Skip to main content

Posts

Showing posts with the label pest and diseases

நெற்பயிரில் பாக்டீரியல் குலை நோய்

 paddy pest and diseases - Bacterial blight இந்த நோயோட தாக்கம் முதலில் எங்கிருந்து வரும் என்றால் நாம் நெல் விதையை விதைநேர்த்தி சரியாக  செய்யாமல் விதைத்தால் வரும் . அல்லது சரியாக பண்படாத அல்லது சரியாக முளைக்காத விதை நெல்லாக இருந்தால் அதிலிருந்து வரும் . இதை சரி செய்வதற்கு விதைப்பதற்கு முன்பு நெல் விதையை தரையில் பரப்பி சரியில்லாத விதைகள் பூஞ்சை பிடித்த விதைகள் போன்றவற்றை நீக்கி விடவேண்டும்  நெல் விதை நேர்த்தி ஒருகிலோ விதை நெல்லுக்கு பவுடராக இருந்தால் 10 கிராம் திரவமாக இருந்தால் 6 மில்லி சூடோமோனஸ் அல்லது விரிடி அல்லது பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ மற்றும் 30 கிராம் அசோஸ் பயிரிலும் உடன் கலந்துசெய்யலாம்  நெல் பற்றிய மற்ற கட்டுரைகள் - Click Here   முதலில் விதை நெல்லை தண்ணீரில் கலந்து அழுக்கை நீக்கிவிடவேண்டும். அடுத்து சூடோமோனஸ் மற்றும் அசோஸ் பயிரிலும் கலந்து நன்றாக பிரட்டிவிடவேண்டும் . பிரட்டி விடுவதை  கடினமாக செய்க்கூடாது விதை முனை மழுங்கி விடும் ஒரு அகலமான கரண்டியில் செய்யலாம்  நிலம்  ஏற்கனவே பாக்டீரியல் குலை நோய்  வந்த நிலமாக இருந்தாலோ அல்லது நீங்...

கத்தரிக்காய் - ஆந்தராக்னோஸ் மற்றும் நுன்னூட்ட சத்து குறைபாடு

Cultivation of brinjal கத்தரி செடிகளோட இருக்கக்கூடிய கலைச்செடிகளில் இருந்து பரவக்கூடிய அதிக பூஞ்சிகளால இந்த கத்தரிக்காய் செடி தாக்கப்பட்டிருக்கலாம் அல்லது செடிகளுக்கு மேல் தண்ணீர் பாய்ச்சுவது , ஸ்ப்ரிங்ளர் மூலம் அல்லது தெளிக்கும் போதோ நாம் தெளிக்கும் தண்ணீர் சரியாக காயாமல் இருந்தால் இந்த பூஞ்சைகளோட தாக்கம் இருக்கும் இது கொஞ்சம் வேகமாக பரவக்கூடிய பூஞ்சை தாக்கமாகும் . கட்டுப்படுத்த வேளைகளில் தண்ணீர் பாய்ச்சுவதை தவிர்க்கலாம் காலை நேரத்தில் நீர் பாய்ச்சலாம் இப்படி செய்வதால் பயிருக்கு தேவையான நீர் போக மற்றவை ஆவியாகிவிடும் ஈரம் இருக்காது அதனால் பூஞ்சை தொற்றும்  இருக்காது . Related post    கத்தரிக்காய் Pest And diseases  Vegetables சூடோமோனாஸ் , விரிடி, பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் இந்த முன்றில் ஏதாவது இரண்டு முக்கியமா சூடோமோனஸ் மற்றும் ட்ரைகோடெர்மா விரிடி அல்லது சூடோமோனஸ் மற்றும் பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் இப்படி ஏதாவது ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் 25 +25 மில்லி கலந்து தெளிக்கலாம் இதுவே கொஞ்சம் அதிகம் வந்துவிட்டது எனில் 50+50 மில்லி கலந்து ஸ்ப்ரே பண்ணலாம்  ஒரு ஏக்கருக்கு ஒரு ல...

