How can we check the quality of the seed at home ஒரு வீட்டு தோட்டமோ அல்லது மாடி தோட்டமோ நமக்கு முக்கியத்தேவை விதை . அந்த விதையை நீங்கள் வெளியிலிருந்து வாங்கியிருக்கலாம் அல்லது விதையை வாங்கி ஆறு மதமோ அல்லது ஒரு வருடமோ பயன்படுத்தாமல் வைத்திருக்கலாம் , தற்பொழுது போட்டால் முளைக்குமா என்ற சந்தேகம் வரலாம் அதற்க்கு வீட்டிலேயே நீங்கள் சோதனை செய்து பார்க்கலாம் . சில விதைகள் நீண்ட ஆயுளை கொண்டிருக்கும் சில விதைகள் குறைந்த வயதை கொண்டிருக்கும் . நாம் வைத்திருக்கும் விதைகள் முளைக்குமா என்பதை அறிய இரண்டு சோதனைகள் செய்யலாம் . நீர் பரிசோதனை ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் நீரை ஊற்றி கொஞ்சம் விதைகளை அதில் போடுங்கள் , விதை முழுகுகிறதா அல்லது மிதக்கிறதா என்று பாருங்கள் விதை மூழ்கியிருந்தால் தரமாணவிதை நீங்கள் பயிர் செய்ய பயன்படுத்தலாம் விதை மிதந்துகொண்டிருந்தால் பயிர் செய்ய ஏற்ற விதை அல்ல , அது முளைக்காது , விதை முளைப்பு சோதனை ஒரு ஈரத்துணியை எடுத்துக்கொள்ளுங்கள் அந்த துணியில் 10 விதையை வரிசையாக வையுங்கள் அதை மடித்து ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து மூடி வையுங்க...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்