Skip to main content

இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடு - கவனிக்க வேண்டியவை

organic farming



முதலில் இயற்கையாக நாம் செய்கிற விவசாயத்தை இரண்டு வகை உண்டு 


1. அங்கக விவசாயம் (Organic farming )
2. இயற்கை விவசாயம் (Natural Farrming ) 


இது இரண்டிற்கும் என்ன வித்யாசம் என்று கொஞ்சம் புரியும்படி சொல்லவேண்டுமென்றால் உங்கள் பயிர்களை பூச்சி அல்லது நோய் தாக்கினால் அதற்கு நீங்கள் வேப்பங்கோட்டை கரைசல் தெளித்தால் அது இயற்கை விவசாயம் அதுவே வெர்டிசீலியம் லக்கானி தெளித்தால் அது அங்கக விவசாயம் அவ்ளவுதாங்க வித்யாசம் ஆனால் இந்த இரண்டு முறையிலும் பொதுவான ஒரு விஷயம் உண்டு அது உழவியல் முறை அல்லது மெக்கானிக்கல் கண்ட்ரோல்  அதை பற்றை இந்த கட்டுரையில் பார்ப்போம்  




உழவியல் முறை அல்லது மெக்கானிக்கல் கண்ட்ரோல் என்பதை எப்படி விளக்கமாக சொல்லலாம் என்றால் அந்த முறை பூச்சிகளை கவர்ந்து இழுத்து அளிப்பதாகும் . பூச்சி நோய்களை கட்டுப்படுத்துவதற்கு சின்ன சின்ன விஷயங்களை நாம் கவனத்தில் எடுத்து கொண்டாலே நாம் இயற்கை விவசாயத்தில் பூச்சிகளை கட்டுப்படுத்தி விடலாம் .

கோடை உழவு 


விவசாயமாக இருந்தாலும் அல்லது இயற்கை விவசாயமாக இருந்தாலும் கோடை உழவு என்பது முதல் வேலை முக்கிய வேலை . மண்ணுக்கடியில் உள்ள புழுக்களை அளிப்பதாகட்டும் கூட்டு புழுக்களாகட்டும் மற்றும் களைகளை அளிப்பதில் பெரும் பங்கு வகிப்பது இந்த கோடை உழவு .


களைகள் 



முடிந்த அளவு வரப்புகளில் களைகள் இல்லாமல் பார்த்துகொள்ளுங்கள். நீங்கள் பூச்சி விரட்டிகள் தெளிக்கும்போது அருகில் உள்ள களைகள் போய் உட்கார்ந்து கொள்ளும் அல்லது முட்டை இடுவதற்கு வாய்ப்பாக அமையும் .


தென்னை மட்டை

 

ஏழு அடி உயர கம்புகளை அல்லது தென்னை மட்டைகளை தலைகீழாக ஊன்றி  வைக்க வேண்டும் இதன்மீது பகலில் பலவகையான குருவிகள் அமர்ந்து பூச்சிகளை இடித்து உணவாக உட்கொள்ளும் மேலும் 15 அடி உயர கம்பை நடு வயலில் நடுவதன் மூலம் இரவில் ஆந்தை அதன்மீது அமர்ந்து பூச்சிகளை பிடித்து உண்ணும் இந்த முறையை கடைபிடிப்பதன் மூலம் செலவில்லாமல் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்


பொறி பயிர்கள் 


வரப்பு ஓரங்களில் பொறி பயிர்களை நடுவதன் மூலம் தாய் பூச்சிகள் முக்கிய பயிர்களில் முட்டையிடாமல்  தடுக்கலாம் .


ஓட்டும் அட்டை 


மஞ்சள் வண்ண ஓட்டும் அட்டை நல்ல பலன் கொடுக்கும் குறிப்பாக மாலை வேளைகளில் பறக்கும் அந்த பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் 


சோலார் விளக்கு பொறி

ஏக்கருக்கு குறைந்தது 2 வைக்கலாம் இதன் மூலம் பயிருக்கு தீங்கு விளைவிக்கும் தாய் பூச்சிகளை கவர்ந்து அளிக்கலாம். கொஞ்சம் விலை அதிகம் என்றாலும் ஒருதடவை வாங்கினால் குறைந்தது 7 வருடங்களுக்கு பயன்தரும் . பழ தோட்டம் வைத்திருப்பவர்கள் வாங்கி வைக்கலாம் நல்ல பலன்தரும் 


கையால் எடுத்து அழித்தல்  (hand take )


இந்த முறை கொஞ்சம் நேரம் செலவாகும் என்றாலும் ஓரளவிற்கு பலன் தரக்கூடியது . உதாரணமா தக்காளி பயிர் இருக்கு , ஒரு சின்ன வாளி எடுத்து அதில்  



பாதியளவு தண்ணீர் எடுத்து தக்காளியில் தென்படுகிற புழுக்களை கையால் எடுத்து நீரில் போட்டு அழிக்கலாம் . மறக்காமல் கையுறை போட்டுக்கொள்ளுங்கள் . படத்தில் காட்டியுள்ள புழுக்களை தொட்டால் பிரச்சனை இல்லை அதுவே மேலே முட்கள் உள்ள புழுக்களை தொட்டால் அரிப்பு ஏற்படும் (கம்பளி பூச்சி வகை )


 

நீர் மேலாண்மை சரியானதருணத்தில் செய்யுங்கள் சரியான நேரத்திற்கு நீர் தரவில்லையென்றாலும் அல்லது தேவைக்கு மேல் நீர்கொடுத்தலும் பயிர்கள் சுலபமாக நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் . அதே போல் அறுவடையும் சரியான நேரத்தில் செய்தலே பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்திவிடலாம் 


Comments

Popular posts from this blog

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...