மாதுளை பழத்தில் கரும்புள்ளி எதனால் வருகிறது

pomegranate pest and disease management  தமிழ் அதிகப்படியாக விற்க கூடிய பழங்களில்  ஓன்று இந்த மாதுளை . அந்த பழத்தில் கரும்புள்ளியோ அல்லது துளையோ இருந்தால் அது விற்பனையாகாது அதனால் அதை எப்படி கட்டுப்படுத்துவது என்று பார்ப்போம் . இலை புள்ளி நோய்  மாதுளையில் இலை புள்ளி நோய் அல்லது பழத்தில் புள்ளி நோய் இவை பொதுவாக பூஞ்சைகளால் உருவாகிறது இது எப்படி இருக்குமென்றால் படத்தில் இருப்பதுபோல் கருப்பாக இருக்கும். மேல் பகுதி நொழு நொழு போன்று இருக்கும்  சின்னதாக ஒரு துளை இருக்கும் அப்படி இருந்தால் அது பூசைகள் தாக்குதலுக்குள்ளானது . அதுவே துளை இருந்து கரும்படலமாக பரவினால் காய் துளைப்பானாக இருக்கும் (படத்தில் காண்க ). பொதுவாக மாதுளை பழத்தில் விற்பனை பொருள் அதன் தோல்தான் , அதில் கரும்புள்ளி இல்லாமல் இருந்தால்தான் விற்க முடியும் . எனவே இதை கட்டுப்படுத்த  பாலிதீன் பேப்பர் பழத்தை மூடாமல் அப்படியே வைக்கிறீர்கள் என்றால் அதற்கு சரியான நேரத்தில், சரியான அளவில் நீங்கள்  பூஞ்சாண கொல்லிகளும் காய்ப்புழுவிற்கான தடுப்பு நடவெடிக்கை எடுக்கவேண்டும் அப்படி எடுத்தால் நீங்கள் ஓப்பனில் வ...

தோட்டத்தில் எறும்புகளை கட்டுப்படுத்த சில டிப்ஸ்

ant control for garden முதலில் உங்கள் தோட்டத்தில் விவசாயம் இருக்கா அல்லது வெறும் நிலமா என்று பாருங்கள் . வெறும் நிலமாக இருந்தால் செய்யவேண்டியது நன்றாக உழவேண்டும் . நன்றாக பிரட்டி போட்டு உழவேண்டும் ஏறும்போட புற்றை ஆய்வு செய்தால் 3 முதல் 4 அடிவரை வளைந்து நெளிந்து நல்ல கட்டமைப்புடன் இருக்கும் எனவே இதன் முட்டைகள் எல்லாவற்றையும் அளிக்கவேண்டுமென்றால் அதற்கு வேளாண்துறையிலோ அல்லது வெளியிலோ மோல்ட் ப்லோட் கலப்பை இருக்கும் இந்த கலப்பையை பயன்படுத்தினால் கீழ் இருந்து 2 அடி காலத்திற்கு தோண்டி மண்ணை திருப்பி போடும் இதனால் எறும்பு புற்று அழியும் . கால்நடை மற்றும் விவசாயம் சார்ந்த வாட்ஸ்அப் குரூப் லிங்க் Part - 5 அதுவே செடிகள் இருக்கு என்றால் அதன் புத்து எங்கே இருக்குனு பாருங்கள் புற்று இருந்தால் நீரை நன்றாககொதிக்கவைத்துசுடுதண்ணீரை.   புற்றுக்குள் ஊற்றி விடுங்கள் அழிந்து போகும் ஆனால் இந்த முறையை செடி அருகில் இருந்தால் பயன்படுத்த வேண்டாம் . செடிக்கு அருகில் எறும்பு புற்று இருந்தால் 10 லிட்டர் நீருக்கு 1கிலோ வசம்பை இடித்து போட்டு ஒரு நாள் ஊற வைக்கவேண்டும் பின்பு அதை புற்றில் ஊற்றுங்கள் எறும்புக...

இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடு - கவனிக்க வேண்டியவை

organic farming முதலில் இயற்கையாக நாம் செய்கிற விவசாயத்தை இரண்டு வகை உண்டு  1. அங்கக விவசாயம் (Organic farming ) 2. இயற்கை விவசாயம் (Natural Farrming )  இது இரண்டிற்கும் என்ன வித்யாசம் என்று கொஞ்சம் புரியும்படி சொல்லவேண்டுமென்றால் உங்கள் பயிர்களை பூச்சி அல்லது நோய் தாக்கினால் அதற்கு நீங்கள் வேப்பங்கோட்டை கரைசல் தெளித்தால் அது இயற்கை விவசாயம் அதுவே வெர்டிசீலியம் லக்கானி தெளித்தால் அது அங்கக விவசாயம் அவ்ளவுதாங்க வித்யாசம் ஆனால் இந்த இரண்டு முறையிலும் பொதுவான ஒரு விஷயம் உண்டு அது உழவியல் முறை அல்லது மெக்கானிக்கல் கண்ட்ரோல்  அதை பற்றை இந்த கட்டுரையில் பார்ப்போம்   உழவியல் முறை அல்லது மெக்கானிக்கல் கண்ட்ரோல் என்பதை எப்படி விளக்கமாக சொல்லலாம் என்றால் அந்த முறை பூச்சிகளை கவர்ந்து இழுத்து அளிப்பதாகும் . பூச்சி நோய்களை கட்டுப்படுத்துவதற்கு சின்ன சின்ன விஷயங்களை நாம் கவனத்தில் எடுத்து கொண்டாலே நாம் இயற்கை விவசாயத்தில் பூச்சிகளை கட்டுப்படுத்தி விடலாம் . கோடை உழவு  விவசாயமாக இருந்தாலும் அல்லது இயற்கை விவசாயமாக இருந்தாலும் கோடை உழவு என்பது முதல் வேலை முக...

