Skip to main content

Posts

Showing posts with the label coconut

தென்னை மரக்கன்று நடும் முறை

Coconut sapling planting method   ஒவ்வொரு வீட்டிலும் ஒரு இருக்ககூடிய மரம் இருக்கவேண்டிய மரம்மும் கூட , இந்த தென்னை மரக்கன்றை எப்படி நடுவது என்று பார்ப்போம் . இந்த தென்னை மரத்தோட தூர் பகுதி ஒரு ஆண்டிற்க்கு ஒரு கண அடி வரை வளர்ச்சி அடையும் . அப்போது , கிட்டத்தட்ட அய்ந்தாயிரம் முதல் ஆறாயிரம் வரை சல்லி வேர்கள் தோன்றும் அவை பக்கவாட்டாக சென்று மரத்தை தாங்கி பிடிக்கும். தென்னை மரக்கன்றை எப்படி நடுவது முதலில் 3*3*3 அடிக்கு குழி எடுக்கவேண்டும் மறுநாள் முக்கால் குழி  அளவிற்க்கு மண்ணை மறுபடியும் இழுத்துவிட வேண்டும் பின்பு காலில் கொஞ்சம் மிதித்து விடுங்கள் . பிறகு நடுப்பகுதியில் நெத்தை வைக்கவேண்டும் , கன்றோட பக்கவாட்டு பகுதியில் மண்ணை கொஞ்சம் இழுத்துவிட்டு அதில் குறைந்தபச்சம் 5 கிலோ மக்குண தொழு உரம் , 20 கிராம் சூடோமோனஸ் இரண்டையும் கலந்து சுற்றி வரை போட்டுவிடுங்கள் . உரம் தொழு உரம் கிடைக்கவில்லையெனில் அசோஸ்பயிரில்லம் 200 கிராம் , பாஸ்போபாக்டீரியா 100 கிராம் இதோட சூடோமோனஸ் கலந்து குழியோட எல்லா பகுதிகளிலும் போட்டு விட்டு மிச்சமண்ணை இழுத்து தென்னை கன்று உயரமாகவும் அதிலிருந்து மூணு அடிக்கு வட்...

தென்னை நீர் மேலாண்மை - Coconut water management

Coconut water management எந்த ஒரு பயிருக்கும் பாசனம் என்பது சூழ்நிலையை பொறுத்தது . அதவது நீங்கள் பாசனம் செய்யும்பொழுது , அந்த மாதத்தில் இருக்கக்கூடிய  வெயில் , மண்ணோடத்தன்மை , பயிரோடத்தன்மை இந்த மூன்றையும்  அடிப்படையாக கொண்டது . உதாரணமாக மே மாசத்துல வெயில் அதிகமாக அடிக்கும்போது செம்மண் தரையில கொடுக்கக்கூடிய நீருக்கும் , அதே மாதிரி மழைக்காலத்துல செம்மண் நிலத்துல கொடுக்ககூடிய நீருக்கும் வித்யாசம் இருக்கு . மழை பெய்யும்போது , பெய்யாதபோதும்  ஒருசில நடவெடிக்கை எடுக்க வேண்டும். இது தென்னைக்கு மட்டுமல்ல எல்லாப்பயிருக்கும் இதுதான் அடிப்படை . தென்னையை  பொருத்தளவுல   மூன்று வயது மேல் உள்ள ஒரு தென்னைக்கு சராசரியா சரளை மண்ணாக அல்லது செம்மண்ணாக இருந்தால் 80 லிட்டர் நீர் கொடுக்க வேண்டும் . அதே களிமண்ணாக இருந்தால் 50 லிட்டர் கொடுக்க வேண்டும் . இத முதல் தடவ கொடுகிறீங்கனா , இரண்டாவது நாள் வட்டப்பாத்தீல இருந்து ஒரு இரண்டடி தள்ளி ஈரம் இருக்க , இல்லையா என்று மண் எடுத்து பாருங்கள் . புவிஈர்ப்பு விசையில் மண்களுக்கு இடையில் உள்ள ஓட்டையின்  காரணமாக நீர் உளளே இறங்கியிருந்தால் ...

