Ad Code

Ticker

6/recent/ticker-posts

களைகள் என்பது என்ன-2

வேர்களை வைத்து களைகள் பற்றி சென்ற தொடரில் எனக்கு தெரிந்த வரை பதிவு செய்தேன்.
விடுபட்ட ஒரு செய்தி.
ஆழமாக வேர் செல்லும் களைகள் இன்னுமொரு அற்புதத்தை அடி மண்ணில் நடத்துகிறது.

 


களைகளின் வேர் பகுதி அந்த ஆழமான பகுதியில் சிதைந்து மக்கு நிலையை உருவாக்குறது என்பது தான் அந்த செய்தி.

வளர்ந்த களைகள் மண்ணின் கலக்கும் போது அதில் உள்ள சத்துக்களை மண்ணில் கலந்து விடுகிறது என பார்த்தோம். இது மண்ணை வளமாக்குகிறது.

இந்த களை செடிகள் முளைத்து நான்கு இலை நிலையில் மண்ணில் கலந்தால் அது நுண்ணுயிர்களுக்கு பிடித்தமான உணவாகிறது. இது நுண்ணுயிர்கள் பெருக்கத்தை அதிகரிக்கும்.
அதற்கு தான் அந்த காலத்தில் "போக்கு போக உழவு என சொல்லுவார்கள் ".
அதாவது களைகள் முளைக்க,முளைக்க உழவு செய்வது.

இதில் இரண்டு நன்மைகள்.

ஒன்று மேலே சொன்னது போல நுண்ணுயிர் பெருக்கம்.

இரண்டு களைகளின் விதைகள் அழிவது மூலம் களை கட்டுப்பாட்டில் இருக்கும்.

இங்கே இன்னுமொரு ஆச்சரியமான செய்தி.

களைகளின் சந்ததி தொடர இயற்கை அதற்கு எப்படி உதவுகிறது என பாருங்கள்.

ஒருமுறை உருவாகும் விதைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் முளைப்பதில்லையாம்.




அந்த விதைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஏழு போகத்துக்கு தொடர்ந்து முளைக்குமாம்.

களைகளை கட்டுப்படுத்த களைகள் பூக்கும் முன் அழிப்பதுதான் சிறந்த வழி.
இப்படி செய்வதால் புதிய விதைகள் உருவாவது தடுக்கப் படுகிறது.

களைகள் பற்றி ஓரளவுக்கு தெளிவு கிடைத்திருக்கும் என எண்ணுகிறேன்.

களைகள் பயிர்களுக்கு எதிரி என்ற எண்ணம் இன்னமும் இருக்கத்தான் இருக்கும்.

சரி , ஏன் எதிரானது என எண்ணுகிறோம்?

1. பயிர்களுடன் சத்துக்களுக்காக போட்டி இடுகிறது.

2. சூரிய ஒளி அறுவடை யில் பயிர்களுக்கு இடையூறாக இருக்கிறது.

3. பயிர்களை தாக்கும் பூச்சிகளின் கூடாரமாக களைகள் இருக்கிறது.

இந்த மாதிரியான எண்ணங்கள் மனதில் தோன்றும்.

ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1.பயிர்களுடன் போட்டியிடுகிறது:

இதில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது.
ஆனாலும் உண்மை அதுவல்ல.
மண்ணின் சத்துக்கள் குறைபாடு உள்ள பொழுதுதான் இது உண்மை ஆகும்.
மண் வளமாக இருக்கும் போது இது சரியான வாதமாக இருக்காது.

கலப்பு பயிர் செய்யுங்கள் என வலியுறுத்தப் படுகிறது.
அவைகள் சத்துக்களுக்காக போட்டி போடுவதில்லையா?
இல்லையே,அத்துடன் ஒன்றுக்கொன்று உறவாடி வளர்கிறது என சொல்லுவார்கள்.
அப்படி இருக்க களைகள் என்ன விதிவிலக்கா?
ஆக, முதல் குற்றச்சாட்டு முழுதும் உண்மை இல்லை என தெரிகிறது.

2.சூரிய ஒளி அறுவடை யில் பயிர்களுக்கு இடையூறாக இருக்கிறது:

இரண்டாவது வாதம் உண்மைதான். ஒரு வேலை இது பயிர்களுக்கு சூரிய ஒளி அறுவடை யில் தடையாக இல்லை என்றால் களைகள் பிரச்சனை இல்லை தானே?!
பயிர்களை விட களைகள் அதிகம் வளரும் போது மட்டுமே இந்த இடையூறு தோன்றுகிறது.
பயிர் செய்த 30வது நாள் வரை களைகளை கட்டுப்பாட்டில் வைத்தால் போதும். பயிர்கள் வளர்ந்து விடும். அதற்கு பின் களைகள் இடையூறாக இருக்காது. அது உயிர் மூடாக்காக மாறிவிடும்.

களைகளை "ஆகாத பெண்டாட்டி" போல் பார்ப்பதை தவிர்க்க பாருங்கள்.
உண்மையில் அது உதவத்தான் செய்கிறது.

நமது வயலில் வளரும் களைகளுக்கேற்ப பயிர்களை தேர்ந்தெடுக்க பழக வேண்டும்.
அடுத்து மூன்றாவது குற்றச்சாட்டை பார்ப்போம்.

3.பயிர்களை தாக்கும் பூச்சிகளின் மறைவிடமாக இருக்கிறது:

உண்மைதான்.
ஆனால் உணவு சங்கிலி முழுமையாக இருக்கும் பட்சத்தில் இது உண்மை ஆகாது.

ஆக இந்த மூன்று குற்றச்சாட்டுகளும் ஓரளவுக்கு முறியடிக்கப் படுகிறது.

களைகளும் பயிர்களுக்கு நட்பானதே என்ற கருத்துக்கு பலம் சேருகிறது.

மாற்றி யோசிக்க தெரிந்துகொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments