Skip to main content

Posts

Showing posts with the label நெல்

நெல் வயல்களில் பாசி படர்வதை தவிர்க்க

1. உப்புத்தன்மை உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் கிணற்று நீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆற்றுத் தண்ணீரை பயன்படுத்துவது நல்லது.  2. ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ அல்லது ஒரு லிட்டர் வேம் 15 நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பாசனத்தின் வழியாக கொடுக்கலாம்.  3. ஒவ்வொரு ஐந்து அல்லது ஏழு நாட்களுக்கு ஒரு முறை இ எம் கரைசல் 200 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர்  பாசனத்துடன் கலந்து கொடுக்கலாம். 4. ஜிங்க் மொபைலைசிங் பாக்டீரியா ஒரு லிட்டரை 200 லிட்டருடன் கலந்து கொடுக்கலாம்.  5. மாலை வேளையில் மட்டுமே நீர்ப்பாசனம் செய்யலாம். இரண்டு சென்டிமீட்டர் அளவுக்கு மட்டும் தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம். அதிகம் தண்ணீர் கொடுப்பது உப்பு பெருக்கத்திற்கும் அதன் மூலம் பாசிப் பெருகுவதற்கும் வாய்ப்பாக அமையும்.  6. நிலத்தின் ஈரம் குறைவதை உன்னிப்பாக கவனித்து மீண்டும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நிலத்தை காய விடக்கூடாது.  7. 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி மீன் அமிலம் அல்லது 200 மில்லி பஞ்சகாவியா அல்லது இஎம் கரைசல் திரவத்தை தெளிப்பாக வாரம் ஒரு முறை கொடுக்கலாம்.

ஆற்காடு கிச்சிலி சம்பா இடுபொருள் பற்றிய விவரங்கள்.

பயிரின் மொத்த நிலப்பரப்பு : ஒன்னரை ஏக்கர். நாற்றின் வயது :18 நாள். ஜீவாமிர்தம், மீன்அமிலம், கடலைபுண்ணாக்கு, கலந்த பாசனம் - 9 தெளிப்புகள் : 1.சூடோமோனஸ் (38 வது நாள்) 2.மீன்அமிலம் (53 வது நாள்) 3. அக்னி அஸ்திரம் (85 து நாள்) ஊட்டஉரம் அளித்தது மொத்தத்தில் 1785  கிலோ. 1. அடியுரம் 2.68 வது நாள் 3.109 வது நாள் # கைக்களை -33 நாள் கோனோவீடர் -1 (58 வது நாள்)  குறைகள் : ஆள்பற்றாக்குறையால் நடவு மற்றும் களையெடுப்புகள் தாமதமாகி போனது. வழக்கமாக 13 நாள் நாற்றை நடவு செய்வோம். கோனோவீடரை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தியதால் கிளைப்புகளின் எண்ணிக்கை 20 -25 என்ற அளவிலேயே இருந்தது. மூன்று முறை போடும்போது 40- 50 கிளைப்புகள் இருக்கும். பயிரில் எந்த பிரச்சனைகளும் இல்லை, நெல்மணிகள் நன்கு திரட்சியாய் உள்ளது. நோய், பூச்சி தாக்குதல், எலி வெட்டு அறவே இல்லை. பூச்சி கட்டுபாட்டிற்கு விளக்குபொறி, இனக்கவர்ச்சி என எதையும் எங்கள் பண்ணையில் வைப்பதில்லை, காரணம் உயிர்பன்மயசூழல் மற்றும் உயிரினங்களின் உணவு சங்கிலி சிறப்பாய் எங்கள் பண்ணையில் அமைந்திருப்பதாக  உணர்கிறேன். பூச்சிகளை கட்டுபடுத்த பொறிவண்டுகள்...

நெல்

இயற்கை விவசாயத்திற்கு நெல் விதை தேர்வு மாப்பிள்ளை சம்பா நெல் பயிரின் பராமரிப்பு அட்டவணை நெல் விதைகளை கேப்சூல்களில் அடைத்து விதைக்கும் முறை உப்பு நிலங்களில் நெல் வகை நெல் பயிர்களை பற்றிய கண்ணோட்டம் காணாமல் போன தமிழரின் பாரம்பரிய நெல் ரகங்கள் வீரிய நெல் நாற்று உற்பத்தி - சில யுக்திகள் சீரக சம்பா நெல் பயிரின் பராமரிப்பு அட்டவணை நெல் நிறைய ஆரம்பகால பிரச்சனை அக்டோபர் மாதத்தில் நெற்பயிர் விவசாயம் செய்வோர் செய்ய வேண்டியவை கருப்பு கவுனி நெல் பயிரின் பராமரிப்பு அட்டவணை நாற்றங்கால் தயாரிப்பு மற்றும் அமைக்கும் முறை