பூச்சி , பூஞ்சை மற்றும் நோய் அறிகுறிகளின் வித்தியாசம் எப்படி இருக்கும்

What is the difference between insect, fungus and disease symptoms in a plant? பூஞ்சை நோய்  மரப்பயிர்களோ அல்லது  தாவரப்பயிர்களோ அதாவது காய்கறி மாதிரியான பயிர்களோ பூஞ்சை நோய் வந்தால் இலைகள் தொங்குகிற மாதிரியான அமைப்புகள் வரும் அதோட இருக்க தன்மை போய்விடும் , வளர்ச்சி மிகவும் குன்றி காணப்படும் , சாப்பாடு எடுத்துக்கொள்ளாது தண்ணீர் எடுத்துக்கொள்வது செடியோட பச்சை போய்விடும் . அதாவது ஓவுவொரு பயிருக்கும் ஒரு பச்சை இருக்கும் அதன் நிறம் மாறி மஞ்சளை நோக்கி போகும் அந்த மாதிரியான அமைப்பு இருந்தால் அது பூஞ்சை நோய் . பூச்சி தாக்கம் பூச்சி தாக்கம் என்பது பொதுவா இலைகளின் பின் பகுதியை தாக்கும் . இலையின் பின்னால் நரம்பு இருக்கும் அதை வெட்ட வெட்ட இல்லை சுருங்க ஆரம்பிக்கும் . இறுக்கமாக இருந்து  கைவிருச்சு வளர்வதை பின்னால் பூச்சிகள் கடிப்பதால் வளைந்து சுருங்கிவிடும் இது பூச்சி தாக்குதல்  புழு என்பது இலைகளை கடித்து சாப்பிடும் அப்ப இலைகளில் ஒருபகுதி இல்லாமல் போய்விடும்  நோய் தாக்குதல் நோய் தாக்குதல் ஓன்று பாக்டீரியா நோய் தாக்குதல் அல்லது வைரஸ் நோய் தாக்குதல். பெரும்பாலும் நோய் தாக்குதல...

மரத்தில் எறும்பு கட்டுப்பாடு

Ant control in the tree இவ்வகை எறும்புகள் புற்று இருக்காது ஏதாவது ஒரு இடத்தில் கூடுகட்டி இருக்கும்.  இனப்பெருக்க காலத்திற்க்காக மரத்திற்கு வந்திருக்கலாம் . மரத்தில் அல்லது அருகில் ஏதாவது கூடு இருக்கிறதா என பார்த்து கொள்ளவும் . பொதுவா 10 லிட்டர் தண்ணீருக்கு 200 கிராம் மிளகுத்தூள் (கொஞ்சம் பணம் அதிகம்தான் ) கலந்து தெளிக்கலாம் . அல்லது எருக்கு கரைசல் தயார் செய்து அதை 7 லிட்டர் 3 லிட்டர் கலந்து தெளிக்கலாம். சாம்பல் இருந்தால் நேரடியாக தூவி விடலாம் . இந்த எறும்புகள் எதற்காக சுற்றுகிறது அறிய வேண்டும் உதாரணமாக மாவு பூச்சி அல்லது அதுமாதிரியான பூச்சிகள் இருந்தால் அதன் கால்களில் இருக்கும் வெள்ளத்திற்காக ஆசைப்பட்டு வரும் (முசுடு எறும்பு அதற்காக வர வாய்ப்பில்லை ) மாவு பூச்சி மாதிரியான பூச்சிகளை கட்டுப்படுத்த வெர்டிசிலியம் லக்கானி தெளிக்கலாம். எறும்புகள் வராமல் போய்விடும் , ஆனால் முசுடு வகை எறும்புகளை கட்டுப்படுத்த மிளகு அல்லது எருக்கு கரைசலை தெளிக்கவேண்டும் . அல்லது இந்த முசுடை கட்டுப்படுத்த கோமியத்துடன் மஞ்சள்தூள் கலந்து தெளிக்கலாம் அதாவது அரை லிட்டர் கோமியம் அரை லிட்டர் தண்ணீர் இந்த ஒரு லீடரோ...

