Ad Code

Ticker

6/recent/ticker-posts

மாடி தோட்டமும் , மாடித்தோட்டம் அமைக்க தேவையான பொருட்களும் - 1





1) மாடித்தோட்டம் புத்தக வடிவில் இங்கே சொடுக்கவும் - Click Here 


2) வீட்டுத்தோட்டம் புத்தக வடிவில் இங்கே சொடுக்கவும் - Click Here



மாடித்தோட்டம் அமைக்க தேவையான பொருட்கள்


 எல்லோருக்குமே மாடித்தோட்டம்  வைக்கனுமுனு ஆசையா  இருக்கும் மாடித்தோட்டம் வைக்கறதுக்கு கற்றல் எவ்வளவு முக்கியமோ அந்தளவு தேவையான பொருட்களும் முக்கியம் ஒரு வீட்டு தோட்டம் அப்படின்னு பார்த்தா அதில் வைக்கிற செடியோட வேர் நேர மண்ணுகுல போயிரும் அதோட வெப்பநிலை சரியானதாக இருக்கும் ஆனால் மாடித்தோட்டத்துல வைகிற செடி தரையில உள்ள சூடு மேலே உள்ள வெப்பம் இரண்டையுமே  
சமாளிக்கவேண்டியிருக்கும் இதை சமாளிக்கத்தான் நீங்கள் முதலில் திட்டமிடவேண்டியிருக்கும் . அடுத்ததாக பார்த்தால் சரியான பயிர் மற்றும் விதை தேர்ந்தெடுத்தல் . கிட்டத்தட்ட ஒரு 60 சதவீத மாடித்தோட்டம்  ஆரம்பித்து அது வெற்றிஅடையாமல் போவதற்கு முக்கியகாரணமாக இதை சொல்லலாம் 


அடுத்து மாடிதோட்டம்னு பார்த்தா நீர் மேலாண்மை ரொம்ப முக்கியம் வெயில் காலங்களில் எவ்வளவு நீர் கொடுக்கணும் மழை காலங்களில் எவ்வளவு நீர் கொடுக்கணும் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை நீர் கொடுக்கணும் எந்தவேளையில் நீர் கொடுக்கணும் அதற்கேற்ற பொருட்களும் நாம் வாங்கி வைத்து கொள்ளவேண்டும் 


அடுத்தது இடு பொருள்  மேலாண்மை நமக்கு எவ்வளவு உணவு முக்கியமோ அதேபோல் பயிர்களுக்கு உரம் ரொம்ப முக்கியம் முடிந்தவரை இயற்கை இடு பொருட்களாக இருப்பது மிக முக்கியம் அதை எந்த நேரத்தில் கொடுப்பது  என்பதை தெரிந்து இருக்கவேண்டும் 


பூச்சி நோய் மேலாண்மை 


கொஞ்சம் நீங்க அசந்தாலும் உங்க மாடித்தோட்ட பயிரை மொத்தமா காலி பண்ணிரும், உழைப்பு வீனா போயிரும் அதுலயும் இயற்கை வழி தோட்டம்னா ரொம்ப கவனமா இருக்கனும் 


நீங்க உங்க மாடித்தோட்டத்தை வெற்றிகரமாக ஆக்கணுமுனா மேல சொன்னதை ஞாபகத்தில் வச்சுக்கணும் அதற்கு தேவையான பொருட்கள் எப்பவுமே உங்ககிட்ட  இருக்கனும் அப்படி இருக்கவேண்டிய பொருட்கள் பற்றி பார்ப்போம் 


விதை


விதைகள் நீங்க சரியான விதைகள் தேர்வு செய்ற முறையிலே  பாதி வெற்றி அடைந்து விடலாம் முடிந்த அளவு நாட்டு காய்கறி விதைகளை தேர்தெடுக்கலாமுங்க  அல்லது கலப்பின விதைகள் தேர்தெடுக்கலாம் . ஹைபிரிட் விதைகளை தவிர்த்துடுங்க ஏன்னா இதுல பூச்சி நோய் தாக்குதல் அதிகமா இருக்குமுங்க .


