Skip to main content

Posts

Showing posts with the label Traps

ஆமணக்கு புண்ணாக்கு பொறி செய்வது எப்படி?

How to make castor oil trap? தென்னையில் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது . அரையடி பானையை தரையோடு தரையாக புதைத்து வைக்கவேண்டும் பானையோட வாய்ப்பகுதி தரையோடு ஒட்டி இருக்கவேண்டும் . ஒரு வண்டு நடந்துவந்து பானைக்குள் விழவேண்டும் அந்த அமைப்பில் புதைத்து வைக்கவேண்டும் . அந்த பானையில் பாதியளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் மூணு கைப்பிடி ஆமணக்கு புண்ணாக்கை கலந்துவிடவேண்டும்  பப்பாளிக்காய் ஒரு கைப்பிடி அளவு இருந்தால் அதை நாளாக வெட்டி உள்ளே போடலாம் அல்லது அரிசி வடிகட்டிய கஞ்சி இருந்தால் ஓன்று அல்லது இரண்டு டம்ளர் ஊற்றி விடலாம்  அல்லது இளநி தண்ணீர் கிடைத்தால் ஓன்று அல்லது இரண்டு டம்ளர் ஊற்றி விடலாம்  ஒரு குறுகிய காலத்துல 10 அல்லது 15 நாட்களில் வண்டு சேரும் அதை அழித்துவிடலாம் பின்பு பானையை சாணம் போட்டு நன்கு கழுவிவிட்டு மறுபடியும் மற்றொரு இடத்தில வைக்கலாம். கழுவாமல் வைத்தால் பூச்சி இறந்த வாடை மற்ற பூச்சிகளை வர விடாது . ஒரு ஏக்கருக்கு ஏழு எணிக்கையில் வைக்கலாம் . அதேசமயம் இடங்களை மாற்றி மாற்றி வைப்பதும் நல்லது . மூன்று மாதத்திற்கு இதை தொடர்ந்து செய்யலாம...

விளக்கு பொறி மஞ்சள் வண்ண ஒட்டும் பொறி எது சிறப்பானது

Lamp Trap Yellow Sticky Trap Which is better விளக்கு பொறிகளையும், மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறிகளையும் ஒப்பிடும்பொழுது,  செயல்படும் தன்மையில் சிறப்பானது எந்த வகை பொறி  மஞ்சள் நிற ஒட்டும் பொறி மஞ்சள் நிற ஒட்டும் பொறி  பறக்ககூடிய தாய் பூச்சிகளை புடிக்கும் வகையிலான அட்டைகள் , பூச்சிகள் பறக்கும் பாதைகளில் அது இருந்தால் ஓட்டும். அதனால்தான் , இதை ஏக்கருக்கு குறைந்தது 20தாவது  வைக்கிறோம் அப்படி வைக்கும் பொழுது ஏதாவது ஒரு அட்டையில் அது மாட்டும் இதை பயிரோட தலை உயரத்திற்கு வைக்கவேண்டும் இதனால் புழுவை உருவாக்கக்கூடிய பூச்சிகள் ஓரளவுக்கு கட்டுப்படும்  விளக்கு பொறி சூரிய ஒளியில் உள்ள விளக்கு பொறியில்  இரவு நேரத்தில் புற ஊதாக்கதிர்களை அடிப்படையாக வைத்து தீமை செய்யக்கூடிய பூச்சிகள் சாயந்தரம் 6 மணியிலிருந்து 10 மணிக்குள் இரை தேடி அலையும் போது விளக்கில் கவர்ந்து விழும் . இந்த இரண்டிற்கும் உள்ள செயல்பாடுகள்  இந்த இரண்டிற்கும் உள்ள செயல்பாடுகள் வேறு வேறு ஆகும் ஆனால் இரண்டுமே தேவை . ஒரு பொருளோட பிரச்னை  என்று பார்த்தால் ஓட்டும் அட்டை வாழ்நாள் கம்மிதான் கவனமும் எடுத்துக்கொள...