1. மண் மற்றும் தட்பவெப்பநிலை சூழ்நிலைக்கேற்ப மழை நீர் வடிகால் வசதியுள்ள, அங்ககப் பொருட்கள் நிறைந்த மணல் கலந்த செம்மண் அல்லது களிமண் ஏற்றது. pH 6.0 - 6.8 வரை இருக்க வேண்டும். 22-35°C வெப்பநிலை வெண்டைக்கு மிகவும் அவசியம். 2.நிலம் தயாரித்தல் நிலத்தை 3-4 முறை உழுது, களைகள் இல்லாமல் பண்படுத்துங்கள். கடைசி உழவின்போது ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் அல்லது 600 கிலோ ஊட்டம் ஏற்றிய தொழு உரம் அல்லது கன ஜீவாமிர்தம் இடுங்கள். 3.விதை தேர்வு மற்றும் விதை நேர்த்தி ஆரோக்கியமான நாட்டு வெண்டை விதைகள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ரகங்களைத் (கோ 2, அர்கா அனாமிகா போன்றவை) தேர்வு செய்யவும். விதை நேர்த்தி ஒரு கிலோ விதைக்கு, இரண்டு லிட்டர் பீஜா அமிர்தத்தில் 5 நிமிடம் மூழ்க வைத்து, நிழலில் உலர்த்தி நடவு செய்ய வேண்டும். 4. விதைப்பு பருவம்: ஜூன் - ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி - மார்ச் மாதங்கள் ஏற்றவை. விதைப்பு முறை: வரிசைக்கு வரிசை 45 செ.மீ, செடிக்கு செடி 30 செ.மீ இடைவெளியில், 1 செ.மீ ஆழத்தில் விதைகளை நடவு செய்யவும். ஒரு ஏக்கருக்கு சுமார் 1- 1.5 கிலோ விதைகள் தேவைப்படும். 5. நீர் நிர்வாகம் விதைத்தவுடன் லேசாக நீர் ப...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்