ஒரு இயற்கை வேளாண்மை பண்ணையை எப்படி உருவாக்கலாம் நம்முடைய உணவு முறை என்பது கால் நூற்றாண்டில் நன்றாக மாறிவிட்டது . இயற்கை முறையில் விளைந்த உணவு பொருட்களின் சுவை கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டது . இப்பொழுது உள்ள காய்கறிகளோ அல்லது உணவு பொருட்களோ எந்தஅளவிற்க்கு நச்சு தன்மையோடு உள்ளது அது எப்பொழுது நம் உடம்பை பாதிக்கும் என்பது நமக்கு தெரியாது . ஆனால் கடந்த 10 வருடங்களாக தமிழ் நாட்டில் நிறைய விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகிறார்கள் . அவ்வளவு ஏன் நிலம் இல்லாதவர்கள் கூட நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்கிறார்கள் .இந்த கட்டுரையில் ஏற்கனவே செயற்கை விவசாயம் செய்துகொண்டிருப்பவர்கள் இயற்கை விவசாயத்திற்கு மாறினால் என்ன செய்யவேண்டும் அல்லது புதிதாக இயற்கை விவசாயம் செய்பவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை பார்ப்போம் . லட்சியத்தில் உறுதியாக நீங்கள் இயற்கை விவசாயம் செய்ய முடிவெடுத்துவிட்டால் அதில் வெற்றி அடையும் வரை நீங்கள் உறுதியாக இருக்கவேண்டும் . ஏன்எனில் , இயற்கை விவசாயத்தில் உடனடியாக லாபத்தை எதிர்பார்க்க முடியாது அதுவும் செயற்கை இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறும்பொழுது லாப...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்