Ad Code

Responsive Advertisement

கத்தரியில் குருத்து மற்றும் காய்துளைப்பான் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை



 
கத்தரி, சோலானம் மெலான்சினா தெற்காசியாவின்  மூன்று முக்கி ய
காய்கறி பயிர்களில் ஒன்றாகும், இது உலகின் பரப்பளவில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் சாகுபடி செய்யப்படுகின்றது. உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக, கத்தரிக்காய் உற்பத்தியில்  இந்திய  இரண்டாவது இடம் வகிக்கின்றது  இது இந்தியாவில் வணிக மற் றும்தோட்டப்பயிராகவும் வளர்க்கப்படுகிறது. இது ‘ காய்கறிகளின் அரசன் ’ என்றும் ஏழைகளின் காய்கறி ’ என்றும்  அழைக்கப்படுகின்றது. 35 க்கும் மேற்பட்ட பூச்சி இனங்களால் கத்திரி பயிர்,நாற்றங்காலில் இருந்து அறுவடை வரை தாக்கப்படுகிறது. இவற்றில், கத்தரிக்காய்


குருத்து மற் றும் காய் துளைப்பான் , லியூசினோடஸ் ஆர்போனாலிஸ், 50-90 % அளவில் கத்திரி பயிரில் பெரும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகிறது. எந்த ஒரு பயிர்பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றாத போது 90% மேல் பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகிறது. கத்தரி பயிரின் இன்றியமையாமையை கருத்தில் கொண்டும், கத்தரியின் குருத்து மற்றும் காய் துளைப்பான் அந்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தாலும் இவற்றின் வாழ்க்கை  சுழற்சி மற்றும் எளிய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை  முறைமைகளும் இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளன.


ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை




ஒவ்வொரு பருவத்திலும் தொடர்ந்து கத்தரிக்காய் பயிர் செய்வதைத் தவிர்க்கவும் ஒரே  பருவத்தில் பெரும் பரப்பில் கத்தரி பயிரிடும் போது அவற்றின் சேத அளவை  குறைக்கலாம்  இப்பூச்சி ஆனது கத்தரி 
தவிர தக்காளி, மிளகாய், உருளைக்கிழங்கு போன்ற பிற சோலானேசியே குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களிலும் வளரும் தன்மை கொண்டது. ஆகையால் இத்தகய பயிர்களை கத்தரி அருகில் பயிரிடக்கூடாது இப்பூச்சியை கட் டுப்படுத்த குறிப்பிடத்தக்க எதிர்ப்புத்திறன் கொண்ட எந்த ஒரு கத்தரி ரகங்களும் இதுவரை உருவாக்கப்படவில்லை. 


பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் நீண்ட  குறுகிய கத்தரிக்காய் ரகங்களை தெரிந்தெடுத்து வளர்க்கலாம்  கத்தரி பயிரில் பெருஞ்சீரகம் மற்றும் கொத்தமல்லியை ஊடுபயிராக பயிரிடலாம் நாற்றுகளை நடவு செய்வதற்கு முன், இமிடாக்குளோப்ரிடில் 1 மி.லி/ லிட்டர் தண்ணீரில் கத்தரி நாற்றுகளை நனைத்து நாற்றுகளை நேர்த்தி செய்யலாம். முதிர்ந்த அந்திப் பூச்சிகளைப் கவர்ந்து அழிக்க வயலில், ஏக்கருக்கு @ 4-5 இனக்கவர்ச்சி நீர்ப்பொறிகளை பயிர் மட்டத்தில் பொருத்த வேண்டும் மேலும் 15 நாட்களுக்கு ஒருமுறை புதிய தரமான இனக்கவர்ச்சி குப்பிகளை மாற்ற வேண்டும்.


 இரவு நேரங்களில் 1-2/ ஏக்கர் என்ற அளவில் விளக்குப் பொறிகளை வைத்து அந்திப்பூச்சிகளைப் கவர்ந்து அழிக்கலாம் . இப்பூச்சியால் சேதமடைந்த வாடிய நுனிக்குருத்துகள் மற்றும் துளையுடன் கூடிய காய்களையும் சேகரிக்கப்பட்டு அவற்றை தீயிட்டு அல்லது நிலத்தில் புதைத்து உடனடியாக அழிக்க வேண்டும் ட்ரைகோ கிராம்மா சிலோனிஸ் முட்டை ஒட்டுண்ணிகளை 0.5 லட்சம் முட்டைகள் /ஏக்கர் என்ற அளவில் வயலில் விட வேண்டும்.
 

பேசில்ஸ் துரிஞ்சியென்சிஸ்  குர்ஸ்டாக்கி என்ற பாக்டீரிய நுண்ணுயிர் பூச்சிக்கொல்லியை பாதிக்கப்பட்ட வயலில் தெளிக்கலாம் செயற்கை பைரித்ராய்டு பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் .

By 

       Smart Vivasayi 
 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement