1. மண் மற்றும் தட்பவெப்பநிலை சூழ்நிலைக்கேற்ப மழை நீர் வடிகால் வசதியுள்ள, அங்ககப் பொருட்கள் நிறைந்த மணல் கலந்த செம்மண் அல்லது களிமண் ஏற்றது. pH 6.0 - 6.8 வரை இருக்க வேண்டும். 22-35°C வெப்பநிலை வெண்டைக்கு மிகவும் அவசியம்.
கடைசி உழவின்போது ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் அல்லது 600 கிலோ ஊட்டம் ஏற்றிய தொழு உரம் அல்லது கன ஜீவாமிர்தம் இடுங்கள்.
3.விதை தேர்வு மற்றும் விதை நேர்த்தி
ஆரோக்கியமான நாட்டு வெண்டை விதைகள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ரகங்களைத் (கோ 2, அர்கா அனாமிகா போன்றவை) தேர்வு செய்யவும்.
விதை நேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு, இரண்டு லிட்டர் பீஜா அமிர்தத்தில் 5 நிமிடம் மூழ்க வைத்து, நிழலில் உலர்த்தி நடவு செய்ய வேண்டும்.
4. விதைப்பு
பருவம்: ஜூன் - ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி - மார்ச் மாதங்கள் ஏற்றவை.
விதைப்பு முறை:
வரிசைக்கு வரிசை 45 செ.மீ, செடிக்கு செடி 30 செ.மீ இடைவெளியில், 1 செ.மீ ஆழத்தில் விதைகளை நடவு செய்யவும். ஒரு ஏக்கருக்கு சுமார் 1- 1.5 கிலோ விதைகள் தேவைப்படும்.
5. நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் லேசாக நீர் பாய்ச்சவும். பிறகு, வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சவும். காய்கள் அறுவடை செய்யும் தருணத்தில் 2 நாட்களுக்கு ஒருமுறை பாய்ச்சுவது நல்லது.
6.உர மேலாண்மை (இயற்கை முறைகள்)
அடியுரம்: நிலம் தயாரிக்கும் போதே ஊட்டம் ஏற்றிய தொழு உரம் / கன ஜீவாமிர்தம் தூவி விட வேண்டும்.
மேலுரம்: 10 ஆம் நாள் முதல், 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து 5 நாட்களுக்கு ஒருமுறை செடிகள் மீது தெளிக்கவும்.
7. களை மற்றும் பூச்சி மேலாண்மை (இயற்கை முறைகள்)
களைகள்: ஆட்களைக் கொண்டு களை எடுக்கவும். மரத்தூள் அல்லது வைக்கோல் மூடாக்கு இடலாம்.
பூச்சிகள்:
அசுவினி/வெள்ளை ஈ: வேப்ப எண்ணெயை நீரில் கலந்து தெளிக்கவும்.
காய்த்துளைப்பான்:
பிரண்டை கரைசல் தெளிக்கலாம், இனக்கவர்ச்சி பொறிகள் வைக்கவும், வேப்பங்கொட்டைப் வெள்ளை பூண்டு சாறு தெளிக்கலாம்.
நோய்கள்: தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும், நோய் எதிர்ப்பு ரகங்களை நடவும்.






Comments
Post a Comment
Smart vivasayi