தென்னை நடும் முறை - ஒரு ஏக்கர் நிலத்தில் எத்தனை தென்னை கன்று நடலாம்

Coconut Planting Method - How many coconut seedlings can be planted in an acre of land? ஒரு ஏக்கர் நிலத்தை எத்தனை தென்னை கன்று நடலாம்.எவ்வளவு இடைவெளியில் நட வேண்டும். என்ன ரகம்  நட்டால் சீக்கிரம் பலன் தரும் மற்றும் நீர் மேலாண்மை எப்படி இருக்க வேண்டும்? ஒரு ஏக்கர்ல 30 அடிக்கு 30 அடி   இடைவெளில 48 தென்னைமரங்கள் வைப்பது சிறப்பு . இத விட கம்மியா 25க்கு  25 இடைவெளில 70 மரங்கள் கம்மியா வைக்கலாம் அல்லது 28க்கு 28 அடி வைக்கலாம். வாய்ப்பு இருந்தா 30க்கும்  மேல  32க்கு 32 , 35க்கு  35 வைக்கலாம் . இந்த  30 அடிக்கு மேல இடைவெளி உள்ள நிலத்தோட முகியத்துவம் என்னனா , நமக்கு ஊடுபயிர் விவசாயம் தேவை நம்ம நிலத்திலிருந்து லாபங்கள் எடுக்கணும் சொன்ன 30க்கு 30 ஆதி இருப்பது சிறப்பு 25 அடிக்கு கீழ நூறுசதவீதம் வைக்க கூடாது    நீர் மேலாண்மை மண்ணை பொறுத்த விஷயம் எந்தவகை மண்ணாக இருந்தாலும் 80 லிட்டர் நீருக்கு மேல் கொடுக்க கூடாது அந்த தண்ணீரை காலையில 40 சாயந்தரம் 40 பிரிச்சு கொடுக்கலாம் இது 5 வருடத்திற்கு மேல் உள்ள பெரிய கன்றுகளுக்கு  மட்டும்   மூன்று வர...

12 வருடம் ஆன தென்னை மரத்திற்கு என்ன ஆர்கானிக் உரம் வைக்களாம்.

12 வருடம் ஆன தென்னை மரத்திற்கு என்ன ஆர்கானிக் உரம் வைக்களாம். காய்கள் மிகவும் கம்மியாகவே இருக்கின்றன. குறும்பல் பிடிக்கவே இல்லை. பதில் -1 சானி ஊரம் கோழி உரம் மற்றும் கொழுஞ்சி இலை மற்றும் மரம் இலைகள் வைத்து 10 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பதில் -2 எருகன் இலை இடவும். பஞ்சகவ்யம். ஒரு லிட்டர் தண்ணீர் மூன்று லிட்டர் கலந்து வேரில் கட்டவும் பதில் -3 பதில் -4 சானம் 20 கிலோ அசோஸ்பைரில்லம் அரை கிலோ பாஸ்போபேக்டிரியா அரை கிலோ எருக்கு இலை மற்றும் தென்னைமர கழிவுகளை அரைவட்ட பாத்தி எடுத்து உறம் வைத்து நீர் பாய்ச்சுங்கள் பதில் -5 100grams seaweed gel மரத்தில் இருந்து ஒரு மீட்டர் தூரத்தில் கிணப் பாரையால் குழிஎடுத்து போடவும்

பயிர் பாதுகாப்பு -தென்னை

பயிர் பாதுகாப்பு -தென்னை நம் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் நிறைய பாதிப்பிற்கு உள்ளாகிறது. அதில் ஒரு பாதிப்பாக கருவண்டு தாக்குதல் இருக்கிறது. இந்த வண்டு தா க்குதலை இயற்கை முறையில் தவிர்க்க நொதித்த ஆமணக்கு கரைசலை பயன்படுத்தலாம். கரைசல் தயாரிப்பு:   5 கிலோ ஆமணக்கு விதைகளை நன்கு அரைத்து 5 லிட்டர் நீருடன் கலந்து மண்பானை அல்லது தொட்டிகளில் 10 நாட்கள் மூடி வைக்க வேண்டும். பின் 10 நாட்கள் கழித்து இந்த கலவையில் இருந்து துர்நாற்றம் தோன்றும் . பயன்படுத்தும் முறை: 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பானையில் 2 லிட்டர் நொதி வந்த கலவையுடன் 3 லிட்டர் நீர் சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறாக ஒரு ஏக்கருக்கு 5 மண் பானைகள் தேவைப்படும். மண்பானையின் வாய்ப்பகுதி மட்டும் தெரியும் அளவு புதைத்து வைக்க வேண்டும் தென்னந்தோப்பு, பாக்குத்தோப்புகளில் மரத்தின் அருகே புதைத்து வைத்தால் வண்டுகள் பானையை நோக்கி வந்து விழுந்து அழிந்து விடும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வண்டுகளை துாக்கி எறிந்து விட்டு மீண்டும் அதே கரைசலை பயன்படுத்தலாம். கட்டுப்படும் வண்டுகள்,பூச்சிகள்: கூன் வண்டு, சாம்பல் நிற வண்டு, காண்டா...

