Skip to main content

Posts

Showing posts with the label Trees

மரம் வளர்ப்பும் அதன் வருமானமும்

Which trees grow to earn high price in india  மரப்பயிர் வளர்ப்பு , தானியப்பயிர்கள் போலவோ அல்லது காய்கறி பயிர்கள் போலவோ மூன்று மாதத்தில் பலன் கொடுக்க போவதில்லை, நாம் தேர்ந்தெடுக்க போகும் மரத்தை பொறுத்து 6 முதல் 25 வருடங்கள் வரை அல்லது அதற்கு மேல் கூட ஆகலாம் . இதனாலேயே விவசாயிகள் தேக்கு , குமிழ் போன்ற மரப்பயிர்களை நீண்டகால வருமானமாக நினைக்கின்றனர் . பெரும்பாலும் விவசாயிகள் ஏன் மரப்பயிர் வேளாண்மைக்கு மாறுகின்றனை என்று பார்த்தால் இடுபொருள்களின் விலை ஏற்றம் ஆட்கள் பற்றாக்குறை , மரப்பயிர்கள் நடுவதால் குறைந்த பராமரிப்பு நல்ல லாபம் மேலும் சில விவசாயிகள் ஊடு பயிர் செய்தும் நல்ல லாபம் பார்க்கின்றனர் . நாம் இந்த கட்டுரையில் என்ன மரம் வளர்த்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று பார்க்கலாம் . சவுக்கு மரம்  வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மரமாகும் , மிகவும் விரைவாக வளரக்கூடியது, கேஷீரினா ஈகோசெட்டிஃபோலியா. கேஷீரினா ஜீங்குனியானா என இரண்டு வகைகள் உள்ளன . மணல் , வண்டல் மண் , செம்மண் நிலங்களில் நன்றாக வளரும் , ஏக்கருக்கு 4000 கன்றுகள் வைக்கலாம். ஊடு பயிராக நிலக்கடலை, ஊடுபயிராக வளர்க்கலா...

வேலி ஓரங்களில் என்ன மரம் நடலாம்

What tree can be planted along the edges of the fence வேலி ஓரங்களில் மரக்கன்று வேலி ஓரங்களில் மரக்கன்று நடுவதற்க்கு முன் மண் அமைப்பை பார்த்துக்கொள்ளுங்கள் .  உதாரணமாக செம்மண் செம்மண் சரளை மணல் போன்ற அமைப்பு இருந்து தண்ணீர் அளவாகத்தான் பயன் படுத்துவீர்கள்  என்றால் எல்லா வகையான மரக்கன்றுகளும் நடலாம் . பொதுவா தமிழ் நாட்டோட மரத்தேவைக்காக வீடுகளுக்கும் அல்லது தொழிசாலைகளுக்கும் எல்லாத்தேவைகளுக்கும் ஏற்றமாதிரி எல்லா மரங்களும் வேலிப்பயிராக  நடலாம் . செம்மரம் , சந்தன மரம் , தேக்கு , குமிழ் , மகாகனி ,பெருமரம் , கரு மருது , நீர் மருது மற்றும் கருங்காலி  இதெல்லாம் பொதுவா நடக்கூடிய மரங்கள் . இதை தவிர்த்து ஒரே வகை மரங்கள் நடலாம் என்றால் மலை வேம்பு , ஆச்சா மற்றும் சவுக்கு மரங்கள் நடலாம் இதுஎல்லாமே வேலிகளில் நடக்கக்கூடிய பயிர்கள் . இடத்தை பொறுத்து சூழ்நிலையை பொறுத்து நடலாம் . நம்ம பாத்துகிற மாதிரி பாதுகாத்துகிற மாதிரி இருந்தால் சந்தனமரம் செம்மரம் மாதிரி உயர் ரக மரங்களை வைக்கலாம் . இல்லையென்றால் இது இரண்டும் நீங்கலாக மற்ற மரங்களை வைக்கலாம்  களிமண் நிலங்களில்  களிமண்ணாக இருந...

பழ மரம் வளர்ப்பு - நாவல் பழப்பயிர் சாகுபடி - Fruit Tree Cultivation - Novel Fruit Cultivation

