Skip to main content

Posts

Showing posts with the label தக்காளி

தக்காளியை வீணாக்காமல் எப்படி உலர் பழத்துண்டுகள் தயாரிக்கலாம்

Tomato cultivation in india - tomato value-added -dry fruit tomato  100 க்கும் மேற்பட்ட விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த வாட்ஸ் ஆப் குரூப் இணைந்து பயன்பெறுங்கள் Click Here  நம்‌ உணவில்‌ அன்றாடம்‌ பயன்படுத்தக்கூடிய காய்கறிகளில்‌ தக்காளி முக்கிய பங்குவகிக்கிறது. தக்காளி இல்லாமல்‌ குழம்பு என்பது சாத்தியமற்றது. அப்படிபட்ட தக்காளி அதிகமாக கிடைக்கும்‌ காலங்களில்‌ ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு கூட விற்க முடியாமல்‌ விவசாயிகள்‌ கீழே கொட்டும்‌ அவலம்‌ இன்று வரை தொடர்கிறது. இந்த நிலை மாற நம் விவசாயிகளே தக்காளியிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுகள்‌ தயாரித்து விற்கலாம்‌. நம்‌ அரசாங்கமும்‌ வேளாண்‌ வணிகத்துறை மூலம்‌ நிறைய உழவர்‌ உற்பத்தியாளர்‌ குழுக்களை உருவாக்கி விவசாயிகளையே வியாபாரிகளாக மாற்றும்‌ முயற்சியில்‌ ஈடுபட்ட வருகின்றது. இம்மாதிரியான குழுக்கள்‌ தக்காளியிலிருந்து மற்றும்‌ மதிப்பூட்டப்பட்ட உணவுகள்‌  தயாரித்து விற்று இலாபம்‌ பெறலாம்‌. தக்காளியிலிருந்து சாஸ் மற்றும் ஊறுகாய் தயாரிக்கலாம் என்றாலும் உலர் தக்காளி பழ துண்டுகள் தயாரித்தால் நீங்கள் தக்காளி பழமாகவே நான்கு மாதங்களுக...

இயற்கை முறையில் தக்காளி சாகுபடி part 1

 Cultivation of tomatoes in a natural way தக்காளி பயிரின் வயது தக்காளி பயிரின் வயது குறைந்தபட்சம் 150 ஒரு சில பயிர்களில் 180 நாட்கள் , 5 முதல் ஆறு மாதம் வரை செய்ய வேண்டிய விவசாயம். நாட்டு விதைகளை தேர்ந்தெடுத்தால் குறைந்தபச்சம் 10 டன் அதுவே ஹைபிரிட் ஆக இருந்தால் 25 டன் மகசூல் எடுக்க வேண்டும் என ஒரு இலக்கை முடிவு செய்து கொள்ளவேண்டும் . இது எல்ல வகை மண்ணுக்கும் பொருந்தும் . தக்காளியை பொறுத்தவரை தழைச்சத்து ,சாம்பல்சத்து  இது இரண்டும் மிகவும் முக்கியம் .  பேரூட்ட சத்துக்களை 100 ஆக பிரித்தால் தழைச்சத்து 40 மணி சத்து 20 சாம்பல் சத்து 40 என்ற அளவில் கொடுக்கவேண்டும் . உங்களுக்கு சரியான விளைச்சல் கிடைக்கவில்லையென்றால் அதற்க்கு காரணம் சாம்பல் சத்தாக இருக்கும் . தக்காளி  விதைகள் தரமான விதைகள் வாங்க வேண்டும் . நாட்டு விதைகள் வாங்கினால் அதை போடுவதற்கு முன்னாள் வெள்ளை துணியில் பரப்பி பாதிக்கப்பட்ட விதைகளை ஒதுக்க வேண்டும். கறுப்பானது , வளைந்தது பூசணம் பூத்தது போன்ற தக்காளி விதைகளை அப்புறப்படுத்தவேண்டும் , ஹைபிரிட் விதை வாங்கினாலும் இதை செய்யவேண்டும் .  விதை நேர்த்தி  1 கில...