Skip to main content

Posts

Showing posts with the label Iyarkai uram

மாடித்தோட்டமும் டீ தூளும்

மாடித்தோட்டத்தில் டீ தூளின் பயன்பாடு நம் வீட்டில் யாராவது ஒருத்தர் கட்டாயம் டீ குடிப்பவரா இருக்கலாம் அல்லது ஒரு வே ளையாவது டி குடிக்கலாம் . டீ தயாரித்து விட்டு பெரும்பாலும் அந்த டீத்தூளை நாம் வெளியே தூக்கி விட்டெறிந்து விடுவோம் . ஆனால் அதை தூக்கி எரியாமல் உங்கள் மாடித்தோட்டத்தில் பயன் படுத்தினால் என்ன நன்மைகள் என்று இந்த கட்டுரையில் பார்ப்போம் .  டீ பேக் முதலில் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம் டீ தூளை கொட்டும்போது மக்கிவிடும் அதே டீத்தூளை பேக் உடன் போடும்போது அது மக்குமா ? தாராளமாக 3 முதல் 4 மாதத்திற்குள் மக்கிவிடும் . பெரும்பாலும் இந்த பேக் Manila hemp எனப்படும் வாழை நாரிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது . இருந்தாலும் உங்கள் செடிக்கு போடுவதற்க்கு முன்பு டீ பேக் எதில் தயாரிக்கபட்டுள்ளது என்பதை பார்த்துவிட்டு பேக் உடன்பயன்படுத்தலாம்.   டீ இலைகளில் tannic acid மற்றும் இயற்கை சத்துக்கள் உள்ளன டீ தூளை தொட்டியில் போடும்பொழுது அது மக்கி செடிகளுக்கு தேவையான சத்துக்களை கொடுத்து ஆரோக்கியமாக வளர உதவுகிறது . வீட்டில் பயன்படுத்தும் காய்கறிக்கழிவுகளையோ மற்றும் டீ தூள் உரமாக பயன்பட...

இயற்கை வேளாண்மையில் இடுபொருட்கள் தயாரித்தாலும் பயன்படுத்தலும்

Natural fertilizer and Natural pesticides  use of inputs in natural agriculture நம் செய்யும்  வேளாண்மையை இரண்டு விதமாக சொல்வார்கள் ஓன்று அங்கக வேளாண்மை இது நாம் பயன் படுத்துகிற இயற்கை இடுபொருட்களோடு வெளியில் வாங்கி பயன் படுத்துகிற பயோ பெர்டிலைசர் (அசோஸ் பயிரில்லம் , பாஸ்போ பாக்டீரியா ) மற்றும் பயோ பெஸ்டிசைட் ( வெர்டிசீலியம் லக்கானி , சூடோமோனாஸ் ) போன்றவற்றை பயன்படுத்தி விவசாயம் செய்வது . இயற்கை வேளாண்மை ஆங்கிலத்தில் நேச்சுரல் பார்மிங் (natural farming ) என்று சொல்வார்கள் . இயற்கை உரமாக இருந்தாலும் சரி பூச்சி விரட்டியாக இருந்தாலும் நாமே தயாரித்து விவசாயம் செய்வது . இப்படி செய்வதால் விவசாயத்திற்கான செலவு இன்னும் குறையும் இதைத்தான் ஜீரோ பட்ஜெட்  என்று சொல்வார்கள் . நாம் இந்த கட்டுரையில்  பயோ பெர்டிலைசர் பங்கு என்ன மற்றும் இயற்கை இடு பொருட்கள் தயாரிக்கும் முறைகள் பற்றிய சிறந்த YOU TUBE காணொளிகள் கொடுக்கப்பட்டுள்ளன .  இ.எம் - E.M கரைசல்  உங்களுடைய மண் வளமான மண் ஆக்குவதற்கு, உங்களுடைய நீரை  சுத்தமாக்குவதற்கும் , பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகவும்...

