Ad Code

Ticker

6/recent/ticker-posts

மரம் வளர்ப்பும் அதன் வருமானமும்

Which trees grow to earn high price in india 




மரப்பயிர் வளர்ப்பு , தானியப்பயிர்கள் போலவோ அல்லது காய்கறி பயிர்கள் போலவோ மூன்று மாதத்தில் பலன் கொடுக்க போவதில்லை, நாம் தேர்ந்தெடுக்க போகும் மரத்தை பொறுத்து 6 முதல் 25 வருடங்கள் வரை அல்லது அதற்கு மேல் கூட ஆகலாம் . இதனாலேயே விவசாயிகள் தேக்கு , குமிழ் போன்ற மரப்பயிர்களை நீண்டகால வருமானமாக நினைக்கின்றனர் . பெரும்பாலும் விவசாயிகள் ஏன் மரப்பயிர் வேளாண்மைக்கு மாறுகின்றனை என்று பார்த்தால் இடுபொருள்களின் விலை ஏற்றம் ஆட்கள் பற்றாக்குறை , மரப்பயிர்கள் நடுவதால் குறைந்த பராமரிப்பு நல்ல லாபம் மேலும் சில விவசாயிகள் ஊடு பயிர் செய்தும் நல்ல லாபம் பார்க்கின்றனர் . நாம் இந்த கட்டுரையில் என்ன மரம் வளர்த்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று பார்க்கலாம் .


சவுக்கு மரம் 



வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மரமாகும் , மிகவும் விரைவாக வளரக்கூடியது, கேஷீரினா ஈகோசெட்டிஃபோலியா.
கேஷீரினா ஜீங்குனியானா என இரண்டு வகைகள் உள்ளன . மணல் , வண்டல் மண் , செம்மண் நிலங்களில் நன்றாக வளரும் , ஏக்கருக்கு 4000 கன்றுகள் வைக்கலாம். ஊடு பயிராக நிலக்கடலை, ஊடுபயிராக வளர்க்கலாம். மணற்பாங்கான நிலங்களில் தர்ப்பூசணியும், செம்மண்ணில் எண்ணெய் வித்து பயிரான எள் கடின மண்ணில் பயறு வகைகளையும் ஊடுபயிராகப் பயிரிடலாம். 3 வருடத்தில் வருமானம்  வர ஆரம்பிக்கும் . கட்ட வேலைகளுக்காக ,  ஏரி பொருள் மற்றும் காகித கூழ் தயாரிக்க பயன்படுகிறது உத்தேசமாக ஏக்கருக்கு 80000 வரை வருமானம் கிடைக்கும்
  


மூங்கில் மரம் 



பச்சை தங்கம் என்று அழைக்கப்படும் இந்த மூங்கில் மொத்தம் 1400 வகைகள் உள்ளன . தமிழ் நாட்டில் பெருவாரை (பொந்து மூங்கில்) மற்றும் சிறுவாரை (கல் மூங்கில்) இரண்டு இனங்கள் இருந்தாலும் இவை முற்கள் கொண்டவை , இவற்றை பயிர்செய்வதில் அதிக சிரமம் இருப்பதால் , தமிழ் நாடு வனத்துறை ஆராய்ச்சி பிரிவு 4 முள்ளில்லா ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது


 .பேம்பூஸா வல்காரிஸ் ( Bambusa vulgaris)
பேம்பூஸா நூட்டன்ஸ் (Bambusa nutans)
பேம்பூஸா டுல்டா (Bambusa tulda)
பேம்பூஸா பல்கூவா (Bambusa balcooa)


செம்மண் இருமல் பாடு உள்ள நிலங்கள் ஏற்றவை , மற்ற நிலங்களில் குழிகளில் செம்மண் நிரப்பி நடவு செய்யலாம் . ஏக்கருக்கு 200 கன்றுகள் வரை நடலாம் 5 ஆண்டுகளுக்கு பிறகு வருமானம் கிடைக்கும். கட்டவேளை , காகித ஆலை பயன்படுகிறது , ஏக்கருக்கு 100000 வரை வருமானம் கிடைக்கிறது  


பெருமரம் 



ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட இந்த மரம் தமிழ் நாட்டில் அணைத்து பகுதிகளிலும் இந்த மரம் வளரும் , வறண்ட பகுதிகளுக்கு இந்த மரம் ஒரு வரப்பிரசாதமாகும் ஏக்கருக்கு 300 மரம் வரை நடலாம் . 6 ஆண்டுகளில் பலன் கொடுக்கக்கூடியது , இதில் இம் மரம் பென்சில் எழுதுப் பலகை நசடு பலகை தயாரிக்கப் பயன்படுகிறது. வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் மரப்பெட்டி, தக்காளி பெட்டி, டீ மற்றும் செஸ்ட் கேஸ்கள் ஒட்டுப்பலவை (பிளைவுட்) செய்யவும் பயன்படுகின்றது. மேலும் பழ வகைகள் அடி படாமல் எடுத்துச் செல்லும் பெட்டிகள் தயாரிக்கப் பயன்படுகிறது. கட்டிட வேலைகளுக்குகான செண்டிரிங் பலகைகளாகப் பயன்படுகிறது . ஏக்கருக்கு 3, 75000 வரை வருமானம் கிடைக்கும் 


இலவ  மரம்



ஆப்பிரிக்காவை தயக்கமாக கொண்ட இந்த ரகங்கள் தமிழ் நாட்டில் அணைத்து மண் வகைகளிலும் நன்கு வளரும் . ஏக்கருக்கு 200 மரங்கள் வரை வைக்கலாம் 4 ஆண்டுகளில் இருந்து காய்கள் கிடைக்க ஆரம்பிக்கும் . பஞ்ச , தீக்குச்சி தயாரிக்க அதிகம் பயன்படுகிறது ஏக்கருக்கு 5 லச்சம் ரூபாய் வரை கிடைக்கும் .