           நாட்டு காய்கறிகள் விதைகள் கிடைக்கறது கொஞ்சம் சிரமம்தாங்க , ஆனா கடந்த பத்து வருசமா இயற்கை வேளாண்மையில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமா தற்சமயம் பரவலா கிடைக்குது  நீங்க அருகில் உள்ள தோட்டக்கலை அலுவலகத்த தொடர்பு கொள்ளலாம் , இல்ல பேஸ் -புக்  அல்லது வாட்ஸ் ஆப் குழுக்களிடையே தேடினால் கிடைக்கும் . உங்கள் ஊரில் நடக்கும் வாரச்சந்தைகளில் தேடினால் இருக்குமுங்க, நாட்டு விதைகள பொறுத்தவர ஒருதடவை வாங்குனா போதும் அடுத்த விதைப்புக்கு நீங்க உங்க தோட்டத்திலிருந்தே எடுத்துகுலாமுங்க  


கலப்பின விதைகளை அமேசான் அல்லது பிளிப்கார்ட்டில் கிடைக்குமுங்க ஆனா இந்த விதையிலிருந்து மறு விதைப்புக்கு பயன்படுத்த முடியாதுங்க , பயன்படுத்தினாலும் நாம எதிர்பார்க்கிற மகசூல் கிடைக்காதுங்க . கலப்பின விதைகள்ல முக்கியமான நன்மைனு பார்த்தா பூச்சி நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வரட்சியை தாங்கி வளரகூடிய விதை ரகங்கள் கிடைக்கும் 



பைகள் 


அடுத்து மாடித்தோட்டத்துல பைகள் தேர்ந்தெடுக்ககிறது ரொம்ப முக்கியமுங்க. பிளாஸ்டிக் தொட்டிகள முடுஞ்ச அளவு தவிர்ப்பது நல்லது. நீங்க தேர்ந்தெடுக்க போற காய்கறிகளுக்கு ஏற்றாற் போல் பைகளை தேர்ந்துதெடுத்துகுங்க  


Bag Size 12 * 15 inches - இந்த சைஸ் பைகள்ல காய்கறி செடிகள் பழ செடிகள் வைக்கலாம் 





9" x 9" inches bags 



இந்த சைஸ் பைகள்ல மண்ணுக்கு அடியில வளருற முள்ளங்கி கேரட் பீட்ரூட் போன்ற பயிர்களை வைக்கலாம் 


15" X 15  inches bags



பூச்செடிகள் இந்தமாதிரியான பைகளில்  வைக்கலாம் மாடி தோட்டத்தில் வாழை வைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டால் இந்த பைகளை பயன்படுத்தலாம்க 


24" X 12" X 9" inches bags


18x8-inches bags



 

கீரை வகைகள், புதினா, கொத்தமல்லி, வெங்காயம் , கேரட் , முள்ளங்கி போன்றவற்றை இதில் வளர்க்கலாம்  



இந்த வகை பைகள் கடைகளில் கிடைக்கும் அல்லது அமேசான் அல்லது பிளிப்கார்ட்களில் கிடைக்கும் வாங்கி பயன்படுத்தலாமுங்க 


ஸ்டாண்ட்ஸ் 


மாடியில செடியை வைக்கும் போது ஈரத்தினால் தரைக்குக்கும் பாதிப்பு ஏற்படலாம் தரை வெப்பத்தினால் செடிக்கும் பாதிப்பு ஏற்படலாமுங்க அத தடுக்க ஸ்டாண்ட்ஸ் வைக்கிறது நல்லதுங்க அதேசமயம் மாடித்தோட்டத்துல இடம் கொஞ்சமா இருக்குதுனு நினைக்கிறவங்க  மல்டிபிள் ஸ்டாண்ட்ஸ்  வைக்கலாம் 





இந்த மாதிரி ஸ்டாண்ட்ஸ் வாங்குறது கொஞ்சம் காஸ்டலினு  நினைச்சா செங்கல் வைக்கலாம் 





அல்லது முட்டை அட்டை, கொட்டாங்குச்சி , வீட்டு ஓடு போன்றவற்றை கூட நீங்கள் தரை தடுப்பாக பயன்படுத்தலாம்



மல்டிபிள் ஸ்டாண்ட்ஸ்க்கு பதிலா  வாட்டர் பாட்டில்களை பயன்படுத்தலாம் காசு செலவும் கம்மியாகும் 





