Ad Code

Ticker

6/recent/ticker-posts

நமக்கு தேவையான மண்புழு உரத்தை எப்படி வீட்டிலேயே தயாரிக்கலாம்

how make vermicompost at home



விவசாயியோட ஒரு சிறந்த நண்பன்  யாருனு கேட்டா அனைவரும் சொல்லக்கூடிய முதல் பதில் மண்புழுதான் . விவசாயம் சார்ந்த தொழில்களில் குறைந்த செலவில் அதிக லாபம் தரக்கூடிய தொழில் மண்புழு தயாரிப்புதான் . ஒரு கிலோ மண் புழு தயாரிக்க 4 முதல் 6 ரூபாய் வரை ஆகும் , சந்தையில் கிலோ 10 முதல் 15 ரூபாய் வரை போகிறது .  பொதுவா உரத்தை தயாரிப்பதற்கு இரண்டு விதமான வழிமுறைகள் உண்டு ஹாட் மற்றும் கோல்டு . இதில் கோல்டு  முறை என்பது ஒரு குழியிலோ அல்லது தொட்டியிலோ நாம் தினமும் பயன்படுத்தும் உணவு பொருட்களான காய்கறி மற்றும் அதன் தோல்கள் , பழங்கள் , காப்பித்தூள் , முட்டை ஓடுகள் , போன்றவற்றை போட்டு மூடி வைத்துவிடலாம் . ஆனால் இது நன்றாக மக்கி உரமாக  குறைந்தது ஒருவருடமாகலாம் . 



அடுத்ததாக ஹாட் முறை . இந்த முறையில் நுண் உயிர்கள் மூலம் வீட்டு கழிவு பொருட்களை மக்கச்செய்து உரமாக்குவது . இதற்கு மக்கச்செய்யும் நுண்கிருமிகள் (டீகம்போஸர்) நீர் நல்ல காற்றுவசதி தேவை . 

   





இந்த முறையில் உரம் உருவாக மூன்று முதல் 4 மாதம் வரை ஆகும் . இந்த இரண்டு முறையையும் தவிர்த்து மூன்றாவது முறைதான் மண்புழுக்களை வைத்து மண் புழு உரம் தயாரித்தல் . வீட்டில் காய்கறி தோல் கழிவுகளை வைத்தே நம்மால் மண் புழு உரம் தயாரிக்க முடியும் . அவற்றை எப்படி தயாரிக்கலாம் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம் 

வீட்டில் பயன்படுத்தும் காய்கறி

நாம் வீட்டில் பயன்படுத்தும் காய்கறித்தோல் , பழங்கள் , முக்கியமாக காய்ந்த இலைகள் மற்றும்  வெங்காயத்தோல் , வீட்டில் உள்ள செய்தித்தாள்களையும் வெட்டி போடலாம் , முட்டை ஓடு , வடிகட்டிய காப்பித்தூள் , தேங்காய்நார் போன்றவற்றை பயன்படுத்தலாம் இவற்றை நேரடியாக பயன்படுத்த முடியாது மக்கவைத்து நாம் பயன்படுத்தலாம் . 


வீட்டில் மண்புழு உரம் தயாரிப்பதற்க்கென்றே பின்கள் (bin ) இணையத்தளத்தில் கிடைக்கின்றன மேற்கூறிய பொருட்கள் இந்த பின்னில் போட்டு மக்க விடவும் ஒருவேளை சரியாக மக்கவில்லையெனில் வேஸ்ட் டீகம்போஸர் தெளிக்கலாம் 40 முதல் 50 நாள்களில் மக்கிவிடும் . பின்பு மண்புழுக்களை இதில் விடலாம் .



உங்களுக்கு தேவையான மண்புழுக்களை  அருகில் உள்ள பண்ணைகளிலோ அல்லது உங்கள் பக்கத்தில் இருக்கும் வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொண்டால் அவர்கள் கிடைக்கும் இடத்தை சொல்வார்கள். மண்புழுக்களை வாங்கி விட்ட 60 நாள்களில் மண்புழு தயாராகி விடும் . உங்களுடைய  மண்புழு தொட்டியில் தேவையான அளவு ஈரம் இருக்கும்படி மற்றும் பார்த்துக்கொள்ளுங்கள் பொதுவா மண் புழு தயாராகிவிட்டது என்பதை அதன் வாசத்தை வைத்தே கண்டு பிடித்துவிடலாம் . பின்பு அதை உங்கள் தோட்டத்திற்கு பயன்படுத்தலாம் 


G.M

Smart Vivasayi 

Post a Comment

0 Comments