தாக்குதலின் தன்மை இந்நோய் இளம் கன்றுகளை அழுகச் செய்துவிடும். அதிலிருந்து கெட்ட வாடை வ ீசும். கழுத்துப் பகுதி அழுகுவது இதன் ஆரம்ப அறிகுறி. தொடர்ந்து இலைகள் உலர்வதால் மரம் திடீரென காய்ந்து காட்சியளிக்கும். தண்டைப் பிரித்து இலேசாக இழுத்தால் தண்டு மட்டும் அழுகிய அடித்தண்டு பகுதியோடு, கையோடு வந்துவிடும். கிழுங்கு மட்டும் மண்ணில் இருக்கும். ரொபஸ்டா, கிரான்ட் நைன் மற்றும் தெல்ல சக்கராலி இரகங்கள் சாகுபடியில், இந்நோய்த் தாக்கம் அதிகரிக்கும் போது வெளித்தண்டு வெடித்துக் காணப்படும். தாக்கப்பட்ட பயிரை கழுத்துப் பகுதியில் வெட்டித் திறந்து பார்த்தால் மஞ்சள் முதல் செந்நிற அழுகல் காணப்படும். ஆரம்பத்தில் கார்டெக்ஸ் பகுதியில் அடர் பழுப்பு அல்லது மஞ்சள் நிற நீர் தோய்த்தது போன்று காணப்படும் பின்பு அழுகல் கிழங்கின் நடுப்பகுதிக்குப் பரவி, தண்டின் குருத்துக்கும் பரவி அழுகிய பகுதிகள் அடர் நிற பஞ்சு போன்று உருவாகும். இந்த மென் அழுகல் விரல் வடிவில் முன்னும் பின்னும் நகர்ந்து திசுப் பகுதி வரை வளர்ந்து காணப்படும். அழுகிய பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசும். நோய்க் காரணியை கண்டறிதல்: இந்த நோயினை உண்டாக்கும் நச்சு...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்