இந்த நடவு முறையை பொறுத்தவரை ஒரு புரிதலை நாம தெரிஞ்சு வச்சுக்கணும் இஸ்ரேல் நாட்டுல பார்த்திங்கன்னா அடர் நடவு வச்சுருக்காங்க, அதுல என்ன பண்ணுவாங்கனா மாட்டு காதுல டாக் அடுச்சமாதிரி ஓவுவொரு மரத்துக்கும் நம்பர் போட்டு வச்சிருப்பாங்க
அந்த ஓவுவொரு நம்பருக்கும் என்ன கொடுத்துருக்கோம் நாள் வாரியா , வாரம் 14 நாட்களுக்கு மற்றும் மாதம் வாரியா என்ன கொடுத்தோம் அப்படிங்கிற கனக்க தினசரி கவனித்து அதுக்கு வேணுங்கிற இடு பொருளை கொடுத்துகொண்டே இருப்பார்கள் , தனி மரத்தை கவனிப்பாங்க .
இந்த அடர் நடவு முறையில் ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனியா என்ன கொடுக்க முடியுமோ அத கொடுங்க உதாரணமாக ஜீவாமிர்தம் கொடுத்தால் தனி மரத்திற்கு குறைஞ்சபச்சம் ஒரு பயிருக்கு 2 லிட்டர் ஊத்திவிடனும். மீன் அமிலம் , பஞ்சகாவியா , ஈ .எம் கரைசல் , போன்றவற்றை குறைந்தது 20 மில்லி நீரில் கலந்து வேரில் ஊற்றிவிடவேண்டும் . அசோஸ் பைரில்லும் கொடுத்தால் 100 கிராம் , பாஸ்போ பாக்ட்ரியா 50 கிராம் கொடுக்கலாம் . இதை 12 மாதமும் கொடுக்கவேண்டும் .
மண் மற்றும் நீர் பரிசோதனையும் கட்டாயம் செய்திருக்கவேண்டும் அதற்கேற்றாற்போல் அளவை கூட்டி குறைத்து கொடுக்கலாம். பூச்சி நோய் மேலாண்மை மா மரத்தில் கட்டாயம் செய்யவேண்டும்
0 Comments
Smart vivasayi