Skip to main content

Posts

Showing posts with the label மாமரம்

மாமரத்தில் பூச்சி தாக்குதல் - cultivation of mango

cultivation of mango பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த நீண்ட காலா அடிப்படையில் நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும் . அதாவது செப்டம்பர் மாதத்தில் இருந்தே வேலமர பட்டை கரைசல் , அக்னிஅஸ்திரம் ,கற்பூரக்கரைசல் இதில் ஏதாவது ஒன்றை 15 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து கொண்டே வரவேண்டும் . மாமரம் பற்றிய மற்ற கட்டுரைகள் - Click Here  ஜூன் ஜூலை மாதங்களில் மாதம் ஒரு முறை தெளிக்கலாம் . அதுவே அக்டோபர் மாதத்தில் 10 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம் இப்படி செய்வதால் பெரிய குறைபாடுகளில் இருந்து தப்பிக்கலாம் . அதிகப்படியான பூச்சிகளிடம் இருந்து மாம்பழத்தை காப்பாற்ற பெவேரியா பேசியானா வெர்டிசீலியம் லக்கானி இரண்டு திரவத்தை வாங்கி 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து 1 வது மற்றும் 10 அல்லது 12 வது நாள் தெளிக்கலாம் . உங்களால் ஒரு முறைதான் தெளிக்க முடியும் என்றால் 75 மில்லி கலந்து தெளிக்கலாம் . மேலிருந்து நன்றாக நனைத்து விட்டு தெளிக்க வேண்டும்  மாம்பிஞ்சு உதிர்வு எப்படி கட்டுப்படுத்தலாம்   G.M Smart Vivasayi E-mail - imperialhorticulturetips@gmail.com Contact- +919003395600

மாம்பிஞ்சு உதிர்வு எப்படி கட்டுப்படுத்தலாம்

cultivation of mango - how to control mango fruits fall  சத்து குறைபாடு - Malnutrition இதற்கு முதல் காரணம் மாமரம் சத்து இல்லாமல் இருந்திருக்கலாம் . பொதுவா மே மாசம் அறுவடை முடிந்த பின் மரத்தை நம் சரியாக கவனித்திருக்க மாட்டோம் , மறுபடியும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் மாமரத்தை கவனிக்க ஆரம்பிப்போம் எனவே இடைப்பட்ட பகுதிகளில் மரத்திற்கு தேவையான சத்துக்கள் இல்லாமல் போயிருக்கும் நாம் இந்த கட்டுரையில் மாம்பிஞ்சுகள் உதிர்வதை எப்படி தடுக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம் . வரப்புகள் தேவை- Boundaries required முதலில் முறையான வரப்புகள் இருக்கவேண்டும் . அந்த அந்த வரப்புகளில் உள்ள மரங்களில் அடியில் உள்ள சத்துக்கள் வெளியே செல்லாமல் பார்த்துக்கொள்ளும். நீங்கள் இடு பொருட்கள் கொடுத்தாலோ அல்லது போன தடவை கொடுத்திருந்தாலோ அவை நகராமல் இருக்க வரப்பு தேவை , அதேசமயம் தீடிரென்று கடும்மழை பெய்யும் போது நீங்கள் கொடுக்கும் சத்துக்கள் அடித்து செல்ல வாய்ப்புள்ளது எனவே முதலில் வரப்பு சரியான உயரத்தில் (3 அடி ) போடுங்கள் பூஞ்சை தொற்று   சூடோமோனஸ் அடுத்தது ஜூன் முதல் நவம்பர் வரை மழை பெய்ய ...