கீரையில் வெட்டுக்கிளி மற்றும் பூச்சி கட்டுப்பாடு

 Locust and pest control in lettuce கீரையை பொறுத்தவரை விற்பனை பொருள் இலைகள் அப்ப அந்த இலைகள் ஓட்டைகள் இல்லாமல் எந்த ஒரு பூச்சி தாக்குதல்கள் இல்லாமல் இருக்க வேண்டும் அதை விற்க வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் . வெட்டுக்கிளி கீரையோட இலைகளை ஓட்டை விழுவதற்கு முக்கிய கரணம் பல்வேறு வகையான வெட்டுக்கிளிகள். அதை வரவிடாமல் முதலில் தடுக்கவேண்டும் இரண்டாவது சாதாரண பூச்சிகள் தாக்குதல் இருக்கும்அதை கட்டுப்படுத்துவது  மூணாவது தேவையான இடுபொருட்கள் கொடுப்பது இந்த மூன்றும்தான் அடிப்படை . சரியான இடுபொருட்கள் கொடுப்பதால் ஒரே மாதிரி உயரம் மற்றும் அளவு கொண்டுவரமுடியும் அப்படி செய்வதற்கு தரை அதிகமான நைட்ரஜன் சத்துக்களோடும் மற்றும் சாம்பல் சத்து தேவை அது இருந்தால் பொதுவான வளர்ச்சி நன்றாக இருக்கும்  கீரைகளில் ஓட்டை வெட்டுகிளிகளாலும் பறக்க கூடிய பூச்சிகளாலும் வரக்கூடியது இதற்கு இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் பயன்படுத்துவது நல்ல பலன் தரும். இதில் இரண்டு நன்மை உள்ளது அதோட காட்டத்தன்மை பூச்சிகளை அண்டவிடாது . மற்றும் நாளைக்கே இதை விற்பனை செய்யவேண்டும் என்றால் அதோட தாக்கம் இதில் இருக்காது . வேப்பெண்ணை ...

மரவள்ளி கிழங்கில் வைரஸ் நோயை இயற்கை முறை கட்டுப்பாடு

Natural method control of viral disease in cassava தவறான அல்லது நோய் தாக்கிய கட்டைகளை நடும்பொழுது  இந்த மாதிரியான பிரச்சனைகள் அதிகமாக வரும் . நோய் தாக்கிய கட்டைகளை முறைப்படுத்தாமலும் விதை நேர்த்தி பண்ணாமலும் நடுவதால் இந்த சிக்கல் அதிகமாக வரும். இலைப்புள்ளி ஆறாவது மாதம் ஏழாவது மாதம் இலைகளில் பிரவுன் நிறத்தில் இலைப்புள்ளி மாதிரி ஆரம்பித்து வளரும் , அதே போல் நரம்பு அடிஇலைகளில் மஞ்சளாகி சுறுங்குகிறதுபோல் இருக்கும் . இந்த சமயத்தில் மரவள்ளி கிழங்கை தோண்டி வெட்டி பார்த்தால் படத்தில் இருப்பதுபோல நடுப்பகுதியில் பாதிக்கப்பட்டிருக்கும் . பூச்சிகள் இருந்தால்  இதை சரி செய்வதற்க்கு 5 வது மற்றும் 6வது மாதத்தில் மிகவும் கவனம் எடுத்துக்கொண்டு இலைக்கு கீழ படரக்கூடிய பூச்சிகள் இருந்தால் அதை தடுத்தாலே இந்த நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம் அது வராமல் இருப்பதற்க்கு எளிமையான வழி காதி சோப் 10 லிட்டருக்கு 50 கிராம் கலந்து தெளிக்கலாம் தெளித்த 7வது நாள் மறுபடியும் தெளிக்கலாம் . வேப்பிலை கரைசல், ஐந்திலை கஷாயம், பத்திலை கஷாயம் , அக்னி அஸ்திரம் ,கற்பூரக்கரைசல் இந்தமாதிரி தெளிப்பதால் பூச்சிகள் வராது , அப்பட...

