அநேக மரங்கள் விதைகள் மூலமும் சில மரங்கள் போத்துக்ள நட்டும் இன்னும் சில மரங்கள் பதியன்கள் மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. மரககன்றுகளை நன்கு தயார் செய்யப்பட்ட ( 1 x 1 x 1 மீ) குழிகளில் மேல் மண்ணுடன் சம அளவு மக்கிய மாட்டு உரம் கலந்து நிரப்பி தண்ணீர் விட்டடு பின்பு மரக்கன்றுகளை நட வேண்டும். மரங்கள் வளரும் தன்மையைப்பொருத்து தக்க இடைவெளி விட்டு நட வேண்டும். மரங்கள் வளரும் போது தரையிலிருந்து 2 மீட்டர் உயரம் வரை பக்க கிளைகள் இல்லாமல் ஒரே அடி மரத்துடன் இருக்குமாறு வளர்க்க வேண்டும். *மரங்களின் வகைகள்* அலங்கார மரங்களை மலர் மரங்கள் , நிழல் மரங்கள் , இலை அழகு மரங்கள் என 3 பிரிவுகளாகப்பிரிக்கலாம். *மலர் மரங்கள்* பேய் மரம் இனிய மணமுடைய வெண்மை நிற மலர்கள் கொத்து கொத்தாக பூக்கும் காய்கள் 30 -50 செ.மீ நீளம் கொத்தாகத் தொங்கும் விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. *மந்தாரை* இலைகள் ஒட்டகத்தின் கால் தடத்தைப் போன்ற வடிவில் இருக்கும் மலர்கள் இளஞ்சிவப்பு , வெள்ளை , வெள்ளை மலர்களில் சிவப்பு கோடுகள் , மஞ்சள் ஆகிய நிறங்களில் உள்ளன. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. *பத்திரி* தொங்கும் ...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்