மா மரத்தில் பூஞ்சை தொற்று

Fungal infection of mango tree மிக நீளமான மழை அதாவது 7 நாள் 10 நாள் இப்படி மழை பெய்யும் நாட்களில் பொதுவா மானாவாரியாக இருக்கக்கூடிய தோட்டக்கலை பயிர்கள் எல்லாவற்றிலும் பூஞ்சை தொற்று வருவது வாடிக்கை  . பூமியில் உள்ள தவறான பூஞ்சைகள் மா மரத்தின் உடம்பு வழியாக நகர்ந்து கிளைகள் வழியாக போய் காம்புகள் வழியாக போய் பழங்களை தாக்குவது பொதுவான செயல் . அதில் உள்ள பூஞ்சைதான் படத்தில் காண்பிப்பது போல் வெள்ளையாக தெரியும் அல்லது நீல நிற படலங்களாக தண்டுகளில் இருக்கும் இப்படி அறிகுறிகள் தெரிந்தாலே அடுத்து பழங்களை தாக்க போகிறது என்று அர்த்தம்  இதை தடுப்பதற்கு சூடோமோனஸ் 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி கலந்து மாமரத்தின் தண்டுகள், இலைகள் ,காம்புகள் , தெளிக்கவேண்டும் மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பு அதாவது அக்டோபர் 1 தேதியிலிருந்து 15 நாள்களுக்கு 1 முறை தெளிக்கவேண்டும். ஒருவேளை பூஞ்சனா நோய் வந்துவிட்டால் இதை தெளிப்பதுடன் பேசில்ஸ் சப்ஸ்டில்ஸ 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி கலந்து தெளிக்கலாம் . பூஞ்சை அதிகம் தாக்கிய அல்லது தேவை இல்லாத கிளைகளை நீக்கி விடலாம் 

மாமரத்தில் பூக்கள் காய்களாக மாற என்ன செய்யலாம்

What can be done to turn the flowers into pods on the tree மாமரத்தில் பூக்கள் நன்றாக பூப்பதற்கு அடிப்படையில் ஒரு சில சத்துக்கள் வேண்டும். அந்த சத்துக்கள் இருந்தால் இருக்கக்கூடிய கொத்து பூவில் எது திறமையான பூவோ எளிமையாக சூழ் பிடிச்சு நமக்கு காலியாக மாறும் இதை அதிகப்படுத்துவதற்கு நாம் என்ன செய்யலாம் என்றால், பஞ்சகாவியா, தேமோர் கரைசல் , ஈ எம் கரைசல்  போன்றவற்றை தெளிக்கலாம் . மகரந்த சேர்க்கை நடை பெறுவதற்கு இதை எப்படி தெளிக்கவேண்டுமென்றால் 10 லிட்டருக்கு 200 மில்லி ஈ .எம் கரைசல் அல்லது 10 லிட்டருக்கு அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை தேமோர் கரைசல் பயன்படுத்தலாம். இதை நேரடியாக பூக்கள் மீது அடிக்காமல் கொஞ்சம் தள்ளி பொழியுற மாதிரி அமைப்புள்ள பூக்கள் மீது தெளித்தால் மகரந்த சேர்க்கை நடை பெறுவதற்கு உதவியாக இருக்கும் , அதாவது அதன் வாடை தேனீக்களை கவர்ந்து இழுப்பதற்கு வாய்ப்பாக இருக்கும் . பஞ்சகாவிய தெளிப்பதால் இப்படி தெளிப்பதால் பூக்களுக்கு ஆரம்பகால சத்துக்கள் கொடுப்பதற்கு பெரிய வாய்ப்பாக இருக்கும் மேலும் மற்றவற்றை விட பஞ்சகாவிய தெளிப்பதால் அதில் 40 சதவீதம் சூடோமோனஸ் இருப்பதால் மாமரத்தில் ...

மாமரம் தண்டு துளைப்பான்- Mango stem borer

Mango stem borer தமிழக மா உற்பத்தியில் ஆண்டுதோறும் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி வருகிறான் ஒரு வில்லன். ‘‘மா மரங்கள், அடர்ந்து, பச்சை பசேல்னு நல்லாத்தான் இருக்கு...ஆனா, காய் தான் பிடிக்க மாட்டேங்குது‘ என்ற புலம்பலை பெரும்பாலான மா விவசாயிகளிடம் கேட்கலாம். அதற்கு காரணம், தண்டு துளைப்பான் என்ற வில்லன் தான். மா மரங்களைப் பொறுத்தவரை, தண்டு துளைப்பான் தான் எமன். மரத்திற்குள் நுழைந்து விட்டால், அந்த மரத்தை வேரோடு சாய்க்காமல், வெளியேறாது. இந்த கொடிய வில்லனை பற்றி விளக்குகிறார்,  மாமரம் தண்டு துளைப்பான் எப்படி கட்டுப்படுத்தலாம் - How to control mango stem borer தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் செந்தூர்குமரன் மா மரங்களைப் பொறுத்தவரை, தண்டு துளைப்பான் தாக்குதல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. தண்டு துளைப்பான் என்பது ஒருவகை புழு. இது, மா மரத்தின் தண்டுகளில் இருக்கும் பட்டைகளுக்கு இடையில் உள்ள இடைவெளியில் நுழைந்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்டுக்குள் துளைப்போட்டு, உள்ளே சென்று ...

