Ad Code

Ticker

6/recent/ticker-posts

மரவள்ளி கிழங்கில் வைரஸ் நோயை இயற்கை முறை கட்டுப்பாடு

Natural method control of viral disease in cassava


தவறான அல்லது நோய் தாக்கிய கட்டைகளை நடும்பொழுது  இந்த மாதிரியான பிரச்சனைகள் அதிகமாக வரும் . நோய் தாக்கிய கட்டைகளை முறைப்படுத்தாமலும் விதை நேர்த்தி பண்ணாமலும் நடுவதால் இந்த சிக்கல் அதிகமாக வரும்.

இலைப்புள்ளி


ஆறாவது மாதம் ஏழாவது மாதம் இலைகளில் பிரவுன் நிறத்தில் இலைப்புள்ளி மாதிரி ஆரம்பித்து வளரும் , அதே போல் நரம்பு அடிஇலைகளில் மஞ்சளாகி சுறுங்குகிறதுபோல் இருக்கும் . இந்த சமயத்தில் மரவள்ளி கிழங்கை தோண்டி வெட்டி பார்த்தால் படத்தில் இருப்பதுபோல நடுப்பகுதியில் பாதிக்கப்பட்டிருக்கும் .



பூச்சிகள் இருந்தால் 


இதை சரி செய்வதற்க்கு 5 வது மற்றும் 6வது மாதத்தில் மிகவும் கவனம் எடுத்துக்கொண்டு இலைக்கு கீழ படரக்கூடிய பூச்சிகள் இருந்தால் அதை தடுத்தாலே இந்த நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம் அது வராமல் இருப்பதற்க்கு எளிமையான வழி காதி சோப் 10 லிட்டருக்கு 50 கிராம் கலந்து தெளிக்கலாம் தெளித்த 7வது நாள் மறுபடியும் தெளிக்கலாம் . வேப்பிலை கரைசல், ஐந்திலை கஷாயம், பத்திலை கஷாயம் , அக்னி அஸ்திரம் ,கற்பூரக்கரைசல் இந்தமாதிரி தெளிப்பதால் பூச்சிகள் வராது , அப்படி வராமல் இருந்தாலே வைரஸ் கிருமிகள் வராது . வைரஸை வருமுன் காப்பது சிறந்தது வந்தபின் எதுவும் செய்ய முடியாது . 

Post a Comment

0 Comments