நமக்கு தேவையான மண்புழு உரத்தை எப்படி வீட்டிலேயே தயாரிக்கலாம்

how make vermicompost at home விவசாயியோட ஒரு சிறந்த நண்பன்  யாருனு கேட்டா அனைவரும் சொல்லக்கூடிய முதல் பதில் மண்புழுதான் . விவசாயம் சார்ந்த தொழில்களில் குறைந்த செலவில் அதிக லாபம் தரக்கூடிய தொழில் மண்புழு தயாரிப்புதான் . ஒரு கிலோ மண் புழு தயாரிக்க 4 முதல் 6 ரூபாய் வரை ஆகும் , சந்தையில் கிலோ 10 முதல் 15 ரூபாய் வரை போகிறது .  பொதுவா உரத்தை தயாரிப்பதற்கு இரண்டு விதமான வழிமுறைகள் உண்டு ஹாட் மற்றும் கோல்டு . இதில் கோல்டு  முறை என்பது ஒரு குழியிலோ அல்லது தொட்டியிலோ நாம் தினமும் பயன்படுத்தும் உணவு பொருட்களான காய்கறி மற்றும் அதன் தோல்கள் , பழங்கள் , காப்பித்தூள் , முட்டை ஓடுகள் , போன்றவற்றை போட்டு மூடி வைத்துவிடலாம் . ஆனால் இது நன்றாக மக்கி உரமாக  குறைந்தது ஒருவருடமாகலாம் .  அடுத்ததாக ஹாட் முறை . இந்த முறையில் நுண் உயிர்கள் மூலம் வீட்டு கழிவு பொருட்களை மக்கச்செய்து உரமாக்குவது . இதற்கு மக்கச்செய்யும் நுண்கிருமிகள் (டீகம்போஸர்) நீர் நல்ல காற்றுவசதி தேவை .       இந்த முறையில் உரம் உருவாக மூன்று முதல் 4 மாதம் வரை ஆகும் . இந்த இரண்டு முறையையும் ...

மண்புழு உரம் தயாரிக்கும் முறை

பத்து சத்துக்கள் அடங்கிய பக்காவான இயற்கை உரம்… மகசூலும் அதிகரிக்க வேண்டும்; மண்வளமும் பாதுகாக்கப்பட வேண்டுமா? அதற்கு ஒரே வழி இயற்கை உரங்கள்தான். அந்த இயற்கை உரங ்களில் மிகச் சிறந்தது எது என்றால் மண்புழு உரம்தான். விவசாயிகளுக்காக இரவு பகல் என 24 மணி நேரமும் உழைக்கும் உயிரினம். அதனை நாம் பக்குவமாகப் பயன்படுத்தினால் பலமடங்கு பயன் அடையலாம். அதைத்தான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகச் செய்து வருகிறார், திப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா மொடக்குபட்டியைச் சேர்ந்த திரு. எம். ஜெயபிரகாஷ். தமது தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்காக ஆரம்பித்து சுற்றுவட்டார பகுதிகளுக்கும் பயன்படும் விதத்தில் உற்பத்தியை அதிகரித்துள்ளார். மண்புழு உரம் தயாரிக்கும் முறை உரம் தயாரிப்பதற்கு ஏற்ற அளவு தொட்டி கட்டி அதில் ஒரு அடி உயரம் வரைக்கும் தேங்காய் மட்டைகள் அடுக்கப்படுகிறது. ஒரு அடி வரைக்கும் பண்ணைக்கழிவுகள், காய்கறிக் கழிவுகள், தென்னை நார்க் கழிவுகளில் ஏதாவது மக்கும் கழிவுகளை ஒன்றும், பின்பு அரையடி அளவுக்கு மாட்டுச் சாணமும் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு தொட்டியளவுக்கேற்றவாறு மாற்றி, மாற்றி மேலிருந்து அரையடியளவு இடை...

பஞ்சகாவ்யா

பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவித்து நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரக்கூடிய இயற்கை ஊட்டச் சத்து உரமாக விளங்குவது பஞ்சகவ்யம். இதைக் கொண்டு பயிர்களையும், ம ண்ணின் தன்மையையும் மேம்படுத்தலாம். உணவுப் பயிர்களில் பயன்படுத்தப்பட்டு வரும் செயற்கை ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் கேடு விளைவிப்பதாக உள்ளன. இதில் இருந்து மீளும் வகையில் விவசாயிகளுக்கு இயற்கை வழியாகவும், பசுமாட்டின் வாயிலாகவும் கிடைக்கப் பெரும் பஞ்சகவ்யம் பயனுள்ளதாக இருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. பஞ்சகவ்யம் தயாரிக்கத் தேவையானவை: 1.பசுவின் புது சாணம் 5 கிலோ. 2. பசுவின் கோமியம் 3 லிட்டர், 3. பசு மாட்டுப் பால் 2 லிட்டர், 4. பசுந்தயிர் 2 லிட்டர், 5. பசு நெய் 1 லிட்டர், 6. கரும்புச் சாறு 3 லிட்டர், 7. இளநீர் 2 லிட்டர், 8. வாழைப்பழம் 12, 9. கள் (கிடைக்கும் இடங்களில்) 2 லிட்டர் கரும்புச் சாறு கிடைக்கவில்லையென்றால் 500 கிராம் நாட்டுச் சர்க்கரையுடன் 200 கிராம் ஈஸ்டு சேர்த்து 3 லிட்டர் நீரில் ஊற வைத்தால் 30 நிமிடங்களில் அதே தன்மையுடைய கரைசல் கிடைக்கும். பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை: பசுவின் புது சாணம், கோமியம், நெய் ஆகியவற்றை நன்கு கல...