கத்தரி, சோலானம் மெலான்சினா தெற்காசியாவின் மூன்று முக்கி ய காய்கறி பயிர்களில் ஒன்றாகும், இது உலகின் பரப்பளவில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் சாகுபடி செய்யப்படுகின்றது. உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக, கத்தரிக்காய் உற்பத்தியில் இந்திய இரண்டாவது இடம் வகிக்கின்றது இது இந்தியாவில் வணிக மற் றும்தோட்டப்பயிராகவும் வளர்க்கப்படுகிறது. இது ‘ காய்கறிகளின் அரசன் ’ என்றும் ஏழைகளின் காய்கறி ’ என்றும் அழைக்கப்படுகின்றது. 35 க்கும் மேற்பட்ட பூச்சி இனங்களால் கத்திரி பயிர்,நாற்றங்காலில் இருந்து அறுவடை வரை தாக்கப்படுகிறது. இவற்றில், கத்தரிக்காய் குருத்து மற் றும் காய் துளைப்பான் , லியூசினோடஸ் ஆர்போனாலிஸ், 50-90 % அளவில் கத்திரி பயிரில் பெரும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகிறது. எந்த ஒரு பயிர்பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றாத போது 90% மேல் பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகிறது. கத்தரி பயிரின் இன்றியமையாமையை கருத்தில் கொண்டும், கத்தரியின் குருத்து மற்றும் காய் துளைப்பான் அந்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தாலும் இவற்றின் வாழ்க்கை சுழற்சி மற்றும் எளிய ஒருங்கிண...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்