இன்றய காலகட்டத்தில் விவசாயத்தில் டெக்னாலஜி என்பது தவிர்க்க முடியதாகிவிட்டது . இதற்கு முக்கிய காரணம் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் உரங்கள் , பூச்சி விரட்டிகள் சரியான நேரத்திற்கு செய்யவேண்டிய சூழ்நிலை . இதை தவிர்பதற்குத்தான் ட்ரோன்களை பயன்படுத்தி தெளிக்கப்படுகிறது . குறைந்த நேரத்தில் வேலைகளை முடிப்பதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் ட்ரோன்களை பயன்படுத்த ஊக்குவிக்கிறது . சாதாரண தெளிப்பான்களை பயன்படுத்தும்போது நேர விரயம் அதிகமாகிறது . மேலும் மருந்து தெளிக்கும்போது விவசாயிகள் பூச்சிக்கொல்லியுடன் நேரடி தொடர்பில் இருப்பார்கள் . அதுவே நாம் ட்ரோன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும்போது அறவே அது தடுக்கப்படுகிறது . ட்ரோன்கள் மூலம் தெளிக்கும்போது காலநிலை மாற்றங்களை சமாளித்து எதிர்காலவேளாண் உற்பத்தி தேவைகளை பூர்த்தி செய்ய முடிகிறது . ட்ரோன் மூலம் மருந்துமற்றும் உரம் தெளிக்க ஒரு ஏக்கருக்கு 10 நிமிடம் மட்டுமே. தேவைப்படுகிறது. மேலும் 90%தண்ணீர் உபயோகத்தையும், 40% பூச்சிக்கொல்லி மருந்தின் அளவையும் கணிசமாக குறைக்க நம்மால் முடியும் . ட்ரோன் மூலம் தாவரங்களின்மேல் சரியான அளவில் சீராக மருந்துதெளிக்...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்