Ad Code

Ticker

6/recent/ticker-posts

பூச்சி , பூஞ்சை மற்றும் நோய் அறிகுறிகளின் வித்தியாசம் எப்படி இருக்கும்

What is the difference between insect, fungus and disease symptoms in a plant?




பூஞ்சை நோய் 

மரப்பயிர்களோ அல்லது  தாவரப்பயிர்களோ அதாவது காய்கறி மாதிரியான பயிர்களோ பூஞ்சை நோய் வந்தால் இலைகள் தொங்குகிற மாதிரியான அமைப்புகள் வரும் அதோட இருக்க தன்மை போய்விடும் , வளர்ச்சி மிகவும் குன்றி காணப்படும் , சாப்பாடு எடுத்துக்கொள்ளாது தண்ணீர் எடுத்துக்கொள்வது செடியோட பச்சை போய்விடும் . அதாவது ஓவுவொரு பயிருக்கும் ஒரு பச்சை இருக்கும் அதன் நிறம் மாறி மஞ்சளை நோக்கி போகும் அந்த மாதிரியான அமைப்பு இருந்தால் அது பூஞ்சை நோய் .

பூச்சி தாக்கம்


பூச்சி தாக்கம் என்பது பொதுவா இலைகளின் பின் பகுதியை தாக்கும் . இலையின் பின்னால் நரம்பு இருக்கும் அதை வெட்ட வெட்ட இல்லை சுருங்க ஆரம்பிக்கும் . இறுக்கமாக இருந்து  கைவிருச்சு வளர்வதை பின்னால் பூச்சிகள் கடிப்பதால் வளைந்து சுருங்கிவிடும் இது பூச்சி தாக்குதல் 


புழு என்பது இலைகளை கடித்து சாப்பிடும் அப்ப இலைகளில் ஒருபகுதி இல்லாமல் போய்விடும் 

நோய் தாக்குதல்


நோய் தாக்குதல் ஓன்று பாக்டீரியா நோய் தாக்குதல் அல்லது வைரஸ் நோய் தாக்குதல். பெரும்பாலும் நோய் தாக்குதல் என்பது பூச்சிகள் மூலமாக பரவும் . இலைகளின் நரம்புகள் மஞ்சள் தோன்றும் செடியின் நுனிப்பகுதி சிறுத்து சுருங்கி போகும் . இலைகளிலோ அல்லது காய்களிலோ பிரவுன் நிற புள்ளிகள் தோன்றி இல்லை மஞ்சளாக மாறி கொட்டிவிடும் 


நேமட்டோட்ஸ்,  பெரும்பாலும் இவை செடியின் வேர்பகுதிகளைத்தான் தாக்கும் நன்றாக உள்ள செடி திடிரென்று வாடி வதங்கி இறந்துவிடும் 


Post a Comment

0 Comments