செடி வளர்ப்பதற்கு தேவையான மீடியம் 


   இத கொஞ்சம் கவனமா செய்யணும் மரத்துல இலைகள் எப்படி மூச்சுவிடுதோ அதே மாதிரி மண்ணுக்குள்ளயும் வேர்கள் மூச்சு விடுமுங்க . நிலம்னு பார்த்தா மண்புழு , எறும்புகளோட போக்குவரத்து இருக்குமுங்க அதனால சுவாசிக்கின்ற பிரச்னை இல்லைங்க ஆனா தொட்டி செடியில் மேல சொன்ன இரண்டும் இருக்காதுங்க  இருந்தாலும் குறைவா இருக்குமுங்க  அதனால ஒரு குறிப்பிட்ட காலத்துக்கப்புறம் மண் இறுகிப்போக. அதே சமயம் , ஒரு தக்காளி செடியோ அல்லது வெங்காயமோ பயிர் செய்தால் அறுவடை முடுஞ்ச பின்பு மண்ணை நல்ல கிளறி விட்டுட்டு அடுத்த  பயிர் பண்ணலாம்  வேர்கள் வேகமாக  மக்குவதற்கு WDC கொடுக்கலாம், 


ஆனா  ஒரு பூச்செடியோ அல்லது பழ செடியோ வைக்கும்பொழுது  நாம் அதை அடிக்கடி மாற்றமுடியாது , அதற்கேற்ற மீடியம் தேர்ந்தெடுக்கும்பொழுது அந்த பிரச்சனையை நம்மால தவிர்க்கமுடியும்க . இந்த மீடியத்துல ரொம்ப முக்கியமானது மண் , காயர்பித் , மண்புழு உரம் . இன்னும் சில பொருட்கள் இருக்கு அத நாம வரிசையா பாப்போம் 


மண்


ரெட் சாயில் இந்த மண்வகை மாடித்தோட்டத்திற்கு நல்லது . ஒருவேளை இந்த மண் கிடைக்கலைனா உங்க வீட்டுல இருக்க மண்ணை எடுக்கலாமுங்க . கல்லு அதிகம் இல்லாம பார்த்துக்குங்க .





காயர்பித் அல்லது தேங்காய் நார்






      உங்களுடைய தொட்டியில ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளவும் காற்றோட்டம் ஏற்படுத்தவும் தேங்காய்  நார் முக்கியம்  மேலும் இத போடுறதனால தொட்டியோட எடை குறையும் . வீட்டுல தென்னை மரம் இருந்தா நீங்களே இதை தயாரிக்கலாம் , நீங்க 6 மாசம் பயன்படுத்துற தேங்காயிலிருந்தே இந்த தேங்காய் நார்களை தயாரிக்கலாம் ஆனா அது நீண்டகாலப்பணி . அதனால் உங்களுக்கு தேவையான தேங்காய் நார்களை அருகில் உள்ள கடை அல்லது ஆன்லைனில் வாங்கலாம் . இந்த தேங்காய் நார்  அதிகம் தேவைப்படும் கூடுதலாக வாங்கி வைத்து கொள்வது நல்லது 



                  



மண்புழு உரம் 


உங்கள் பயிர்களுக்கு தேவையான சத்துக்கள் மற்றும் நுண்ணுயிர் பெருக்கத்துக்கு மண்புழு உரம் தேவைங்க அதே போல காற்றோட்டவசதி மற்றும் நீர் தக்கவைத்துக்கொள்ளும் தன்மை அதிகம் . குறைஞ்ச செலவுல அதிக சாது கொடுக்ககூடியது . கிலோ பத்து பத்து ரூபாய்க்கு கூட கிடைக்கும் . கடைகள்ல வாங்கும் போது ஈரத்தன்மை உள்ள மண்புழு உரமா பார்த்து வாங்குவது அவசியமுங்க . கொஞ்சம் கூடுதலா வாங்கி இருப்பு வைத்து கொள்ளவது நல்லது 





மண்புழு உரம், மண், தேங்காய் நார் போன்றவை  பாட் மிக்ஸ்சிங்க்கு  அதிக  அளவு தேவை படக்கூடியது.  அடுத்து  ஒரு கைப்பிடி அளவு தேவைப்படக்கூடிய  பொருட்கள் வேப்பம் புண்ணாக்கு  , மற்றும்  உயிர் உரங்கள் ஆகும் .



  

1) மாடித்தோட்டம் புத்தக வடிவில் இங்கே சொடுக்கவும் - click Here 

2) வீட்டுத்தோட்டம் புத்தக வடிவில் இங்கே சொடுக்கவும் - Click Here 

Post a Comment

0 Comments