Ten ways to increase the yield of chili plant உங்களுடைய மாடித்தோட்டத்திலோ அல்லது வீட்டின் பின்புறத்திலோ மிளகாய் செடி வளர்த்தால் மகசூலை அதிகரிக்க செடி வளர்க்கும் போது சில சின்ன விஷயங்களை கையாண்டால் நல்ல மகசூல் கிடைக்கும். என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம் . 1) நீங்கள் மிளகாய் நடுவதற்க்கு முன் நடுமிடத்தில் வீட்டில் தயாரித்த இயற்கை உரங்களை போடலாம். பயன்படுத்திய டி தூள் . முட்டை ஓடு மற்றும் வெங்காயத்தோல் எல்லாத்தையும் காயவைத்து கலந்து அதனுடன் தேங்காய் நார் மற்றும் மிளகாய்த்தூள் கலந்து நாடும் இடத்தை கிளரி தூவி விடலாம் 2) நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் காய்ந்த மிளகாயை விதைப்புக்கு எடுத்துக்கொள்ளலாம் விதைப்பதற்க்கு முன் தண்ணீரில் ஊறவைத்து மிதக்கும் விதைகளை எடுத்துவிட்டு மற்ற விதைகளை விதைப்புக்கு பயன்படுத்தலாம் 3) நீங்கள் தொட்டியில் வளர்த்தாலும் தரையில் வளர்த்தாலும் ஒரு இடத்தில இரண்டு செடி வைத்து வளருங்கள் 4) மிளகாய்ச்செடிக்கான உரங்களை வீட்டிலேயே தயாரிக்கலாம் . கடலை புண்ணாக்கில் நேற்று வடித்த அரிசி கஞ்சியை ஊற்றி நன்றாக கலக்கி ஒருவாரம் வைத்திருக்க ...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்