சிறு தொகுப்பு (Bio Control Agents) 1. வண்டினங்களை அதன் புழுப்பருவத்திலேயே அழிக்க: மெட்டாரைசியம் அனிசோபிலியே (Metarhizium Anisopliae) பூஞ்சானம் 2. வெர்ட்டிசீலியம் லெக்கானி (Verticillium Lecanii): - சாறு உறிஞ்சும் பூச்சிகள், மெல்லிய தோல் கொண்ட பூச்சியின கட்டுப்பாட்டிற்கு. 3. பெவேரியா பேசியானா (Beauveria Bassiana): - தடித்த தோல் கொண்ட பூச்சியின கட்டுப்பாட்டிற்கு. (இலைப்புழு, காய்ப்புழு போன்றவை) 4. வெர்ட்டிசீலியம் லெக்கானி (Verticillium Lecanii): இந்தப் பூஞ்சணம் வெள்ளை ஈ, மாவுப்பூச்சி, செதில்பூச்சி, தத்துப்பூச்சி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. காய்கறிகள், பூக்கள், பப்பாளி போன்ற பயிர்களில் இதைப் பயன்படுத்தலாம். ஏக்கருக்கு ஒரு கிலோ வெர்ட்டிசீலியம் பூஞ்சணத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். சொட்டுநீர்ப் பாசனம் மூலமாகக் கொடுக்க நினைப்பவர்கள், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து கொடுக்கலாம். சொட்டுநீரில் கொடுக்கும்போது கரைசலை நன்றாகக் கரைத்து, வடிகட்டிக் கொடுக்க வேண்டும். 5. மெட்டாரைசியம் அனிசோபிலியே (Metarhizium Anisopliae...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்