ants control methods vegetable garden விவசாயத்தை பொறுத்தவரை எறும்புகள் நல்லவனா இல்லை கெட்டவனா என்று கேள்வி கேட்டால் பதில் சில நேரங்களில் நல்லவன் சில நேரங்களில் கெட்டவன் என்றுதான் பதில் சொல்ல முடியும் . எறும்புகள் நல்லவன் என்பதற்கு உதாரணம் சொல்லணுமுனா , உங்களுக்கு ஜாதவ் பயேங் பற்றி தெரியுமா , அவர்தான் பிரம்மபுத்திரா நதி வறண்ட தீவுகளில் தனி ஒரு ஆளாக பெரிய காட்டை உருவாக்கியவர் . அந்த வரண்ட இறுகிய நில மண்ணை பண்படுத்த அவர் பயன்படுத்தியது சிவப்பு எறும்புகளைத்தான் , இதிலிருந்து புரிந்திருக்கும் ஒரு மண் வளமாக்க எறும்பு எவ்வளவு முக்கியம் என்று . சில சமயங்களில் எறும்புகள் சிறந்த பால்லினேட்டராகவும் செயல் படுகிறது . அப்ப எறும்புகளால் என்ன பாதிப்பு ? இப்ப ஒரு தேனியை எடுத்துக்கொண்டால் பறந்து சென்று மகரந்தத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடும் . அதுவே எறும்பு ஊர்ந்து சென்று எடுக்கும் அதன் கால்களில் ஓட்டும் தேன் செடிகளில் பரவி பூஞ்சை நோயை உருவாக்கும் . மண் பகுதியில் இருக்கும் போது செடிகளின் வேர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் , சில சமயம் பழங்களுக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தும். நாம் இந்த கட்டுரைய...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்