*வேளாண்காடுகளும் சந்தன மரவளர்ப்பும்* இந்தியாவுக்கு பெருமை சேர்க்கக்கூடிய மரங்களில் சந்தன மரமும் ஒன்று. இந்திய மக்கள் பல வகைகளில் சந்தனத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். தற்காலத்தில் காடுகளில் சந்தன மரங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது, சந்தன மரங்களை அதிகமாக வெட்டுவது மற்றும் காடுகளில் உள்ள மற்ற மரங்கள் சந்தனத்துடன் போட்டியிட்டு வளர்வதும் (Biotic interference) காரணமாக இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் சந்தனமர உற்பத்தி 4,000 டன் என்ற அளவில் இருந்து தற்போது 300 டன் என மிகவும் குறைந்து விட்டது. இந்நிலையில் வேளாண்காடுகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் சந்தன மரங்களையும் வளர்க்க வேண்டியது அவசியமாகிறது. சந்தன மரங்களில் 47 வகைகள் இருப்பினும் சான்டாலம் ஆல்பம் (Santalum album) எனப்படும் இந்திய சந்தன மரம்தான் தரமான சந்தனத்தைக் கொடுக்கிறது. இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆப்பிரிக்காவின் சில நாடுகளிலும் சந்தனம் வளர்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது பெரிய அளவில் சந்தனம் சாகுபடி செய்யப்படுகிறது என்பதால் எதிர்காலத்தில் சந்தன ஏற்றுமதியில் ஆஸ்திரேலியாவும் முக்கியத்துவம் ப...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்