மாமரம் பராமரிப்பு - டிசம்பர் மாதத்தில் மா விவசாயிகளுக்கான ஆலோசனை-Natural Agriculture Mango Care for December

டிசம்பர் மாதத்தில் மா விவசாயிகளுக்கான ஆலோசனை தமிழகத்தின் பெரும்பாலான மேட்டுப் பகுதி நிலங்களில் மா விவசாயம் நடைபெறும் பகுதிகளில் ஐப்பசி மாதம் போதுமான மழை இல்லாததாலும், கார்த்திகை இலும் குறைந்த அளவே மழை பெய்தாலும், மழை குணம் மார்கழி மாதத்திலும் வரும் சூழ்நிலை உள்ளது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் பூ எடுப்பது கடந்த வருடங்களைப் போல் தள்ளிப்போகும் நிலை உள்ளது.  இவ்வாறாக உள்ள மா மரங்களுக்கு மாதம் ஒருமுறை சூடோமோனஸ் பத்து லிட்டருக்கு 50 மில்லி என கலந்து தெளித்துவிட்டு இரண்டு நாள் கழித்து பஞ்சகாவியா அல்லது இஎம் கரைசலை 10 லிட்டருக்கு 300 மில்லி என கலந்து தெளிக்கலாம். குணம் இருக்கும்போது தெளிப்பதை தவிர்க்கலாம். குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் மழை இருக்காது என்ற சூழ்நிலையில் தெளிக்கலாம்.  அதே வேளையில் நன்கு பூத்து உள்ள மாமரங்களில் பூக்களின் மீது ஒருமுறையாவது 10 லிட்டருக்கு 50 மில்லி சூடோமோனஸ் அல்லது விரிடி அல்லது சில சப்டிட்லஸ் கலந்து பூக்கள் மீது நேரடியாகப் படாமல் வாயை தெளிப்பானில் வாயை சற்று மேலே தூக்கி மழை பொழிவது போல பூக்கள் மேல் படுவதை உறுதிப்படுத்தலாம்.  இதனால் நோய்வாய்ப்பட பூக்...

மா சாகுபடி - மா அடர் நடவு முறை

இந்த நடவு முறையை பொறுத்தவரை ஒரு புரிதலை நாம தெரிஞ்சு வச்சுக்கணும் இஸ்ரேல் நாட்டுல பார்த்திங்கன்னா அடர் நடவு வச்சுருக்காங்க, அதுல என்ன பண்ணுவாங்கனா மாட்டு காதுல டாக் அடுச்சமாதிரி ஓவுவொரு மரத்துக்கும் நம்பர் போட்டு வச்சிருப்பாங்க அந்த ஓவுவொரு நம்பருக்கும் என்ன கொடுத்துருக்கோம் நாள் வாரியா , வாரம் 14 நாட்களுக்கு மற்றும் மாதம் வாரியா என்ன கொடுத்தோம் அப்படிங்கிற கனக்க தினசரி கவனித்து அதுக்கு வேணுங்கிற இடு பொருளை கொடுத்துகொண்டே இருப்பார்கள் , தனி மரத்தை கவனிப்பாங்க . இந்த அடர் நடவு முறையில் ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனியா என்ன கொடுக்க முடியுமோ அத கொடுங்க உதாரணமாக ஜீவாமிர்தம் கொடுத்தால் தனி மரத்திற்கு குறைஞ்சபச்சம் ஒரு பயிருக்கு 2 லிட்டர் ஊத்திவிடனும். மீன் அமிலம் , பஞ்சகாவியா , ஈ .எம் கரைசல் , போன்றவற்றை குறைந்தது 20 மில்லி நீரில் கலந்து வேரில் ஊற்றிவிடவேண்டும் . அசோஸ் பைரில்லும் கொடுத்தால் 100 கிராம் , பாஸ்போ பாக்ட்ரியா 50 கிராம் கொடுக்கலாம் . இதை 12 மாதமும் கொடுக்கவேண்டும் . மண் மற்றும் நீர் பரிசோதனையும் கட்டாயம் செய்திருக்கவேண்டும் அதற்கேற்றாற்போல் அளவை கூட்டி குறைத்து கொடுக்கலாம். பூ...