Ad Code

Ticker

6/recent/ticker-posts

மருதாணி சாகுபடி சில ஆலோசனைகள்

மருதாணி சாகுபடி 



மருதாணி நம் கைகளுக்கு அழகான சிகப்பு வண்ணத்தை கொடுக்க கூடியவை . கல்யாண வீடாக இருந்தாலும் சரி தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களாக இருந்தாலும் சரி நம் கைகளில் தவறாமல் இடம்பெற்றுவிடும் இந்த மருதாணி .  முக்கியமாக மருத்துவத்திற்கு மருதாணி பயன்படுத்தப்படுகிறது . உடலில் ஏற்படும் கருந்தேமல்லை குறைக்கும் , உடல் வெப்பத்தை குறைக்கும் , நகங்களில் எந்தவித நோயும் வராமல் தடுக்கும். முடிகளுக்கு டை அடிக்க மற்றும் வாசனை திரவியம் தயாரிக்க மருதாணி பயன்படுத்தப்படுகிறது . நாம் இந்த கட்டுரையில் மருதாணி சாகுபடி பற்றி பார்ப்போம் .


ரகங்கள் 


மருதாணியை பொறுத்தவரை அணைத்து வகையான நிலங்களிலும் வளரக்கூடியது . இந்தியாவை பொறுத்தவரை குஜராத் , மத்தியப்பிரதேஷ் , பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் அதிகம் வியாபாரரீதியாக   வளர்க்கப்படுகின்றன . MH 1,MH 2 போன்ற மருதாணி ரகங்கள் அதிகம் வளர்க்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யப்படுகின்றன . ஆனால் தமிழ் நாட்டை பொறுத்தவரை வியாபாரத்திற்காக வளர்ப்பது மிக குறைவு . அதேசமயம் தமிழ்நாட்டில் 100க்கு 20 முதல் 30 வீடுகளில் மருதாணி செடி வளர்க்கப்படுகிறது .


தமிழ்நாட்டில் பெரும்பாலும் இரண்டு வகையான மருதாணி பயிர் செய்யப்படுகிறது.  முள் உள்ள மருதாணி  மற்றொன்று முள் இல்லாத மருதாணி . இதில் முள் உள்ள மருதாணியை நீங்கள் வேலிப்பயிராக பயிர் செய்யும்போது ஆடு மாடு கடிக்காது , அதேசமயம் மருதாணி இலைகளை பறித்து விற்கலாம் வருமானமும் கிடைக்கும் .


மருதாணி நடவு 


மருதாணி அனைத்துவகையான  நிலங்களிலும் வளரும் தண்ணீரும் அதிகம் தேவைப்படாது . விதை அல்லது போத்து நடவும் செய்யலாம் . மழைக்காலத்திற்கு முன் நடவு செய்வது நல்லது நீங்கள் வியாபாரரீதியாக தனி பயிராக செய்வதாக இருந்தால் முள் இல்லாத ரகத்தை தேர்வு செய்யலாம் .


நடவு செய்த 6 மாதத்தில் இருந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம் . ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 250 முதல் 300 கிலோ வரை அறுவடை செய்யலாம் அருகில் உள்ள சந்தைகளில் விக்கலாம் . கிலோ 50 முதல் 60 கிலோ வரை விற்கப்படுகிறது .

By

   Smart Vivasayi

Post a Comment

0 Comments