தாக்குதலின் தன்மை முதலில், அடிப்புற இலைகளில் குறிப்பாக இலை ஓரங்களில், மஞ்சள் நிற மாற்றம் மற்றும் வாடிக் காணப்படும். பி ன்பு இந்த மஞ்சள் நிறம், இலையின் மையப்பகுதி வரை பரவி, ஓரங்கள் காய்ந்து போகும். தாக்குதல் அதிகரிக்கும் போது, மரத்தின் உச்சி இலைகள் விறைப்பாக மாறும். இது ஈட்டி போன்ற வடிவில் காட்சியளிக்கும். பாதிக்கப்பட்ட மரத்தின் அடி இலைகள், இலைக்காம்புடன் ஒடிந்து தண்டைச் சுற்றி தொங்கும். இது மரத்திற்கு பாவாடை கட்டியது போல் தோற்றமளிக்கும். உட்புற அறிகுறிகளில், அடிக்கிழங்கை குறுக்காக வெட்டிப் பார்த்தால், நீர் மற்றும் சத்துக்களைக் கடத்தும் ஸைலம் குழாய்த் தொகுப்பு மஞ்சள் அல்லது செம்பழுப்பு நிறத்தில் மாறி இருக்கும். இத்திசுக்களில் பூஞ்சாணங்கள் வளர்ந்திருக்கும். குறுக்காக வெட்டிப் பார்க்கும் போது நிற மாற்றம் வட்டவடிவில் கிழங்கின் நடுப்பகுதியில் அதாவது சாற்றுக்குழாய் தொகுப்பில் தாக்கம் அதிகளவில் இருக்கும். தண்டினை நீளவாக்கில் பிளந்து பார்த்தாலும் இந்நிற மாற்றம் தெரியும். செவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன், விருப்பாட்சி மற்றும் பல உள்ளூர் இரகங்களை இந்நோய் தாக்கி பெரும் சேதத்தை விளைவிக்கின்றது. வாட...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்