இயற்கை அவரை விவசாயம் - அவரை செடியில் காய்ப்புழு , அசுவினி மற்றும் கதிர் நாவாய் பூச்சி கட்டுப்பாடு

  Cultivation of Organic beans - control of nematode aphid and radish beetle pest in bean plant பட்டை அவரை செடியில் காய்ப்புழு, அசுவினி மற்றும் நாவாய்(ரப்பர் போன்று பிஞ்சுகள் உள்ளது) போன்றவற்றில் இருந்து காக்க என்னென்ன வழிமுறைகள் உள்ளது.  இயற்கைவழி தீர்வு  காய்ப்புழுவை கட்டுப்படுத்த   அக்னி அஸ்த்திரம் அல்லது கற்பூரக்கரைசல் தெளிப்பது நல்லபலன்கள்தரும் அஷ்வினி அல்லது கதிர்நாவாய் பூச்சியென்றால் வேப்பஎண்ணெய் கரைசல், பொன்னீம் , வசம்பு கரைசல் , ஐந்திலை கரைசல் ,பத்தில்லை கரைசல் , இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் ,அக்னி அஸ்த்திரம் மற்றும்  கற்பூரக்கரைசல் இதில் எதுவேண்டுமானாலும் பயன்படுத்தலாம் . இதில் அஸ்வினிக்கு கொஞ்சம் அழுத்தமாக அடிக்கவேண்டும் ஏன்னெனில் அஸ்வினி பூச்சியின் தாக்குதல் கடுமையாக இருக்கும் . உதாரணமா அவரைச்செடியில நுனியில காம்பில் அஸ்வினி பூச்சி இருக்கறதோட  அளவு கொஞ்சமாக இருக்கிறதென்றால் போக போக அதன் அளவு அதிகமாகும் ஒன்றின் மேல் ஓன்று இருக்கும் முதல்வரிசை கருப்பாகவும் அதன்மேல் இனொருவரிசை உட்காந்து , அதன்மேலும் ஒருவரிசை இருக்கும் இப்படி அஸ்வினி பூச்சி அடுக...

காய்கறியில் அசுவினி தாக்குதலுக்கு, பிரண்டை கசாயம்

 காய்கறியில்   அசுவினி  இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள்  இலையின் அடிப்பாகத்திலும் குருத்துப் பகுதிகளிலும் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். பெரும்பாலும் ஆண்டு முழுவதும் காணப்படும் இப்பூச்சி,  மஞ்சள்  கலந்த பச்சை நிறமாகக் காணப்படும். இளம் தாவரங்களில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும். இவை இலைச் சாற்றை உறிஞ்சுவதால் தாக்கப்பட்ட இளங்குருத்து மற்றும் இலைகள்  சிறுத்தும், சுருங்கியும், தடித்தும் வளைந்தும்  காணப்படும். பூச்சிகளின் வயிற்றுப் பகுதியிலிருந்து சுரக்கும் தேன் போன்ற திரவத்தால் இலைகளின் மேல் பரப்பில்  மேல் கரும்பூசண வளர்ச்சி தென்படும். இதனால் எறும்புகளின் நடமாட்டம் தாக்கப்பட்ட செடிகளில்  அதிகமாகக் காணப்படும். இந்த பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை முறையில் பிரண்டை  கசாயம் மூலம் கட்டுப்படுத்தலாம் அதை எப்படி தயாரிப்பது என்பதை பார்க்கலாம்   *தேவையான பொருட்கள்* பிரண்டை - 3 கிலோ சோற்றுக் கற்றாழை- 3 கிலோ  புகையிலை -1/2 கிலோ. கோமியம்     -10 லிட்டர்  *செய்முறை* மேற்கண்ட அளவுகளில் இந்த மூன்றையும் உரலில் ந...

மரங்களில் இருந்து வெளிப்பட்டு சிவப்பு நிறத்தில் சாறு வடிவதற்கான காரணம்

The reason for the red sap to emerge from the trees சிவப்பு நிற திரவம் வெப்ப மண்டல பகுதிகளில் உள்ள எலுமிச்சை சாத்துக்குடி ஆரஞ்சு முருங்கை மா வேப்பமரம் போன்ற மரங்களில் பருவ காலத்தை அடுத்த வறட்சியான நேரங்களில் மரங்களில் நீண்ட வெட்டுப்பட்ட இடம் இடங்கள் அல்லது கவாத்து செய்த இடங்கள் அல்லது போன வருடம் நடந்த இடங்கள் அல்லது கிளைகள் ஒடிந்த இடங்கள் போன்ற வெட்டுப்பட்ட இடங்களில் அல்லது பட்டைகள் உரிந்து உள்ள இடங்களில் சிவப்பு நிற திரவம் உருவாகி வடிந்து மேலும் கோந்து போன்ற ஒரு அமைப்பு தேங்கி நிற்கும். பூஞ்சைகளால் ஏற்படும் - Caused by fungi சுற்றுப்புற சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் வெட்டுப் பட்ட காயங்கள் அதிலிருந்து உருவாகும் பூஞ்சைகளால் ஏற்படும் இந்த விதமான பாதிப்பு கவனிக்காத நிலையில் மரங்களை முழுவதும் அழித்துவிடும். சிவப்பு நிற திரவம் ஒரு மரத்தின் தண்ணீரும் ஹார்மோன்களும் புரோட்டின் சத்துக்களும் சேர்ந்த கலவையாகும். அதுதான் ஒரு மரத்தின் சத்துப்பொருள். அது வெளியான பின்பு மரம் சத்து இல்லாத மரமாக மாறிவிடும். டிரைக்கோ டெர்மா விரிடி - Tricho derma viridis இதனை சரிசெய்ய காயப்பட்ட இடங்களை மெல்ல...