தென்னை கேள்வி - பதில்

நண்பர்கள் யாரவ்து சொல்லுங்கள் எதற்கு எப்படி இழைகள் நொடிந்து காணப்படுகிறது..மேலும் ஒரு மரத்தில் எப்போது பூ விட்டுருகிறது. இப்ப நல்ல காய் பிடிக்க என்ன செய்ய வேண்டும்..  பதில் - 1  சார் இதுகுறித்து நம்ம வேளாண்மை குரூப்ல பல பதிவுகள் இருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர் பதிவு போடும் முன்பு தென்னை குறித்த முந்திய பதிவுகளை பார்க்கலாம். குருத்து வண்டு உள்ளது. மணல் குருத்தில் போடலாம். பச்சை சாணி அல்லது குப்பை மேடு அருகில் இல்லாது இருப்பது நல்லது அல்லது சாணிகுப்பை மக்கிய பின்னர் இடவேண்டும் போதிய அளவு தண்ணீர் இல்லை. மரத்திற்க்கு 60-80 லிட் தண்ணீர் தினசரி தேவை. மரத்தை சுற்றி எருக்கு போடவும். நீர் பற்றாகுறை எனில் சோற்று கற்றாழை இர்ணடு , பப்பாளி ஒன்று வைக்கலாம். ஒரு மரத்திதை சுற்றி எருக்கை, பப்பாளி, சோற்று கற்றாழை, சப்பாத்தி கள்ளி மரத்தை சுற்றி மூடாக்கு தண்ணீர் 60 லிட் போதுமானது. பதில் - 2 முதல் பாளை இப்படி த்தான் இருக்கும் அடுத்த அடுத்த பாளை நல்லதாக இருக்கும் தண்ணீர் அளவை கூட்டவும்  பதில் - 3  தண்ணீர் பாசனத்தை கூட்டவும்.. காண்டாமிருகம் வண்டு தாக்குதல் போல் தெரிகிறது. எனவே, ரசக்கற்பூரம்...

தென்னை மரங்களில் குரும்பை உதிர்வதை தவிர்க்க என்ன செய்யலாம்

தென்னை மரங்களில் குரும்பை உதிர்வதை தவிர்க்க 🌴 உடனடியாக தர வேண்டுமென்றால் தரையில் கொடுக்கும் வகையிலான போரான் 100 கிராம் வாங்கி 5 கிலோ தொழு உரத்துடன் கலந்து தூரிலிருந்து நான்கடி தள்ளி மண்ணைத் தோண்டி உள்ளே போட்டு மூடி தண்ணீர் கொடுக்கவும். இது போல் 5 மாதங்கள் பண்ணலாம். தரையில் கொடுக்கும் அதே நேரத்தில் மரத்தின் மேல்பகுதியில் தெளிக்கும் வகையிலான போரான் வாங்கி ஒரு லிட்டருக்கு ஒரு கிராம் என கலந்து தெளிக்கலாம். 🌴 நீண்டகால நிலையான இயற்கைவழி தீர்வாக 🌴  200 லிட்டர் டிரம்மில் உள்ள நீரில் 1 0 கிலோ அளவுள்ள பால் வரும் எருக்கின் இலை பூ தண்டு காய் நறுக்கி உள்ளே போட்டு மூடி 5 நாள் ஊறவைத்து அந்த தண்ணீரை 5 நாள் கழித்து மரத்திற்கு 5 லிட்டர் என தரையில் ஊற்றலாம். அதே நேரத்தில் அந்தக் கரைசலை அப்படியே ஊற்றி மரத்தின் மேல்பகுதியில் உள்ள குரும்பைகள் மேல் தெளிக்கலாம. இதனை 15 நாட்களுக்கு ஒரு முறை செய்யவும். முதல் ஒரு மாதம் மட்டும் கடையில் வாங்கும் போரானை உபயோகப்படுத்தலாம். மற்றபடி இயற்கை வழி தீர்வு நீண்ட நல்ல பலன்தரும் .மரத்தின் ஆயுளையும் பாதுகாக்கும்.

