Skip to main content

Posts

Showing posts with the label தென்னைக்கு பாசனம் செய்யும் முறை

தென்னைக்கு பாசனம் செய்யும் முறை

தென்னை க்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பரிந்துரையில் தினசரி 80 லிட்டர் தண்ணீர் தரவேண்டும். ஆனால் தமிழகத்தில் தென்னை மேட்டுப் பகுதியில் மலையடிவாரங்களில் செம்மண் சரளை நிலங்களில் பயிரிடப்பட்டு இருப்பதால் , பொதுவாக நம்முடைய கிணறு மற்றும் போர் போரில் நீர் குறையாமல் இருக்கவும், உபரியாக இருக்கும் நீரை கொண்டு ஊடுபயிர்கள் சாகுபடி செய்யவும் ஏதுவாக அனைத்து காலங்களிலும் சராசரியாக 50 லிட்டர் தண்ணீர் தருவது போதுமானது. அவ்வாறு தரும்  அடுத்த பாசனத்தை ஏற்கனவே கொடுத்த பாசன நீர் தரையில் மறைந்து விட்ட பின்பு தேவைப்படும்போது அடுத்த பாசனம் செய்யலாம். அடுத்த பாசனம் என்பது வெளியில் அடிக்கும் வெயில், மண்ணின் வகை, மூடாக்கு இருப்பது அல்லது இல்லாதது என்ற அளவை பொருத்தது.  ஒரு வருடத்திற்கு குறைவான வயதுள்ள மரங்களுக்கு தினசரி காலை 9 மணிக்கு முன் 20 லிட்டரும் மாலை 5 மணிக்கு பின் 20 லிட்டர் தண்ணீர் தந்தால் போதுமானதாகும். இரண்டு வயதுக்கு மேலுள்ள தென்னைகளுக்கு காலை 25 லிட்டரும் மாலை 25 லிட்டரும் தருவது நல்லது. இந்த நீருடன் இயற்கை இடு பொருட்களான மீன் அமிலம், பஞ்சகாவியா ,     இ எம் கரைசல், ஜ...