Skip to main content

Posts

Showing posts with the label சீமை வெள்ளரி

சீமை வெள்ளரி

செழிக்க வைக்கும் சீமை வெள்ளரி (Gherkin) சாகுபடி சீமை வெள்ளரி, மருந்து வெள்ளரி, முள் வெள்ளரி மற்றும் மேற்கு இந்திய வெள்ளரி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந ்த வெள்ளரியின் அறிவியல் பெயர் குக்கூமிஸ் சாடிவஸ் வர். அங்காரியா , குக்கூர்பிடேசி குடும்பத்தைச் சார்ந்தது. கடந்த 10 வருடங்களில் தமிழகத்தின் முக்கிய பணப் பயிராக இந்த சீமை வெள்ளரி விவசாயிகளின் மத்தியில் மாறியுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 9,500 ஏக்கர் பரப்பளவில் திண்டுக்கல், திருச்சி , தஞ்சாவூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 39,500 மெட்ரிக் டன் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்த வேளாண்மை (Contract farming) அடிப்படையில் இந்த சீமை வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சாகுபடி தொழில்நுட்ப முறைகள் பருவம்: மிதமான வெப்பம் இதன் வளர்ச்சிக்கு ஏற்றதாகும். தமிழகத்தில் டிசம்பர் – ஜனவரி மற்றும் ஜூன்-ஜூலை மாதத்தில் பயிரிடப்படுகிறது. இருப்பினும் நல்ல மண்வளத்துடன் கூடிய போதிய அளவு நீர் பாசன வசதி கொண்டிருந்தால் ஆண்டு முழுவதும் சாகுபடி செய...