Ad Code

விளக்கு பொறி மஞ்சள் வண்ண ஒட்டும் பொறி எது சிறப்பானது

Lamp Trap Yellow Sticky Trap Which is better



விளக்கு பொறிகளையும், மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறிகளையும் ஒப்பிடும்பொழுது,  செயல்படும் தன்மையில் சிறப்பானது எந்த வகை பொறி 

மஞ்சள் நிற ஒட்டும் பொறி



மஞ்சள் நிற ஒட்டும் பொறி பறக்ககூடிய தாய் பூச்சிகளை புடிக்கும் வகையிலான அட்டைகள் , பூச்சிகள் பறக்கும் பாதைகளில் அது இருந்தால் ஓட்டும். அதனால்தான் , இதை ஏக்கருக்கு குறைந்தது 20தாவது  வைக்கிறோம் அப்படி வைக்கும் பொழுது ஏதாவது ஒரு அட்டையில் அது மாட்டும் இதை பயிரோட தலை உயரத்திற்கு வைக்கவேண்டும் இதனால் புழுவை உருவாக்கக்கூடிய பூச்சிகள் ஓரளவுக்கு கட்டுப்படும் 

விளக்கு பொறி



சூரிய ஒளியில் உள்ள விளக்கு பொறியில்  இரவு நேரத்தில் புற ஊதாக்கதிர்களை அடிப்படையாக வைத்து தீமை செய்யக்கூடிய பூச்சிகள் சாயந்தரம் 6 மணியிலிருந்து 10 மணிக்குள் இரை தேடி அலையும் போது விளக்கில் கவர்ந்து விழும் .

இந்த இரண்டிற்கும் உள்ள செயல்பாடுகள் 


இந்த இரண்டிற்கும் உள்ள செயல்பாடுகள் வேறு வேறு ஆகும் ஆனால் இரண்டுமே தேவை . ஒரு பொருளோட பிரச்னை  என்று பார்த்தால் ஓட்டும் அட்டை வாழ்நாள் கம்மிதான் கவனமும் எடுத்துக்கொள்ள வேண்டும் ஆனால் , குறைந்த விலை இரவு நேரத்தில் வராத பூச்சிகளை பிடிப்பதற்க்கு  முக்கியமானது . பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் பூச்சிகள் அதிகமாக பார்ப்பதால் விளக்கு பொறி நன்றாக  பலன் தரும் ஒருதடவை வாங்கினால் 6 முதல் 8 வருடத்துக்கு சிறப்பாக இருக்கும் . இரண்டில் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய விளக்கு பொறி கட்டாயமாக நம்மிடம் இருக்கவேண்டும் 

Post a Comment

0 Comments