Skip to main content

Posts

Showing posts with the label வெங்காயம்

அதிக அளவு விதை வெங்காய உற்பத்திக்கான ( சாம்பார் வெங்காயம்) ஆலோசனைகள்

Strategies for high seed onion production (sambar onion)  . சாம்பார் வெங்காயம் எனப்படும் சிறுவெங்காயம் மற்ற பயிர்களைவிட மிகக்குறைவான வாழ்நாளைக் ( 65 - 80 நாட்கள்)  கொண்டுள்ளதால் அதனை பயிரிட விதைகளைவிட வெங்காய Bulb- களை நடவதே சிறந்தது. சாம்பாருக்கு விளைவிக்கப்படும் சிறுவெங்காயம் நடப்பட்டதிலிருந்து மூன்று முதல்  நான்கு பகுதியாக பிரிந்து வளர்ந்து விளைவதே சமையலுக்கு நன்றாக இருக்கும் .   வெங்காய சாகுபடியில் Bulb- கள் அதிகமாக பிரியாதிருப்பதால் விவசாயிகளுக்கு  மகசூல் சுமாராகவே இருந்தாலும் பயனாளிகள் மட்டத்தில் நல்ல வரவேற்ப்பை பெறுகிறது.  ஆனால் விதைகளுக்காக பயன்படுத்தப்படும்           Bulb- கள் பெரிய அளவில் இருந்தால் விதையளவு அதிகரித்து சாகுபடி செலவு மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொதுவாக விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதை வெங்காயத்தினை முதல் சீசனில் தாங்களே உற்பத்தி செய்வது வழக்கம்.  ஆனால் அவர்களுக்கு  எல்லா வெங்காய உற்பத்தியும் ( சமையல் மற்றும் விதை)  ஒன்றே. விதை வெங்காயம் சிறிய சைஸ் ஆக , அதிக அளவில் உற்பத்தி செய்வதால...

வெங்காயம் கேள்வி - பதில்

நண்பர்களே. நான் வைகாசி பட்டத்தில் ஒரு ஏக்கரில் சின்ன வெங்காயம் நடபோகிறேன். அடி உரமாக நாட்டு மாடு கிடை போட்டுள்ளேன். என் நிலத்தில் கோரை, அருகம் புல் மற்றும் பார்த்தினியம் வகைகள் அதிகமாக உள்ளது. எல்லோரும் களக்கொல்லி அடித்துவிட்டு நட சொல்லுகின்றனர். ஆனால் எனக்கு விருப்பமில்லை. களக்கொல்லிக்கு மற்று இருந்தால் தகவல் சொல்லுங்கள் நண்பர்களே.   பதில் - 1 ரோட்டவேட்டர் போட்டு இரண்டு மூன்று முறை வெட்டி விடலாம் பதில் - 2 உரத்தை நிலம் முழுக்க தூவினால் தொழுஉரத்திலுள்ள விதைகள் நன்கு முளைத்து வரும். இதற்கு பதிலாக உரத்தை நீர்பாசனம் செய்யும் ஓரு பாரை இரு பக்கமும் வாய்க்காலை அடைத்து பார முழுதும் தொழு உரமிடலாம், இதை ஓரு பார் விட்டு ஓரு பாரில் செய்யலாம், அப்போது ஓரு வாய்க்காலி ல் நீரும் அடுத்தவாய்க்காலில் உரமும் இருக்கும். உரத்தை நிலத்திற்கு மேலேயே போட வேண்டும், நீண்ட நாட்களுக்கு பலன் கொடுக்கும். மண்ணிலிட்டு உழுதால் மண்ணோடு மண்ணாக சீக்கிரம் மக்கி விடும், பயீரை விட களைகளுக்கே உரம் பயனளிக்கும். தற்போது தற்காலிக தீர்வாக ஒரு முறை உழவு செய்யவும், சிறிது நீர் பாய்ச்சி களைகள் வளர விட்டு மீண்டும் ஓருமுறை உழவு செ...