எலுமிச்சையில் தேயிலை கொசுவை கட்டுப்படுத்துவது எப்படி?

 How to control tea mosquito in lemon? தேயிலை கொசு பொதுவா ஏப்ப வந்து தாக்குமென்றால்  பூ பூத்ததிலிருந்து ஒரு அற நெல்லிக்காய் சைஸ் இருக்கும்போது அது வரும். தேயிலை கொசு பழம்  மேல் வந்து மூக்கை வைத்து கிறுக்குச்சு  அப்படின்னு சொன்னா அது பழுப்பு நிறத்துல கோடு கோடா வரும் அது வேற .  பொறிகள்     ஒரு வேலை முட்டை போட்டுவிட்டால் இந்த மாதிரி ஓட்டைகள் விழுந்து புழுக்கள் போய்விடும் அப்ப  நாம தேயிலை கொசுவை நிறுத்த வேண்டும் . அதற்க்கு கருவாட்டு பொறி , இல்லைனா பழ ஈக்கான பொறி வாங்கி வைக்க வேண்டும் .இதை செய்தலே பெரிய அளவில் கட்டுப்படுத்தலாம் , ஒருதடவை மருந்து தெளிப்பதால் அனைத்தும் மாறிவிடாது . எலுமிச்சை என்பது நீங்கள் தொடர்ந்து எடுத்துக்கொண்டிருக்க கூடிய விவசாயம் அப்ப அந்த தேயிலை கொசுவின் தாக்குதல் எப்பொழுதுமே தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் ஆக தெளிப்பதை விட பொறிகள் வைப்பதே சிறந்தது  தெளிப்பு மரத்தோட பாதி உயரத்துல கட்டி தொங்க விடவேண்டும் மரம் ஒரு ஆறடின , நான்கடி உயரத்துல இருப்பதுபோல் கட்டி தொங்கவிடவேண்டும் . குறைந்தது நாலு மரத்திற்கு ஓன்று தொங்கவிடலாம் . தெளிப்பு...

மாமரம் தண்டு துளைப்பான்- Mango stem borer

Mango stem borer தமிழக மா உற்பத்தியில் ஆண்டுதோறும் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி வருகிறான் ஒரு வில்லன். ‘‘மா மரங்கள், அடர்ந்து, பச்சை பசேல்னு நல்லாத்தான் இருக்கு...ஆனா, காய் தான் பிடிக்க மாட்டேங்குது‘ என்ற புலம்பலை பெரும்பாலான மா விவசாயிகளிடம் கேட்கலாம். அதற்கு காரணம், தண்டு துளைப்பான் என்ற வில்லன் தான். மா மரங்களைப் பொறுத்தவரை, தண்டு துளைப்பான் தான் எமன். மரத்திற்குள் நுழைந்து விட்டால், அந்த மரத்தை வேரோடு சாய்க்காமல், வெளியேறாது. இந்த கொடிய வில்லனை பற்றி விளக்குகிறார்,  மாமரம் தண்டு துளைப்பான் எப்படி கட்டுப்படுத்தலாம் - How to control mango stem borer தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் செந்தூர்குமரன் மா மரங்களைப் பொறுத்தவரை, தண்டு துளைப்பான் தாக்குதல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. தண்டு துளைப்பான் என்பது ஒருவகை புழு. இது, மா மரத்தின் தண்டுகளில் இருக்கும் பட்டைகளுக்கு இடையில் உள்ள இடைவெளியில் நுழைந்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்டுக்குள் துளைப்போட்டு, உள்ளே சென்று ...

