விவசாயிகளின் வருமானத்தை எப்படி பெருக்கலாம்

Organic farming  in india இந்தியாவை பொறுத்தவரை சிறு மற்றும் குறு விவசாயிகளின் எண்ணிக்கை மிக அதிகம் . நம் மாநிலத்திலும் அதே நிலைதான் . சராசரியாக இந்தியாவில் ஒவ்வொரு விவசாயிகளிடமும் 1.5 ஏக்கர் நிலம் உள்ளது , இந்த அளவு விவசாய நிலத்தில் எப்படி அதிக வருமானம் பெற முடியும் என்பதை நாம் இந்த கட்டுரையில் பார்ப்போம் .


விவசாய  செலவுகளை குறைக்க இயற்கை விவசாயத்திற்கு மாறுங்கள் 


விவசாயத்தை பொறுத்தவரை உழவு செய்யும் ட்ராக்டரிலிருந்து கடைசியாக அறுவடை செய்யும் எந்திரம் வரை பணம் அதிகம் செலவு வரும் . இந்த மாதிரியான இயந்திர செலவுகளை குறைக்க அரசாங்க திட்டங்களை பயன்படுத்தலாம் . இயற்கை விவசாயமாக செய்யும் போது பல இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகளை நாமே தயாரிப்பதால் செலவு குறையும் . இதை ஒரு குழுவாகவோ அல்லது FPO கள் மூலமாகவோ செய்யும்போது இன்னும் டிராக்டர் மற்றும் இடு பொருட்கள்  செலவு இன்னும் குறையும்  நமக்கு வருமானமும் பெருகும் .


தேனீ கட்டாயமாக வளர்க்க வேண்டும் - Honebee rearing 


இயற்கை விவசாயத்தில்  தேனீக்களின் பங்கு மிக முக்கியமானது . தேனீ பெட்டி வைத்து வளர்க்கும் போது நமக்கு இரண்டு லாபம் ஓன்று நமக்குக்கு மகசூல் அதிகம் கிடைக்கும் அடுத்து நல்ல தேன் கிடைக்கும் . இதை விற்பனையும் செய்யலாம் தேன் கெட்டு போகாத உணவு என்பதால் பல நாட்கள் கூட வைத்திருக்கலாம். ஒரு ஏக்கருக்கு குறைந்தது 3 தேனீ பெட்டியை வாங்கி வைக்கலாம் . உங்களிடம் நிறைய இடம் இருந்தால் தேனீ வளர்ப்பை துணை தொழிலாக செய்யலாம் . 


பயிர் சுழற்சி 


இயற்கை விவசாயத்தில் லாபம் பெற பயிற்சுழற்சி முறையை கையாளுங்கள் . இது உங்கள் மண் வளத்தை காப்பாற்றும் . தொடர்ந்து ஒரே பயிரை பயிர் செய்தால் பூச்சி நோய் தாக்கங்கள் அதிகமாகலாம் , அதேசமயம் வெவ்வேறு பயிர்களை பயிர் செய்யும் போது நமக்கு வருமானம் கிடைக்கும் .


மதிப்பு கூட்டி  விற்பனை செய்லாம் - agriculture exports from india 


இயற்கை விவசாயத்தில் நீங்கள் அதிகம் லாபம் எடுக்க மதிப்பு கூட்டி விற்பனை செய்வது மிக முக்கியம் . இயற்கை விவசாயமும் மதிப்புகூட்டலும்  ஒரு சின்ன விளக்கம் . அமெரிக்காவில் விவசாய பொருட்களை இங்கிருந்து ஏற்றுமதி செய்ய சட்ட திட்டங்கள் உண்டு . இந்த பூச்சி கொள்ளிதான் பயன் படுத்தவேண்டும் இவ்வளவுதான் பயன்படுத்தவேண்டும் என்று மேற்சொன்ன சட்டப்படி ஒருவர் மரவள்ளியை பயிர் செய்து மதிப்புக்கூட்டி வைத்துள்ளார் , அதையே  நீங்கள் மரவள்ளி பயிர்ரில்  இயற்கை விவசாயம் செய்து  மதிப்பு கூட்டி வைத்துளீர்கள் என்றால் உங்களுடைய பொருள் சுலபமாக ஏற்றுமதி ஆகும் அதிக வருமானமும் கிடைக்கும் இதனால்தான் அரசாங்கத்தால் இயற்கை விவசாயம் செய்ய அதிகம் வலியுறுத்தப்படுகிறது .  


திட்டமிட்டு பயிரிடுங்கள் 


அடுத்து எந்த பயிர் தேவை அதிகம் இருக்கும் என்பதை அறிந்து அந்த பயிர்களை பயிர் செய்யலாம் உதாரணமாக நம் எல்லோருக்கும் தெரிந்தது வெங்காயம் , எப்பொழுது வேண்டுமானாலும் விலையேறும் , எனவே திட்டமிட்டு பயிரிடுங்கள் 


விவசாயமும் மாடுவளர்ப்பும் 


ஒரு மாடு இல்லாமல் இயற்கை விவசாயம் முழுமை பெறாது . விவசாயத்தில் 40 % செலவை குறைக்கும் கடேசி உழவின் போது தொழு உரம் தேவைப்படும் நம்மிடம் ஒரு மாடு இருந்தால் அது தேவை இருக்காது பூச்சி விரட்டி தயாரிக்கலாம் , பயிர் வளர்ச்சியூக்கி, தயாரிக்கலாம் நமக்கு தேவையான பால் கிடைக்கும். வியாபாரம் நோக்கமில்லாமல்  விவசாயத்திற்காக வாங்குவதால் ஒரு நாட்டு மாடு அல்லது கலப்பின மாட்டை வாங்கலாம்  கூட கொஞ்சம் காசு இருந்தால் இன்னொரு மாடு வாங்கலாம் . கன்றுகள் மூலம் நமக்கு வருமானம் கிடைக்கும் 


G.M
Smart VivasayiPost a Comment

0 Comments