Skip to main content

Posts

Showing posts with the label Fisheries

நன்னீர் மீன் வளர்ப்பில் நீர் மற்றும் மண் மேலாண்மை

Water and soil management in freshwater aquaculture மீன் வளர்ப்பில் , மீன் இருப்பு செய்யப் பட்டுள்ள குளத்தின் நீர் மற்றும் மண்ணின் தன்மை முக்கிய பங்கு வகிக்கின்றன . நீர் மற்றும் மண் ஆகியவற்றில் ஏற்படும் இயற்வேதியல் மாற்றங்கள் பலவகை களில் மீன் வளர்ச்சியினைப் பாதிப்பதாக அமைந்து விடுகின்றன . மீன்களின் வளர்ச்சிக்கும் , பிழைப்புத் திறனுக்கும் , குளத்தின் நீர் மற்றும் மண்ணின் தரத்தை பராமரிப்பது மிகவும் அவசியமானதாகும் . எனவே , மீன் வளர்ப்புக் குளத்தில் நீர் மற்றும் மண்ணின் தரத்தை அறிவது மிக முக்கியமானதாகும் .  குளத்து நீரின் தரம்:  வெப்பநிலை : மீன்கள் குளிர் இரத்த பிராணிகளாகும் . வெப்ப இரத்த பிராணிகளைப் போல் அல்லாமல் இவைகள் சூழ்நிலைக்கேற்ப தன் உடல் வெப்ப நிலையை மாற்றிக் கொள்ள முடியும் . மீன்களுக்கு 28 செ . முதல் 30 செ . வரை உள்ள வெப்பநிலையில் இருப்பது ஏற்றதாகும் . வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களை மேற்கொள்ள கீழ்க்காணும் யுத்திகளைக் கையாளலாம் .  1.தண்ணீரின் நிறத்தின் தரத்தைப் பராமரித்தல் 2. தண்ணீரின் ஆழத்தைக் கூட்டுவதற்கு நீரின் கொள்ளளவை அதிகப்படுத்துதல். 3.காற்றுப் புக...