புடலங்காய் கொடிவகையான காய்கறி வகையைச் சேர்ந்த ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். வீட்டுத் தோட்டங்களில் தொங்கும் புடலங்காயின் தாயகம் இந்தியா. இதன் தாவர விஞ்ஞானப் பெயர், டிரிச்சோசன்தீன் ஆங்கினா என்பதாகும். இவற்றின் காய்கள் நீண்டு பச்சையாக தொங்கும். புடலங்காயில் கொத்துப்புடல், நாய்ப்புடல், பன்றிப்புடல், பேய்ப்புடல் என பலவகை உள்ளது. பன்றிப்புடல் கொடியாக இருந்தாலும் நீளமாக இல்லாமல் நீளம் குறைவாக இருக்கும். பேய்புடல் மிகவும் கசப்பானது. அதனால் இதனை சமையலுக்கு பயன்படுத்த மாட்டார்கள். புடலங்காய் எப்படி பயிரிடுவது…? இரகங்கள் : கோ 1, கோ 2, பி.கே.எம். 1, எம்.டி.யூ. 1, பி.எல்.ஆர்.(எஸ்.ஜி.) 1, பி.எஸ்.எஸ். 694, மைக்கோ குட்டை ஆகிய இரகங்கள் உள்ளன. மண் புடலங்காய் ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இதன் சாகுபடிக்கு 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படும். இருமண் பாங்கான மண் வகைகள் குறிப்பாக மணற்சாரி வண்டல் மண் சாகுபடிக்கு ஏற்றது. மேலும் மித வெப்ப மண்டலப் பகுதிகளிலும் சாகுபடி செய்யலாம். பருவம் ஜூன் – ஜூலை மாதங்களும், டிசம்பர் – ஜனவரி மாதங்களும் சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும். நிலம் தயாரித்தல் நிலத்தை...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்