1. சுய மேச்சல்
இதுதான் தமிழ்நாட்டில் இயல்புக்கு ஏற்ற வளர்ப்பு முறை அதிகமான ஆடுகளை இந்த முறையில்தான் வளர்க்கப்படுகின்றன. அதிகாலையில் பட்டியலில் இருந்து வெளியில் விடப்படும் ஆடுகள் காடு, மேடுகள் வயல்வெளிகளில் பரவலாக மேய்ச்சல் விடுபட்ட பட்டியில் அடைக்கபடும்.
2. கொட்டகையும் மேய்ச்சல் இணைந்த முறை
இந்த முறையில் பகல் நேரங்களில் மேய்ச்சல், இரவு நேரங்களில் கொட்டகையில் அடைத்து புல், உலர் தீவனம், அடர் தீவனம் கொடுக்கப்படும்.
3.கயிறு கட்டி மேய்ச்சல்
குறைந்த எண்ணிக்கையில் ஆடுகள் வளர்ப்பவர்களுக்கு இந்த முறை ஏற்றது. ஆடுகள் கயிறுகளால் கட்டப்பட்டு ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடப்படும்.
4. கொட்டகை முறை
இதனை பண்ணை வளர்ப்பு முறை என்றும் கூறலாம். கொட்டகை முறையில் ஆடுகளை வளர்ப்பதற்கு நல்ல காற்றோட்ட வசதி தேவை மற்றும் தண்ணீர் வசதி தேவைப்படும் கொட்டகை முறையில் வளர்க்கும் ஆடுகளுக்கு உலர் தீவனம் மற்றும் அடர் தீவனம் அதிகளவில் தேவைப்படும்.
5. ஆழ்கூள முறை
இந்த முறையில் வளர்க்கப்படும் ஆடுகளை சிறைச்சாலை அமைத்து வளர்ப்பது போன்றது. அந்த முறையில் கொட்டகை அமைக்கும் பொழுது கிழக்கு மேற்காக அமைக்கப்படும். ஆடுகள் நேரடியாக வெயிலில் பாதிக்கப்படாமல் இருக்கும்.



Comments
Post a Comment
Smart vivasayi