Ad Code

Ticker

6/recent/ticker-posts

மாதுளை பழத்தில் கரும்புள்ளி எதனால் வருகிறது

pomegranate pest and disease management 




தமிழ் அதிகப்படியாக விற்க கூடிய பழங்களில்  ஓன்று இந்த மாதுளை . அந்த பழத்தில் கரும்புள்ளியோ அல்லது துளையோ இருந்தால் அது விற்பனையாகாது அதனால் அதை எப்படி கட்டுப்படுத்துவது என்று பார்ப்போம் .


இலை புள்ளி நோய் 

மாதுளையில் இலை புள்ளி நோய் அல்லது பழத்தில் புள்ளி நோய் இவை பொதுவாக பூஞ்சைகளால் உருவாகிறது இது எப்படி இருக்குமென்றால் படத்தில் இருப்பதுபோல் கருப்பாக இருக்கும்.


மேல் பகுதி நொழு நொழு போன்று இருக்கும்  சின்னதாக ஒரு துளை இருக்கும் அப்படி இருந்தால் அது பூசைகள் தாக்குதலுக்குள்ளானது . அதுவே துளை இருந்து கரும்படலமாக பரவினால் காய் துளைப்பானாக இருக்கும் (படத்தில் காண்க ).


பொதுவாக மாதுளை பழத்தில் விற்பனை பொருள் அதன் தோல்தான் , அதில் கரும்புள்ளி இல்லாமல் இருந்தால்தான் விற்க முடியும் . எனவே இதை கட்டுப்படுத்த 

பாலிதீன் பேப்பர்

பழத்தை மூடாமல் அப்படியே வைக்கிறீர்கள் என்றால் அதற்கு சரியான நேரத்தில், சரியான அளவில் நீங்கள்  பூஞ்சாண கொல்லிகளும் காய்ப்புழுவிற்கான தடுப்பு நடவெடிக்கை எடுக்கவேண்டும் அப்படி எடுத்தால் நீங்கள் ஓப்பனில் வைக்கலாம் . இல்லை பாதுகாப்பதில் சிரமம் இருந்தால் , பாலிதீன் பேப்பர் வைத்து கவர் பண்ணலாம் அல்லது நியூஸ் பேப்பர் , பேப்பர் , பட்டர் சீட் வைத்து மூடி இடையில் 3,4 ஓட்டைகள் போட்டு விடலாம் . இப்படி செய்வதால் காற்றின் மூலம் பரவும் பூஞ்சைகள் மற்றும் பூச்சி தாக்குதல்கள் குறையும் .


கருவாட்டு பொறி

இதில் சிரமம் இருந்தால் , மாதுளை பூவிலிருந்து ஒரு நெல்லிக்காய் சைசில் காய் இருக்கும்பொழுது பொதுவான தெளிப்புகளை மற்ற பயிர்களைவிட அதிகம் தெளிக்க வேண்டும் . முக்கியமாக சூடோமோனஸ் ட்ரைகோடெர்மா விரிடி இது இரண்டையும் பயன்படுத்தலாம் . மேலும் பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ சேர்க்கலாம் , இவைகளை தெளிப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும் . சூரிய ஒளியில் இயங்க கூடிய விளக்கு பொறி குறைந்தபச்சம் 4 வைக்கலாம். அடுத்ததாக கருவாட்டு பொறி வைப்பதும் மிக சிறந்த பலன்களை தரும் குறைந்தது ஒரு ஏக்கருக்கு 20 எண்ணிக்கையில் மரத்தோட பாதிஅளவில் கட்டி தொங்க விடலாம்.


G.M
Smart Vivasayi

E-Mail - imperialhorticulturetips@gmail.com


Post a Comment

0 Comments