அனைத்து வகை கொய்யா வைத்திருக்கும் விவசாயிகளின் கவனத்திற்கு 1)கொய்யாவை பொறுத்தவரை பழ ஈ முக்கியமான பூச்சி தாக்குதலாகும் இதனை தடுக்க முன் நடவடிக்கையாக கருவாட்டு பொறியை ஒரு ஏக்கருக்கு 10 முதல் 20 எண்ணிக்கையில் ஆங்காங்கே, நான்கு மரங்களுக்கு நடுவே, மரத்தின் உயரத்தில் பாதி உயரத்தில் கட்டி வைக்கலாம். இதன் மூலம் பழத்தில் வரும் காய்ப்புழு சொத்தை, அழுகல் போன்ற விஷயங்களை தடுத்து வருமான இழப்பை குறைக்கலாம். 2)பூ வைத்த காலத்திலிருந்து ஒவ்வொரு 12 நாளுக்கொருமுறை வேப்பெண்ணெய் கரைசல் அல்லது ஐந்து இலை கசாயம் அல்லது அக்னி அஸ்திரம் தெளிக்கலாம். இதனால் காய்களில் வரும் பல்வேறு வகையான நோய் மற்றும் பூச்சி தாக்கங்களை குறைக்கலாம். 3) 15 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி சூடோமோனஸ் அல்லது 10 லிட்டர் தண்ணீருக்கு 25 மில்லி சூடோமோனஸ் 25 மில்லி டிரைக்கோ டெர்மா விரிடி கலந்து இலையின் முன்னும் பின்னும் படுமாறு தெளிக்கலாம், அதே நாளில் தரைவழி ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தேவையான தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.அடர்நடவு தீவிர அடர்நடவு வைத்திருப்போர் இருநூறு மரங்களை ஒரு ஏக்கர் எ...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்