மக்காச்சோள படைப்புழு கட்டுப்பாடு

1.களைகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். 2.100 லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிலோ மிளகாய் தூளை நன்றாக கலக்கி தூர் மற்றும் குருத்து பகுதியில் ஊற்ற வேண்டும். 3.நன்றாக பொடியாக உள்ள செம்மன் ஒரு கிலோ உடன்  100 லிட்டர் தண்ணீரை கலந்து தூர் மற்றும் குருத்து பகுதியில் ஊற்ற வேண்டும்.. 4.இஞ்சி, பூண்டு மிளகாய் கரைசல் பயன் படுத்தலாம். 5.உணவு கவர்ச்சி பொறி யாக 5 கிலோ பச்சையரிசி தவிட்டு மாவு, ஒரு கிலோ அளவு கொதிக்க வைத்து ஆற வைத்த வெல்லம் மற்றும் கால் கிலோ  அளவில் நன்கு உறுக்கி ஆற வைத்த நெய் , அரை கிலோ அளவில் நிலக்கடலையை எடுத்து நன்கு வறுத்து பொடியாக்கி  கடைசியில் இதனுடன் விலை குறைவான, வாசனை இல்லாத பூச்சி மருந்து சேர்த்து நீர் விட்டு பிசிந்து சிறு உருண்டையாக தயார் செய்து கொள்ள வேண்டும்.. முக்கியம்.. *கலக்கும் போது தரமான கையுறை அணிய வேண்டும்.. * மேலே சொன்ன கலவையை பாலித்தீன் கவரில் வைத்து வைக்க வேண்டும். நம் தோட்டத்தில் வைக்க வேண்டும்.. * நம் வைக்கும் இந்த கலவையை நம் வளர்ப்பு பிராணிகளான ஆடு,கோழி,மாடு மற்றும் பூனை,நாய் சாப்பிட்டமால் பார்த்து கொள்ளுங்கள். தெரியாமல் சாப்பிட்டால் உடல் பிரச...

நெல் சாகுபடி - நெல்லில் கருக்கா நோய்

  Paddy Cultivation -  Disease in Paddy நெல்லில் கருக்கா ஒரு தீமை செய்யும் பாக்டீரியாவால் வருகிறது இந்த பிரச்சனை எங்கிருந்து வருகிறது என்றால் தவறான விதை நெல் அல்லது விதைநேர்த்தி பண்ணாமல் இருப்பது , ஆரம்பகால நோய் எதிர்ப்பு விஷயங்கள் செய்யாமல் இருந்தது போன்றவைகளோட விளைவாக இது இருக்கலாம்  இது மேலும் பரவாமல் இருக்க பேசிலஸ் சப்டிட்லஸ் 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து நன்றாக நனைச்சு விட்டு தெளிக்கலாம் ஒருதடவை கொடுத்தீங்கனா மறுபடியும் 6வைத்து நாள் ஒருத்தடவ  கொடுக்கணும்

நெற்பயிரை தாக்கும் நோய்கள் - நெல் குலை நோய் - Diseases affecting paddy - Paddy blight

Diseases affecting paddy - Paddy blight நெற்பயிரில் குலை நோய் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே வெள்ளைப் பொன்னி  பயிரிட்டுள்ள விவசாயிகள் முறையான தடுப்பு நடவடிக்கைகளை ஆரம்பம் முதல் கொண்டு கடைபிடிக்கவும். 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி பேசில்லஸ் சப்டிலிஸ் என்ற திரவத்தை கலந்து மாலை வேளையில் நன்கு நனையுமாறு தெளிக்கலாம் . பின்பு நடவு வயலில் நட்ட பின்பு 12 நாட்களுக்கு ஒருமுறை என 3 முறை தெளிப்பது நல்லது தரைவழி ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் கலந்து கொடுக்கவும்.

நெற்பயிரை தாக்கும் நோய்கள் - நெற்பழ நோய்

Diseases affecting rice crop - Rice disease அனைத்து வகை வெப்ப மண்டலப் பகுதிகளிலும் வெப்பம் குறைந்து ஈரம் அதிகமாகும் தருணங்களில், நெற்பயிரில் பூக்கும் நேரத்தில், பூக்களில் ஏற்படும் பூஞ்சை தொற்று நெற்பழ எனும் நோயாகும். இளம் ஆரஞ்சு நிறத்தில் உள்ள பஞ்சுபோன்ற அமைப்புடன் நாட்கள் ஆக ஆக மஞ்சள் நிறமாக மாறும் தன்மையுள்ள இந்த நோய் 35% வரை நமக்கு விளைச்சலை கெடுக்கக்கக்கூடிய வகையில் உள்ளது. இதனை சரிசெய்ய 1. வயலை சுத்தமாக களைச்செடிகள் இன்றி வைத்திருக்கலாம். 2.அதிகத் தண்ணீர் இல்லாமல் காய்ச்சலும் பாய்ச்சலுமாக நிலத்தை வைத்திருக்கலாம். 3.அதிக தழைச்சத்து கொடுக்கக்கூடிய இடுபொருட்களை தரைவழி தராமல் இருக்கலாம். 4.இந்தப் பூஞ்சைத் தொற்றை சரி செய்ய அரை கிலோ துளசி இலையை 10 லிட்டர் தண்ணீரில் நன்கு அரைத்த பின்பு இட்டு 12 மணி நேரம் ஊற வைத்த பின்பு வடிகட்டி, மாலை வேளையில் தெளிக்கலாம். அதனை ஐந்தாவது நாள் திரும்பவும் தெளிப்பது நல்லது. 5. அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் பத்து லிட்டருக்கு 50 மில்லி பேசில்லஸ் சப்டிலிஸ் அல்லது சூடோமோனஸ் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம் ஆறாவது நாள் திரும்பவும் தெளிக்கலாம்.

