இரண்டு வருடங்கள் வரை பக்க கிளைகளை கழிக்கனும் அப்போது தான் மரத்தின் தண்டு தடிமனாகவும் காய்த்த பின் மரம் சாய்ந்த ிடாமலும் இருக்கும். வளர்ந்த மரங்களாக இருப்பின் அடிமரத்தில் இருந்து மேல் நோக்கிப் பார்த்து வெயில்படாத குச்சிகள், உள்நோக்கி வளரும் கிளைகளையும், பலவீனமான கிளைகளையும் நெருக்கமான நுனிக் கிளைகளையும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும். வெயில் நன்கு கிடைக்கக் கூடிய கிளைகளை வெட்டக் கூடாது. பெரிய கிளைகளை அகற்றும் போது காயம் பெரியதாக ஏற்படும் ஆக அதற்குரிய சாதனங்கள் வைத்து கவாத்து செய்ய வேண்டும் . மரத்தில் காயம் ஏற்பட்டால் தண்டு துளைப்பான், பட்டைத் துளைப்பான் மற்றும் பல தீமை செய்யும் பூசனங்கள் ஊடுறுவ வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே அந்தப் பகுதியை சாணக் கலவை கொண்டு பூசுவது சிறந்தது, காயம் இருந்தால் தான் செய்யணும்னு இல்லை, கவாத்து செய்ததும் கழித்த கிளைகளின் பாகத்தில் சாணக் கரைசலை தடவிட வேண்டும் 🌿 பூ ஒட்டு மாங்கன்றுகளில் வேர் பாகத்திலிருந்து வளரும் தளிர்களை நீக்கிவிட வேண்டும். 2 ஆண்டு வரை பூக்கும் பூக்களை கிள்ளி விடவேண்டும். 3ம் ஆண்டு பூ வைத்த உடன் செறிவூட்ட பட்ட தேமோர்க்கரைசல...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்