மலை வேம்பு 



இந்தியாவை தாயகமாக கொண்ட இந்த மரங்கள் அணைத்து விதமான மண் வகைகளில் வளரும் என்றாலும் , வடிகால் வசதி கொண்ட அணைத்து நிலங்கள் மற்றும் மணல் கலந்த வண்டல் மண் சிறந்தது . ஏக்கருக்கு 200 கன்றுகள் வரை வைக்கலாம் . 3 வது ஆண்டிலிருந்து தீக்குச்சி , 4 வது ஆண்டிலிருந்து பிளைவுட்  தயாரிக்கலாம் 7 ஆடுகளுக்கு மேல் மரப்பொருட்கள்  தயாரிக்கலாம் ஏக்கருக்கு  7 லச்சம் வரை கிடைக்கும் .


வேங்கை மரம் 



தேக்கிற்கு அடுத்து தரமான மரமாக கருதுவது இந்த வேங்கை மரம்தான் . வளமான ஆழமான செம்மண் நிலங்கள் மற்றும் மலையை ஒட்டிய சமவெளி பகுதிகள் ஏற்றவை . ஏக்கருக்கு 300 மரக்கன்றுகள் வரை வைக்கலாம் . 10 ஆண்டுகளில் வருமானம் கிடைக்கும் ஜன்னல் மேசை போன்ற மர பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது ஏக்கருக்கு  7 லச்சம் வரை கிடைக்கும் .


 குமிழ் மரம் 



இந்தியாவை பூர்விகமாக கொண்ட இந்த மரம் வடிகால் வசதி கொண்ட ஆழமான மண்கண்டம் உள்ள அணைத்து வகையான மண்ணிலும் வளரும் . ஏக்கருக்கு 200 கன்றுகள் வைக்கலாம் குமிழ் மரத்தின் இலை தழைகள் கால்நடைகளுக்கு தீவனமாகவும். தீப்பெட்டி மற்றும் தீக்குச்சி தயாரிக்கவும், ஒட்டுப்பலகை செய்ய ஏற்ற மரமாகும். மரத்துண்டுகள் பழுப்பு மஞ்சள் நிறமுடையதாலும் நெருங்கி ரேகை கொண்டதாலும், மிருதுவானதாலும் எளிதில் அறுக்கக்கூடிய தன்மையுடையதாலும் பலவிதமான கைவினைப் பொருட்கள் மற்றும் கதவு நிலை ஜன்னல்  மரச்சாமான்கள் செய்ய உகந்த மரமாகும் . 8 ஆண்டுகளில் வருமானம் கிடைக்கும் ஏக்கருக்கு 14 லச்சம் வரை கிடைக்கும் .


தேக்கு மரம் 



தென்னிந்திய காடுகளில் அதிகம் காணப்படும் இந்த மரங்கள் , நல்ல வடிகால் வசதி கொண்ட ஆற்று வண்டல் மண் மற்றும் மணற் பாங்கான செம்மண் நிலம் ஏற்றது . ஏக்கருக்கு 1000 கன்றுகள் வரை வைக்கலாம் . 25  ஆண்டுகளில் வருமானம் கிடைக்கும் 7 மற்றும்  12 வது வருடங்களில் கலைத்து விட வேண்டும் . மரப்பொருட்கள் தயாரிக்கலாம் . ஏக்கருக்கு 25 லச்ச ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் .


சந்தன மரம் 



தென் இந்தியாவை தாயகமாக கொண்ட இந்த மரங்கள் , உவர் நிலம் அல்லாத மண்கண்டம் உள்ள வேம்பு வளரும் அணைத்து நிலங்களும் சந்தன மரம் வளர்க்க ஏற்றவை . ஏக்கருக்கு 200 கன்றுகள் வரை நடலாம். 25 ஆண்டுகளில் இருந்து வருமானம் கொடுக்கும் நறுமண எண்ணெய் நிரம்பிய வைரமேறிய கட்டைகள் அதிகமான விலை மதிப்பை பெறுகின்றன. நறுமணத் தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவத் தேவைக்காகவும் மிகுந்த தேவையாகிறது. ஏக்கருக்கு 1 கோடி வரை வருமானம்  கிடைக்கும்


செஞ்சந்தன மரம் 



இந்தியாவை தாயகமாக கொண்ட இந்த மரங்கள் வடிகால் வசதி கொண்ட சரளை மண் செம்மண் நிலங்கள் ஏற்றவை . ஏக்கருக்கு 400 கன்றுகள் வரை வைக்கலாம் . அணுக்கதிர் ,வீச்சு ஒலி அலைகள் ஆகியவற்றை தடுக்கும் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது இம்மரத்தின் நடுக்கட்டையில் இயற்கைச் சுயமான சாந்தலின் உள்ளது. இது மருத்துவப் பொருட்களுக்கு வண்ணமேற்றியாகப் பெருமளவில் பயன்படுகிறது. மேலும் உணவுப்பொருட்கள்,காகிதத் தயாரிப்பு மற்றும் ஆடை தயாரிப்பு நிறுவனங்களிலும் வண்ணமாகப் பயன்படுகிறது. 20 ஆண்டுகளில் வருமானம் கொடுக்கும் ஏக்கருக்கு 1 கோடி வரை கிடைக்கும் 

G.M





Post a Comment

0 Comments