The reason for the red sap to emerge from the trees
சிவப்பு நிற திரவம்
வெப்ப மண்டல பகுதிகளில் உள்ள எலுமிச்சை சாத்துக்குடி ஆரஞ்சு முருங்கை மா வேப்பமரம் போன்ற மரங்களில் பருவ காலத்தை அடுத்த வறட்சியான நேரங்களில் மரங்களில் நீண்ட வெட்டுப்பட்ட இடம் இடங்கள் அல்லது கவாத்து செய்த இடங்கள் அல்லது போன வருடம் நடந்த இடங்கள் அல்லது கிளைகள் ஒடிந்த இடங்கள் போன்ற வெட்டுப்பட்ட இடங்களில் அல்லது பட்டைகள் உரிந்து உள்ள இடங்களில் சிவப்பு நிற திரவம் உருவாகி வடிந்து மேலும் கோந்து போன்ற ஒரு அமைப்பு தேங்கி நிற்கும்.
பூஞ்சைகளால் ஏற்படும் - Caused by fungi
சுற்றுப்புற சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் வெட்டுப் பட்ட காயங்கள் அதிலிருந்து உருவாகும் பூஞ்சைகளால் ஏற்படும் இந்த விதமான பாதிப்பு கவனிக்காத நிலையில் மரங்களை முழுவதும் அழித்துவிடும். சிவப்பு நிற திரவம் ஒரு மரத்தின் தண்ணீரும் ஹார்மோன்களும் புரோட்டின் சத்துக்களும் சேர்ந்த கலவையாகும். அதுதான் ஒரு மரத்தின் சத்துப்பொருள். அது வெளியான பின்பு மரம் சத்து இல்லாத மரமாக மாறிவிடும்.
டிரைக்கோ டெர்மா விரிடி - Tricho derma viridis
இதனை சரிசெய்ய காயப்பட்ட இடங்களை மெல்லியதாக கத்திக்கொண்டு சுரண்டி எடுத்து விட்டு அந்த இடத்தை நன்கு காய வைக்க வேண்டும். முக்கியமாக இந்த வேலையை வெயில் நேரங்களில் செய்வது நல்லது. காயம்பட்ட இடங்களில் மீண்டும் இத்திரவம் வராது.
கவனம் மேற்கொள்ளவேண்டும்.
வெட்டுப்பட்ட இடங்களில் ஒரு லிட்டருக்கு 5 மில்லி டிரைக்கோ டெர்மா விரிடி கலந்து காலையும் மாலையும் தெளிக்கலாம்.

Comments
Post a Comment
Smart vivasayi