Fruit Tree Cultivation - Novel Fruit Cultivation நாவல் மரம் அனைத்து மண்ணிலும் வளரும். எனினும் அதிக உற்பத்தி திறன் மற்றும் தரமான வளர்ச்சிக்கு களிமண் அல்லது நன்கு வடிகால் வசதியுள்ள மண்  தேவை. இத்தகைய மண் போதுமான ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்கிறது. இதனால் வளர்ச்சி நன்றாக இருப்பதோடு அதிக பழங்களையும் அளிக்கிறது. நாவல் உப்புத் தன்மை மற்றும் நீர் தேங்கிய நிலையிலும் நன்றாக வளரும். எனினும், அடர்ந்த அல்லது இலகுவான மணற்பரப்பில் நாவல் மரம் வளர்ப்பது இலாபமாக இருக்காது. விதை மற்றும் நாற்று முறையில் நாவல் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நாவல் மரம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய சிறுபான்மை பழப்பயிர். இதன் பழங்களில் கனிமங்கள், சர்க்கரை, புரதங்கள் மற்றும் இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளன. நாவல் மரத்தில் நாற்றுகள் 8 முதல் 10 ஆண்டுகளிலும், ஒட்டுச் செடிகள் 6 முதல் 7 ஆண்டுகளிலும் பலன் கொடுக்கும். மேலும் மரங்கள் தொடர்ந்து 50, 60 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும். நாற்று மூலம் வளர்ந்த மரம் ஒன்றிலிருந்து ஆண்டுக்கு 80 முதல் 100 கிலோ வரை பழங்கள் கிடைக்கும். ஒட்டுச் செடி மரத்திலிருந்து 60 முதல் 70 கிலோ வரை மட்டுமே ...

குமிழ் மரம்

குறைந்த காலத்தில், அதிக வருமானம் தரும் மர வகைகளில் முக்கிய இடத்தில் இருப்பது குமிழ் மரம். இதை சாகுபடி  செய்ய ஏக்கர் கணக்கில் இடம் தேவையில்லை. வரப்பு, வாய்க்கால், காலி இடம் என கைவசம் இருக்கும் எந்த இடத்திலும் நடலாம். இது, ஆணிவேர் தாவரம் என்பதால், பக்கவேர்கள் அதிகமாக வளராது. அதனால் குறைந்த இடைவெளியிலும் இந்த மரத்தை நடவு செய்யலாம். தேக்குக் குடும்பத்தைச் சேர்ந்த இம்மரம், இழைப்பதற்கு இலகுவாகவும், அதேசமயம் உறுதியாகவும் உள்ளதால் கடந்த சில ஆண்டுகளாக குமிழ் மரத்தின் தேவை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக விற்பனையில் வீறுநடை போடுகிறது இம்மரம்! குமிழ் மரத்தை வணிகரீதியாக எப்படி சாகுபடி செய்வது? மறுதாம்பிலும் வருமானம் : குமிழ், நல்ல வடிகால் வசதியுள்ள ஆழமான மண்கண்டமுள்ள அனைத்து மண் வகைகளிலும் சிறப்பாக வளரும். சாகுபடி நிலத்தை உழவு செய்து 15 அடிக்கு, 15 அடி இடைவெளியில், இரண்டு அடி நீள, அகல, ஆழமுள்ள குழியெடுத்து, நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழியிலும் மட்கிய தொழு உரம் மற்றும் வண்டல் மண்ணைக் கலந்து முக்கால் பாகத்துக்கு நிரப்பி, மீதமுள்ள குழியை மேல் மண் கொண்டு நிரப்ப வேண்டும். ஏக்கருக்கு 200 கன்றுகள் த...

மரங்கள் நடும் முறை

அநேக மரங்கள் விதைகள் மூலமும் சில மரங்கள் போத்துக்ள நட்டும் இன்னும் சில மரங்கள் பதியன்கள் மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. மரககன்றுகளை  நன்கு தயார் செய்யப்பட்ட ( 1 x 1 x 1 மீ) குழிகளில் மேல் மண்ணுடன் சம அளவு மக்கிய மாட்டு உரம் கலந்து நிரப்பி தண்ணீர் விட்டடு பின்பு மரக்கன்றுகளை நட வேண்டும். மரங்கள் வளரும் தன்மையைப்பொருத்து தக்க இடைவெளி விட்டு நட வேண்டும். மரங்கள் வளரும் போது தரையிலிருந்து 2 மீட்டர் உயரம் வரை பக்க கிளைகள் இல்லாமல் ஒரே அடி மரத்துடன் இருக்குமாறு வளர்க்க வேண்டும். *மரங்களின் வகைகள்* அலங்கார மரங்களை மலர் மரங்கள் , நிழல் மரங்கள் , இலை அழகு மரங்கள் என 3 பிரிவுகளாகப்பிரிக்கலாம். *மலர் மரங்கள்* பேய் மரம் இனிய மணமுடைய வெண்மை நிற மலர்கள் கொத்து கொத்தாக பூக்கும் காய்கள் 30 -50 செ.மீ நீளம் கொத்தாகத் தொங்கும் விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. *மந்தாரை* இலைகள் ஒட்டகத்தின் கால் தடத்தைப் போன்ற வடிவில் இருக்கும் மலர்கள் இளஞ்சிவப்பு , வெள்ளை , வெள்ளை மலர்களில் சிவப்பு கோடுகள் , மஞ்சள் ஆகிய நிறங்களில் உள்ளன. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. *பத்திரி* தொங்கும் ...