Ad Code

Ticker

6/recent/ticker-posts

மக்காச்சோள படைப்புழு கட்டுப்பாடு



1.களைகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
2.100 லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிலோ மிளகாய் தூளை நன்றாக கலக்கி தூர் மற்றும் குருத்து பகுதியில் ஊற்ற வேண்டும்.
3.நன்றாக பொடியாக உள்ள செம்மன் ஒரு கிலோ உடன்  100 லிட்டர் தண்ணீரை கலந்து தூர் மற்றும் குருத்து பகுதியில் ஊற்ற வேண்டும்..
4.இஞ்சி, பூண்டு மிளகாய் கரைசல் பயன் படுத்தலாம்.
5.உணவு கவர்ச்சி பொறி யாக 5 கிலோ பச்சையரிசி தவிட்டு மாவு, ஒரு கிலோ அளவு கொதிக்க வைத்து ஆற வைத்த வெல்லம் மற்றும் கால் கிலோ  அளவில் நன்கு உறுக்கி ஆற வைத்த நெய் , அரை கிலோ அளவில் நிலக்கடலையை எடுத்து நன்கு வறுத்து பொடியாக்கி  கடைசியில் இதனுடன் விலை குறைவான, வாசனை இல்லாத பூச்சி மருந்து சேர்த்து நீர் விட்டு பிசிந்து சிறு உருண்டையாக தயார் செய்து கொள்ள வேண்டும்..

முக்கியம்..
*கலக்கும் போது தரமான கையுறை அணிய வேண்டும்..
* மேலே சொன்ன கலவையை பாலித்தீன் கவரில் வைத்து வைக்க வேண்டும். நம் தோட்டத்தில் வைக்க வேண்டும்..

* நம் வைக்கும் இந்த கலவையை நம் வளர்ப்பு பிராணிகளான ஆடு,கோழி,மாடு மற்றும் பூனை,நாய் சாப்பிட்டமால் பார்த்து கொள்ளுங்கள். தெரியாமல் சாப்பிட்டால் உடல் பிரச்சினை மற்றும் இறக்க கூட வாய்ப்புகள் உள்ளது..
6. மழை பெயும் போது வைக்க கூடாது.
7.இந்த வகை குடும்பத்தை சேர்ந்த புழுவிற்கு பச்சை, நீல நிற வண்ணங்கள் பிடிக்கும் என்பதால் உணவு கவர்ச்சி பொறி வைக்கும் இடத்தில் இந்த வண்ண துணிகள் அருகில் வைத்தால் அந்த கலருக்கு கவரப்பட்டு அந்த துணிக்கு அடியில் படுத்து கொள்ளும்.அவ்வாறு கலவையை சாப்பிட்டு அங்கு இறந்து விடும் புழுக்களை பயிர் சாகுபடி இல்லாத இடத்தில் மண்ணில் புதைத்து விடுங்கள்.
8.இணகவர்ச்சி  பொறி வைத்து தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

மேல் சொன்ன தகவல்கள் பயன்படுத்தி
மக்காச்சோள படைப்புழு வினை கட்டுபடுத்தி மக்காச்சோள பயிரை பாதுகாத்து மகசூல் எடுக்கலாம். 
வேளாண்மைத்துறையின் ஆலோசனை படி ஆழ உழவு, விதை நேர்த்தி, வரப்பு பயிர், மற்றும் ஊடு பயிர் பயன்படுத்தி படைப்புழுவை கட்டுப்படுத்த வேண்டும்

Post a Comment

0 Comments