தென்னை- கேள்வி - பதில்

  நான் எனது தோட்டத்தில் தென்னை மரம் ஒரு ஏக்கரில் நடலாம் என முடிவெடுத்துள்ளேன் ஆனால் அதைப்பற்றி எனக்கு தெளிவான செய்முறை இல்லை எனக்கு உதவுங்கள். பதில்-1  தூய நாட்டு கன்றுகளை நடுங்கள். பல வருடங்கள் ஆனாலும் வறட்சி மற்றும் நோய் தாக்கத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளஉம். 25 அடி விட்டு நடவும். ஓரத்தில் இருக்கும் மரங்கள் நெருக்கமாக நடலாம். அருகாமையில் வேறு வீடோ மற்றவர்கள் இடமோ இருந்தால் கொஞ்சும் தள்ளி நடுங்கள். முடிந்தவரை மாட்டு சாணம் போன்ற இயற்கை உரங்களை போட்டு வரவும். தென்னை கன்று வளரும் நேரத்தில் ஊடு பயிராக மக்கா சோளம் விதைக் கலாம். பதில்-2 மிகவும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். இது பல்லாண்டு பயிர் என்பதால் அவசர அவசரமாக செய்யக்கூடாது. 1. நாற்றை நாமே உருவாக்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள நல்ல மரத்திலிருந்து நெற்றுகளை சேகரித்து நாற்று தயாரிக்க வேண்டும். நல்ல மரம் என்றால் குறைந்தது 15 ஆண்டு வயதானதாகவும், எப்போதும் சுமாராக 35 மட்டைகளோடு வருடம் முழுவதும் பாளை விடும் மரமாக இருப்பது நல்லது. நாற்று விடும்போது படுக்கை வாக்கில் தேங்காயை வைத்தால் முளைப்பு திறன் அதிகம். நாற்று நான்காவது இலை வந்தப...

தென்னைக்கு மிகவும் உபயோகமான இரட்டை வரப்பு பாசனமுறை

        இரட்டை வரப்பு பாசனமுறை மரத்தின் தண்டில் இருந்து 4 அடி இடைவெளியில் ஒரு வட்ட வடிவ வரப்பும் 6 அடி இடைவெளியில் இன்னொரு வட்ட வரப்பும் போட்டு இரண்டுக்கும் நடுவில் ஒரு அடி தோண்டி அதில் நாங்கள் தயாரிக்கும் தென்னை சிறப்பு இயற்கை உரம் 15 கிலோ இட்டு மண் மூடி அதன் மேல் தக்கைப்பூண்டு விதை 200 கிராம் போட வேண்டும். இந்த பயிர் வளராந்து 50 நாளில் மிதித்து விட்டு மண் மூட வேண்டும். இதன் பயன்பாடு 1, மண்ணில் உறிஞ்சும் வேர்கள் உள்ள இடத்தில் பாசனம் செய்வதால் பாசன நீர் வீணாகாமல் பயன் தரும் 2, நீர் சேமிப்பு 3, மரத்தின் தண்டை ஒட்டி புது வேர்கள் மண்ணிற்கு மேல் பரவாமல் அது சரியாகும் 4, ஊட்டச்சத்து அறைகளை நோக்கி வேர்கள் வளரும் 5, பாசன நீரில் உள்ள உப்பு குறையும். உப்பு இரண்டு வரப்புகளில் உள்ள காற்றோட்டத்தால் உப்பு வெளியே படியும் 6, இரண்டு வரபபுகளுக்கு இடைப்பட்ட பகுதி மிதிபடாமல் இருப்பதால். நிலக்தாற்றோட்டம். அதிகமாகும். இந்த நிலக்காற்றோட்டம். வேர்கள் சத்துக்களை உறிஞ்சி எடுக்க உதவும் 7. சுற்றுவட்ட நீர் பாதையில் உள்ள அனைத்து வேர்களும் தூண்டப்பட்டு வேலை செய்யும் 8, நிறைய சல்லி வேர்கள் தோன்றும...