Skip to main content

Posts

Showing posts from January, 2022

You can easily set up a vegetable pandal in the terrace

மாடித்தோட்டத்தில் சுலபமாக காய்கறி பந்தல் அமைக்கலாம் . மாடித்தோட்டத்தில் நமக்கு , நமக்கு தேவையான காய்கறிகளை இயற்கை முறையில் விளைவித்து கொள்ளலாம் . மாடித்தோட்டத்தை பொறுத்தவரை கத்தரி , வெண்டை ,தக்காளி போன்ற செடி வகை பயிர்களையோ அல்லது கேரட் ,உருளை ,முள்ளங்கி போன்ற மண்ணுக்குள் அடியில் விளையும் பயிர்களைத்தான் அதிகம் பயிர் செய்வோம் . ஆனால் அவரை ,புடலை , பீர்க்கன் போன்ற கொடிவகை பயிர்களை நாம் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை . இதற்கு பெரும்பாலும் பணம் அதிகம் செலவாகும் என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால் நம்மால் குறைந்த செலவில் பந்தல் அமைத்து நம்மால் அதிகம் காய்கறிகள் எடுக்க முடியும் அதேசமயம் நமக்கு செடி வகை காய்கறிகளுக்கு பயிர் செய்ய இடம் கிடைக்கும் . நாம் இந்த கட்டுரையில் குறைந்த செலவில் எப்படி பந்தல் அமைக்கலாம் என்று பார்க்கலாம் . குறைந்த செலவில் பந்தல்  மாடி தோட்டமாக இருந்தாலும் சரி அல்லது வீட்டில் பின்புறமாக இருந்தாலும் சரி இரண்டு வகைகளில் நாம் காய்கறி பந்தல் அமைக்கலாம் . ஓன்று மூங்கில்  மற்றும் மண் பைகளை வைத்து தாற்காலிகமாக காய்கறி பந்தல் அமைக்கலாம் அல்லது இரும்பு பைப் (L ஆங்கில்

மருதாணி சாகுபடி சில ஆலோசனைகள்

மருதாணி சாகுபடி  மருதாணி நம் கைகளுக்கு அழகான சிகப்பு வண்ணத்தை கொடுக்க கூடியவை . கல்யாண வீடாக இருந்தாலும் சரி தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களாக இருந்தாலும் சரி நம் கைகளில் தவறாமல் இடம்பெற்றுவிடும் இந்த மருதாணி .  முக்கியமாக மருத்துவத்திற்கு மருதாணி பயன்படுத்தப்படுகிறது . உடலில் ஏற்படும் கருந்தேமல்லை குறைக்கும் , உடல் வெப்பத்தை குறைக்கும் , நகங்களில் எந்தவித நோயும் வராமல் தடுக்கும். முடிகளுக்கு டை அடிக்க மற்றும் வாசனை திரவியம் தயாரிக்க மருதாணி பயன்படுத்தப்படுகிறது . நாம் இந்த கட்டுரையில் மருதாணி சாகுபடி பற்றி பார்ப்போம் . ரகங்கள்  மருதாணியை பொறுத்தவரை அணைத்து வகையான நிலங்களிலும் வளரக்கூடியது . இந்தியாவை பொறுத்தவரை குஜராத் , மத்தியப்பிரதேஷ் , பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் அதிகம் வியாபாரரீதியாக   வளர்க்கப்படுகின்றன . MH 1,MH 2 போன்ற மருதாணி ரகங்கள் அதிகம் வளர்க்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யப்படுகின்றன . ஆனால் தமிழ் நாட்டை பொறுத்தவரை வியாபாரத்திற்காக வளர்ப்பது மிக குறைவு . அதேசமயம் தமிழ்நாட்டில் 100க்கு 20 முதல் 30 வீடுகளில் மருதாணி செடி வளர்க்கப்படுகிற