பந்தல் காய்கறிகளை தாக்கும் பழ ஈ கட்டுப்பாடு

பழ ஈ என்ன பண்ணுனா, பழத்து மேல முட்டை போட்டுவிடும் . முட்டை பெருஞ்சு புழு ஓட்டைக்குள்ள போய்  பழத்தை இல்லாமல் பண்ணிவிடும்  இதை சரிசெய்ய  1)  பழ ஈ காண பொறிகள் வைக்க வேண்டும் (பந்தலில் கட்டி தொங்க விடவேண்டும் ) குறைஞ்சபச்சம் ஒரு ஏக்கருக்கு 12 எண்ணிக்கையில் வைக்கவேண்டும்  2) அடுத்ததாக  நாம தண்ணி குடிக்கிற தண்ணி பாட்டில்ல பாதிக்கும் மேல ஒரு பென்சில் அளவுல ஓட்ட போட்டுட்டு தண்ணிரை ஊற்றி அது நாலஞ்சு நெத்திலி கருவாட்டை பிச்சு போடவேண்டும் பின்பு மூடி இந்த அமைப்பையும் தொங்கவிட வேண்டும் , குறைஞ்சபச்சம் ஒரு ஏழு கட்டி தொங்கவிடவேண்டும்  3) பெவேரியா பேசியானா வை  10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து பயிர்கள் மீது தெளிக்கலாம் . மாலை  வேளைகளில் தெளிப்பது நல்லது இப்படி செய்வதன் மூலம் போட்ட முட்டை புழுவாகி பிரச்சனை தராமல் இருக்கும் 

வாழை எர்வினியா அழுகல் நோய்/ கிழுங்கு அழுகல் நோய்

தாக்குதலின் தன்மை இந்நோய் இளம் கன்றுகளை அழுகச் செய்துவிடும். அதிலிருந்து கெட்ட வாடை வ ீசும். கழுத்துப் பகுதி அழுகுவது இதன் ஆரம்ப அறிகுறி. தொடர்ந்து இலைகள் உலர்வதால் மரம் திடீரென காய்ந்து காட்சியளிக்கும். தண்டைப் பிரித்து இலேசாக இழுத்தால் தண்டு மட்டும் அழுகிய அடித்தண்டு பகுதியோடு, கையோடு வந்துவிடும். கிழுங்கு மட்டும் மண்ணில் இருக்கும். ரொபஸ்டா, கிரான்ட் நைன் மற்றும் தெல்ல சக்கராலி இரகங்கள் சாகுபடியில், இந்நோய்த் தாக்கம் அதிகரிக்கும் போது வெளித்தண்டு வெடித்துக் காணப்படும். தாக்கப்பட்ட பயிரை கழுத்துப் பகுதியில் வெட்டித் திறந்து பார்த்தால் மஞ்சள் முதல் செந்நிற அழுகல் காணப்படும். ஆரம்பத்தில் கார்டெக்ஸ் பகுதியில் அடர் பழுப்பு அல்லது மஞ்சள் நிற நீர் தோய்த்தது போன்று காணப்படும் பின்பு அழுகல் கிழங்கின் நடுப்பகுதிக்குப் பரவி, தண்டின் குருத்துக்கும் பரவி அழுகிய பகுதிகள் அடர் நிற பஞ்சு போன்று உருவாகும். இந்த மென் அழுகல் விரல் வடிவில் முன்னும் பின்னும் நகர்ந்து திசுப் பகுதி வரை வளர்ந்து காணப்படும். அழுகிய பகுதியிலிருந்து‌‌ ‌துர்நாற்றம் வீசும். நோய்க் காரணியை கண்டறிதல்: இந்த நோயினை உண்டாக்கும் நச்சு...