நெல் ADT -53

வயது 105 முதல் 110 நாட்கள் வரை இருக்கும் குருவை கோடை மற்றும் நவரை பருவத்திற்கு ஏற்றதாகும். நடுத்தர உயரம் நிமிர்ந்த பயிர் அமைப்பு மற்றும் உயர் விளைச்சல் திறன் கொண்டதாகும் . அதிகபச்ச மகசூல் 9875 கேஜி/ha   சாயாத தன்மை கச்சிதமான பயிர் அமைப்பு முற்றிலும் வெளிவந்த நெருக்கமான கதிர்களை கொண்ட சிறந்த ரகமாகும் . நடுத்தர சன்ன அரிசி அதிக அரவை திறன் மற்றும் முழு அரிசி காணும் திறன் கொண்டதாகும் .  தண்டு துளைப்பான்  இலை முடக்கு புழுவிற்கு மிதமான எதிர்ப்பு தன்மை கொண்டதாகும். குலை நோய், இலை உரை அழுகல், செம்புள்ளி நோய்களுக்கும் மிதமான எதிப்புத்தன்மை கொண்டதாகும் தமிழ் நாட்டில் அணைத்து பருவ மண்டலங்களுக்கு ஏற்றது ஆகும் இந்த ரகம்  

Rice VGD 1

Rice VGD 1 வயது 130 நாட்கள்  சம்ப மாற்று பின் சம்பா பட்டங்களில் திண்டுக்கல் , தேனி , திருச்சி , பெரம்பலூர், கரூர் , கோயம்புத்தூர் , ஈரோடு , தர்மபுரி , மற்றும் வேலூர் மாவட்டங்களில் பயிரிட ஏற்றது . நடுத்தர உயரம் மற்றும் அதிக தூர்கள் சாயா தன்மை உடையது  அரிசியின் தரம் சீராக சம்பா அரிசியின் தரத்திற்கு ஒத்து இருக்கும்  சராசரியாக 5850 கேஜி /ha வரை கிடைக்கும் அதிகபச்சமாக  9500 கேஜி /HA  வரை கிடைக்கும்  இலை சுருட்டு புழு , குலை நோய் , மற்றும் செம்புள்ளி நோய்களுக்கும் நடுத்தர எதிர்ப்பு தன்மை கொண்டது  சன்ன வெள்ளை அரிசி மிதமான வாசனை உடையது மேலும் பிரியாணி மற்றும் குஸ்கா செய்ய உகந்ததாகும் .

நெல் இணையதளம்

இது உலகின் முதன்மை ஆராய்ச்சி அமைப்பு ஆகும் . அரிசியை  அறிவியல் மூலம் செய்து வறுமை மற்றும் பசியைக் குறைக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ள அமைப்பாகும் நெல் விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் ஆரோக்கியம் மற்றும் நலனை மேம்படுத்துதல் IRRI யின்  நோக்கமாகும். மேலும்  வருங்கால சந்ததியினருக்கு அரிசி வளரும் சூழலைப் பாதுகாத்து கொடுப்பது இதன் முக்கிய நோக்கமாகும். ஐஆர்ஆர்ஐ ஒரு சுயாதீனமான, இலாப நோக்கற்ற, ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம் ஆகும்.         International Rice Research Institute   ( click here ) 1960 இல் ஃபோர்டு மற்றும் ராக்பெல்லர் மூலம்  பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் ஆதரவுடன் நிறுவப்பட்டது. பிலிப்பைன்ஸின் லாஸ் பானோஸை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் அரிசி வளரும் 17 நாடுகளில் அலுவலகங்களையும், 1,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களையும் கொண்டுள்ளது. உள்நாட்டு நிறுவனங்களுடன்  இணைந்து, ஐ.ஆர்.ஆர்.ஐ மேம்பட்ட அரிசி வகைகளை உருவாக்குவது , அவை அதிக தானியங்களை விளைவிக்கும் மற்றும் பூச்சிகள் மற்றும் நோய்களை நன்கு தாங்கும், அத்துடன் வெள்ள...