Skip to main content

Posts

Showing posts with the label வாழை வாடல் நோய் மேலாண்மை

வாழை வாடல் நோய் மேலாண்மை

 *தாக்குதலின் அறிகுறிகள்:*  முதலில், அடிப்புற இலைகளில் குறிப்பாக இலை ஓரங்களில், மஞ்சள் நிற மாற்றம் மற்றும் வாடிக் காணப்படும்.  பின்பு இந்த ம‌ஞ்சள் நிறம், இலையின் மையப்பகுதி வரை பரவி, ஓரங்கள் கா‌ய்ந்து போகும். பாதிக்கப்பட்ட மரத்தின் அடி இலைகள், இலைக்காம்புடன் ஒடிந்து தண்டைச் சுற்றி தொங்கும். இது மரத்திற்கு பாவாடை கட்டியது போல் தோற்றமளிக்கும். அடிக்கிழங்கை குறுக்காக வெட்டிப் பார்க்கும் போது நிற மாற்றம் வட்டவடிவில் கிழங்கின் நடுப்பகுதியில் அதாவது சாற்றுக்குழாய் தொகுப்பில் தாக்கம் அதிகளவில் இருக்கும்.  தண்டினை நீளவாக்கில் பிளந்து பார்த்தாலும் இந்நிற மாற்றம் தெரி‌‌யும்.இந்நோய் மண்ணின் மு‌‌‌லம் பரவுகின்றது.  பூஞ்சையானது மெல்லிய சல்லி வேர்களின் வழியே உட் புகுகிறது.  அமில மற்றும் வண்டல் மண் வகைகளில் நோய்த் தாக்கம் அதிகம்.இப்பூஞ்சைகள், கன்றுகள், கிழுங்கு, வயலில் பயன்படுத்தும் கருவிகள், வாகனங்கள், பாசன நீர் போற்வற்றின் வழியே பரவுகின்றது.  *நோய் வருமுன் எடுக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள்:*  வாடல் நோய் அதிக அளவில் காணப்படும் நிலங்களில் இந்நோய்க்கு எதிர்ப்புத்...