வேர்களை வைத்து களைகள் பற்றி சென்ற தொடரில் எனக்கு தெரிந்த வரை பதிவு செய்தேன். விடுபட்ட ஒரு செய்தி. ஆழமாக வேர் செல்லும் களைகள் இன்னுமொரு அற்புதத்தை அடி மண்ணில் நடத்துகிறது. களைகளின் வேர் பகுதி அந்த ஆழமான பகுதியில் சிதைந்து மக்கு நிலையை உருவாக்குறது என்பது தான் அந்த செய்தி. வளர்ந்த களைகள் மண்ணின் கலக்கும் போது அதில் உள்ள சத்துக்களை மண்ணில் கலந்து விடுகிறது என பார்த்தோம். இது மண்ணை வளமாக்குகிறது. இந்த களை செடிகள் முளைத்து நான்கு இலை நிலையில் மண்ணில் கலந்தால் அது நுண்ணுயிர்களுக்கு பிடித்தமான உணவாகிறது. இது நுண்ணுயிர்கள் பெருக்கத்தை அதிகரிக்கும். அதற்கு தான் அந்த காலத்தில் "போக்கு போக உழவு என சொல்லுவார்கள் ". அதாவது களைகள் முளைக்க,முளைக்க உழவு செய்வது. இதில் இரண்டு நன்மைகள். ஒன்று மேலே சொன்னது போல நுண்ணுயிர் பெருக்கம். இரண்டு களைகளின் விதைகள் அழிவது மூலம் களை கட்டுப்பாட்டில் இருக்கும். இங்கே இன்னுமொரு ஆச்சரியமான செய்தி. களைகளின் சந்ததி தொடர இயற்கை அதற்கு எப்படி உதவுகிறது என பாருங்கள். ஒருமுறை உருவாகும் விதைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் முளைப்பதில்லையாம். அந்த விதைகள் கொஞ்சம் கொஞ்சம...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்